பூமியின் குரல்வளையை நெரிக்காதீர்..! கடல்களை காப்போம்..!
பூமி இருந்தால் மட்டுமே உயிரினங்கள் வாழமுடியும். இந்த பூமியைத் தொலைத்துவிட்டு எப்படி வாழப்போகிறோம்? பூமியைக் காக்க வேண்டாமா?
World Oceans Day2024
நமது பூமிக் கிரகத்திற்கும் அதில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் இதுவரை இல்லாத மிகப்பெரிய அச்சுறுத்தல்களை தற்போது நாம் எதிர்கொண்டு வருகிறோம். அது காலநிலை மாற்றத்தின் நெருக்கடி. ஆரோக்கியமான, சாதகமான காலநிலைக்கு நமக்கு ஆரோக்கியமான கடல் இருப்பது அவசியம் என்பது தெளிவான உண்மை.
World Oceans Day2024
ஆரோக்யமான கடல் தேவைக்கு நேர்மாறாக அரசாங்கம் மற்றும் பெருநிறுவனங்களின் செயல்பாடுகளும் கொள்கைகளும் உள்ளன. உலக அரசாங்கங்களிடம் இருந்தும் மற்றும் பெருநிறுவனத் தலைவர்களிடமிருந்தும் குறிப்பிடத்தக்க வலுவான உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச நடவடிக்கைகள் தேவை. அது அவசரமும் கூட.
பூமி இருந்தால் மட்டுமே மனிதன் உயிர்வாழ முடியும். பூமியைத் தொலைத்துவிட்டு மனிதன் எப்படி உயிர்வாழ முடியும்? பின் அந்த பூமியைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை செய்யவேண்டாமா? உலகத்த தலைவர்கள் இதற்கு ஒரு ஒருமித்த தீர்வினை உருவாக்கவேண்டும்.
World Oceans Day2024
உலகப் பெருங்கடல் தினம் 2024:
பூமியின் மேற்பரப்பில் கிட்டத்தட்ட எழுபது சதவீதத்தை கடல்கள் உள்ளடக்கி உள்ளன. கடல் நாம் உயிர்வாழ்வதற்கும் நமது இருப்புக்கும் முதன்மையானது. பெருங்கடல்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதில் பெரும் பங்கெடுக்கின்றன. கிட்டத்தட்ட உலகின் 50 சதவீத ஆக்ஸிஜனை கடல்கள் உற்பத்தி செய்கின்றன.
மேலும் பெரும்பாலான நீர்வாழ் உயிரினங்களுக்குத் தாயகமாக கடல்கள் உள்ளன. அவை பல்லுயிர்களின் ஆரோக்கியமான சமநிலையை ஏற்படுத்துவதற்கும், மனிதகுலத்தை நிலைநிறுத்துவதற்கும் அடிப்படையாக விளங்குகின்றன. இருப்பினும், காலப்போக்கில், மனித செயல்பாடுகளால் கடல்கள் மாசுபட்டுப்போய் சீரழிவை எதிர்கொண்டுள்ளன.
கடல் மட்டம் உயரும்
காலநிலை மாற்றத்தால் துருவங்களில் பனி உருகுதல் அதிகமாகியுள்ளன. பனி உருகல் அதிகமானால், கடல் மட்டங்களில் உயரம் அதிகரிக்கும். கடல்மட்டம் அதிகரித்தால் கடலோர நகரங்கள் மூழ்கும் நிலை ஏற்படலாம்.
World Oceans Day2024
உலகப் பெருங்கடல்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தாக்கங்களால் அவை நமக்கு ஏற்படுத்தும் எதிர்விளைவுகள் குறித்தும் நாம் விழிப்போடு இருக்கவேண்டும்.
அவ்வாறு உலக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும், உலகப் பெருங்கடல்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது உலகில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகப் பெருங்கடல்களின் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க மக்களை வலியுறுத்தவும் ஆகும். சிறப்பான நாளைக் கொண்டாடத் தயாராகும் போது, நாம் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் தரப்பட்டுள்ளன.
என்று உலக பெருங்கடல் தினம் அனுசரிக்கப்படுகிறது?
ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 8ம் தேதி அன்று உலகப் பெருங்கடல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, உலகப் பெருங்கடல் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
World Oceans Day2024
பெருங்கடல் தினத்தின் வரலாறு:
1992ம் ஆண்டில், ரியோ டி ஜெனிரோவில் நடந்த பூமியைக் காப்பாற்றுவதற்கான உச்சி மாநாட்டில் உலகப் பெருங்கடல் தினம் அனுசரிக்கப்படுத்தற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டது.2008ம் ஆண்டு டிசம்பர் 5, அன்று, ஐநா பொதுச் சபையில் ஜூன் 8ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் உலகப் பெருங்கடல் தினமாகக் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது.
கடல்களுக்கும் மனிதனுக்குமான தொடர்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த உலக பெருங்கடல் தின அனுசரிப்பு முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும், பெருங்கடல் விவகாரங்கள் மற்றும் கடல் சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஐநா அதற்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள்
இந்த ஆண்டு உலகப் பெருங்கடல் தினத்தின் கருப்பொருளாக - புதிய ஆழங்களை எழுப்புங்கள். அதாவது பெருங்கடல்களை காப்பதற்கான முயற்சிகளை ஆழப்படுத்துங்கள் என்பது பொருளாகும். மேலும் இந்த ஆண்டிற்கான கருப்பொருள் செயல்பாடு - நமது கடல் மற்றும் காலநிலைக்கு ஊக்குவிப்பு நடவடிக்கை.
அதாவது காலநிலை மாற்றத்திற்கு நமது பெருங்கடல்கள் மாசடைந்ததே காரணம். எனவே, கடல் மாசுபாட்டை குறைப்பதற்கு நாம் ஒத்துழைத்தல்.
World Oceans Day2024
உலக பெருங்கடல் தினத்தின் முக்கியத்துவம்
காலநிலை மாற்றம்தான் இந்த பூமியை மட்டுமல்ல இந்த பூமியின் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மிகப்பெரிய பேரழிவைத் தரக்கூடியதாகும். பூமி பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து இருந்தாலும் இதுவரை சந்தித்த மிகப்பெரிய நெருக்கடிகளில் ஒன்று காலநிலை மாற்றமும் மற்றும் புவி வெப்பமடைதலும் மட்டுமே.
உலகிற்கான சவால்
காலநிலை மாற்றமும் புவி வெப்பமடைதலும் உலகுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவால் ஆகும். இந்த நெருக்கடிகளைத் தாண்டி நாம் இந்த பூமியைக்காப்பற்றி ஆகவேண்டும். நமது செயல்பாடுகளில் நாம் கடல்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு இயற்கையின் ஆரோக்கியமான சமநிலையை மேம்படுத்துவதற்கு நாம் உறுதியுடன் இருக்கவேண்டும்.
பெருங்கடல்கள் உலக வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் பணிகளை திறம்பட செய்கின்றன. மேலும் உணவு மற்றும் மருந்து பொருட்களின் வளமான ஆதாரமாகவும் உள்ளது. பெருங்கடல்களை நாம் தவறாக பயன்படுத்தக்கூடாது. பெருங்கடலுக்குள் வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களையும் அவற்றின் நன்மைகளையும் அறிந்துகொள்வது அவசியம் ஆகும்.
World Oceans Day2024
கடல்களின் ஆரோக்கியத்தையும் அதன் வளத்தையும் மீட்டெடுப்பதில் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. நிலையான நமது நடவடிக்கைகள் மூலமாக, நாம் அதை சாத்தியமாக்கலாம். மேலும் சிறந்த உலகத்தை உருவாக்குவதில் நாம் இணைந்து பணியாற்றவேண்டும்.
ஐந்து பெருங்கடல்கள்
உலகில் மொத்தம் ஐந்து பெருங்கடல்கள் உள்ளன. ஒவ்வொரு கடலுக்கும் அதனதன் தனித்தன்மைகள் உள்ளன.. அது இருக்கும் இடத்தைப்பொறுத்து அது தனி முக்கியத்துவமும் பெறுகிறது. உலகப் பெருங்கடல் தினத்தில் உலகின் ஐந்து பெருங்கடல்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பசிபிக் பெருங்கடல்:
இந்த கடல் ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ளது. பசிபிக் பெருங்கடல் உலகின் மிகப்பெரியதும் மற்றும் ஆழமானக் கடலும் ஆகும். இது சுமார் 63 மில்லியன் சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடல்
வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையே அட்லாண்டிக் பெருங்கடல் அமைந்துள்ளது. இது சுமார் 106 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய பெருங்கடல் ஆகும்.
இந்தியப் பெருங்கடல்:
ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள இந்தப் பெருங்கடல் உலகின் மூன்றாவது பெரிய பெருங்கடல் ஆகும். இதன் பரப்பளவு தோராயமாக 70 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.
World Oceans Day2024
தெற்கு பெருங்கடல்
தெற்கு பெருங்கடல் 2000ம் ஆண்டில் சர்வதேச ஹைட்ரோகிராஃபிக் அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த கடல் அண்டார்டிகாவைச் சுற்றி அமைந்துள்ளது. அதன் பரப்பளவு சுமார் 20.8 மில்லியன் சதுர கிலோமீட்டர்.
ஆர்க்டிக் பெருங்கடல்
உலகின் ஐந்து பெருங்கடல்களில் மிகச் சிறியது இதுவே ஆகும். இது ஆர்க்டிக் பிராந்தியத்தில் வட துருவத்தைச் சுற்றி அமைந்துள்ளது. மேலும் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களை சூழ்ந்து உள்ளது. இந்த பெருங்கடலின் பரப்பளவு சுமார் 14 மில்லியன் சதுர கிலோமீட்டர்.