world hepatitis day 2023-இன்று (ஜூலை 28, 2023) உலக ஹெபடைடிஸ் தினம்..!

ஹெபடைடிஸ் என்றால் என்ன? எதனால் வருகிறது? அதை தடுக்கும் முறைகள் என்ன என்பது குறித்து அறியலாம் வாங்க.;

Update: 2023-07-28 05:57 GMT

world hepatitis day2023-உலக ஹெபடைடிஸ் தினம்  2023 

world hepatitis day 2023 news in tamil, world hepatitis day 2023, world hepatitis day, Hepatitis B, Hepatitis C, Hepatitis A, World Health Organization 

ஹெபடைடிஸ் வைரஸின் உலகளாவிய பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் ஒரே கருப்பொருளின் கீழ் உலகை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் தேதி உலக ஹெபடைடிஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.

2030 ஆம் ஆண்டளவில் வைரஸ் ஹெபடைடிஸை ஒரு பெரிய பொது சுகாதார பாதிப்பாக கருதி அதை அகற்றுவதற்கு இலக்கை நிர்ணயித்துள்ளதாக அயர்லாந்து உலக சுகாதார அமைப்புக்கு(WHO) உறுதியளித்துள்ளது.

ஹெபடைடிஸ் பி மற்றும் சி

நாள்பட்ட ஹெபடைடிஸ் பி மற்றும் சி ஆகியவை உயிருக்கு ஆபத்தான தொற்று நோய்கள் ஆகும். அவை கடுமையான கல்லீரல் சேதம், கல்லீரல் புற்றுநோய் மற்றும் முன்கூட்டிய மரணத்தை ஏற்படுத்தும். உலகளவில் 350 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஹெபடைடிஸ் பி அல்லது ஹெபடைடிஸ் சி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அயர்லாந்தில், 2022 ஆம் ஆண்டின் இறுதியில், கிட்டத்தட்ட 17,000 ஹெபடைடிஸ் சி மற்றும் 13,000 க்கும் மேற்பட்ட ஹெபடைடிஸ் பி பாதிப்புகள் இருந்ததாக HSE சுகாதார பாதுகாப்பு கண்காணிப்பு மையத்திற்கு (HPSC) அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவிட்-19 தொற்றுநோய்களின் போது ஹெபடைடிஸ் பி மற்றும் சி அறிவிப்புகள் குறைந்துவிட்டன. ஆனால் 2022 இல் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு மீண்டும் திரும்பியது. 2022 ஆம் ஆண்டில், 480 ஹெபடைடிஸ் சி மற்றும் 515 ஹெபடைடிஸ் பி பாதிப்புகள் பதிவாகிஇருந்தன.

அயர்லாந்து போன்ற வளர்ந்த நாடுகளில், ஹெபடைடிஸ் சி பொதுவாக மருந்துகளை உட்செலுத்தும்போது அசுத்தமான உபகரணங்களைப் பயன்படுத்தியதாலோ அல்லது கடந்த காலங்களில் கட்டுப்பாடுகள் இல்லாமல் இரத்தம் அல்லது இரத்தப் பொருட்கள் பெறுவதன் மூலமோ பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பாலியல் தொழிலில் ஈடுபடும் தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுவதும் ஏற்படலாம். ஆனால் அவை குறைவாகவே காணப்படுகின்றன. கடந்த 2007 மற்றும் 2022 க்கு இடையில் அயர்லாந்தில் அறிவிக்கப்பட்ட பாதிப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு மருந்துகளை உட்செலுத்துவதன் மூலமும், 11% பாதிப்புகள் உள் நாட்டில் பிறந்தவர்கள் (ஆபத்து காரணி அறிவிக்கப்படவில்லை), 6% பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வாங்கியவர்கள் மற்றும் 3% பேர் இரத்தம் அல்லது இரத்தப் பொருட்களைப் பெற்றதன் மூலம் நோய்த்தாக்கம் அடைந்தவர்கள் ஆவர்.


ஹெபடைடிஸ் 'பி'க்கான பொதுவான வழிகள் பிறக்கும் போது தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுதல், பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் மருந்துகளை உட்செலுத்தும்போது ஊசிகளைப் பகிர்வது. சமீபத்திய ஆண்டுகளில், அயர்லாந்தில் ஹெபடைடிஸ் பி நோயால் அறிவிக்கப்பட்டவர்களில் 95% க்கும் அதிகமானோர் நாள்பட்ட நோய்த்தொற்றுடையவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் ஹெபடைடிஸ் பி அதிகமாக உள்ள உள்நாட்டில் பிறந்தவர்கள். மேலும் அவர்களுக்கு பிறக்கும்போதே அல்லது குழந்தை பருவத்திலேயே பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். அயர்லாந்தில் ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படும் ஹெபடைடிஸ் பி (புதிய தொற்றுகள்) தீவிர பாதிப்புகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 16 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. பெரும்பாலானவை பாலியல் ரீதியாக வாங்கியவை.

தேசிய ஹெபடைடிஸ் சி சிகிச்சை திட்டம்

ஒரு தேசிய ஹெபடைடிஸ் சி சிகிச்சை திட்டம் (NHCTP) 2015 இல் HSE ஆல் அயர்லாந்தில் ஹெபடைடிஸ் C உடன் வாழும் அனைத்து மக்களுக்கும் சிகிச்சை அளிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. 2015 முதல் 7,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் வெற்றிகரமாக சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஹெபடைடிஸ் பி தடுப்பூசி

ஹெபடைடிஸ் 'பி'க்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி உள்ளது. அயர்லாந்தில் இது ஜூலை 1, 2008 முதல் பிறந்த குழந்தைகளுக்கு அக்டோபர் 2008 இல் முதன்மை குழந்தை பருவ நோய்த்தடுப்பு அட்டவணையில் சேர்க்கப்பட்டது. ஹெபடைடிஸ் பி நோய்த்தடுப்பு ஆபத்தான நிலைகளுக்கு , ஹெபடைடிஸ் பி பாசிட்டிவ் தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. அதாவது பாதிப்புகளில் வேறுவகையாக மற்றும் பாலியல் தொடர்புகள் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கபப்டுகிறது.

ஹெபடைடிஸ் வைரஸ் நீக்கக்கூடியது 

ஹெபடைடிஸ் பி யை முற்றிலும் தடுப்பதற்கு பயனுள்ள தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் மற்றும் ஹெபடைடிஸ் சிக்கு மிகவும் பயனுள்ள குணப்படுத்தும் சிகிச்சைகள் கிடைக்கின்றன. அதன் மூலம், வைரஸ் ஹெபடைடிஸை அகற்றுவது இப்போது சாத்தியமான ஒன்றாகும்.

இருப்பினும், நாள்பட்ட ஹெபடைடிஸ் பி மற்றும் சி நோய்த்தொற்று, நோய்த்தொற்றுக்குப் பிறகு பல ஆண்டுகள் அல்லது பல தசாப்தங்களுக்கு அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறிகளாக இருக்கலாம். அதாவது இது ஒருவருக்கு கண்டறியப்படாமலேயே, சிலருக்கு ஏற்கனவே கணிசமான கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். மேலும் தற்செயலாக மற்றவர்களுக்கும் தொற்று ஏற்படலாம்.

2022 இல் அயர்லாந்தில் 220,000 க்கும் மேற்பட்ட ஹெபடைடிஸ் பி மற்றும் 200,000 க்கும் மேற்பட்ட ஹெபடைடிஸ் சி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. விரிவான சோதனைகள் இருந்தபோதிலும் சில கண்டறியப்படாத பாதிப்புகள் இருக்கலாம். தொடர்ச்சியாக பாதுகாப்பு மற்றும் தொடர் பராமரிப்பை தக்கவைத்துக்கொள்வதன் முயற்சிகள் மூலம், ஹெபடைடிஸ் பி மற்றும் சி இரண்டு நோய்த்தொற்றுகளையும் 2030ம் ஆண்டளவில் பெருமளவு அயர்லாந்தில் குறைத்துவிட முடியும். அதனால் ஒரு பெரிய பொது சுகாதார பாதிப்பாக நாட்டை அச்சுறுத்தாது என்று அயர்லாந்து உறுதியளித்துள்ளது.

ஹெபடைடிஸ் ஏ

ஹெபடைடிஸ் ஏ வைரஸால் ஏற்படும் மிகவும் தொற்றக்கூடிய கல்லீரல் தொற்று இதுவாகும். ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடியது. இது அசுத்தமான உணவு அல்லது தண்ணீர் அல்லது பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது. இந்த பாதிப்பு இருந்தால் சோர்வு, குமட்டல், வயிற்று வலி, பசியின்மை மற்றும் குறைந்த அளவிலான காய்ச்சல் ஆகியவை அறிகுறிகள் இருக்கும். ஓரிரு மாதங்களில் நிலைமை தானாகவே சரியாகிவிடும். ஓய்வு மற்றும் போதுமான நீரேற்றம் உதவும்.


இந்தியாவில் ஹெபடைடிஸ்

இந்தியாவில், சமீபத்திய மதிப்பீடுகளின்படி, 40 மில்லியன் மக்கள் ஹெபடைடிஸ் பி நோயால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 முதல் 12 மில்லியன் மக்கள் ஹெபடைடிஸ் சி நோயால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஹெபடைடிஸ் நோய்க்கு, ஹெபடைடிஸின் மிக முக்கியமான காரணம் HEV ஆகும். இருப்பினும் குழந்தைகளிடையே HAV மிகவும் பொதுவானதாக இருக்கிறது.

உலக அளவில் ஹெபடைடிஸ்

2022ம் ஆண்டின் கைக்கெடுப்புப்படி உலகளவில் 354 மில்லியன் மக்கள் இன்னும் இந்த உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றுடன் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு 30 வினாடிகளுக்கும் குறைந்தது ஒருவர் ஹெபடைடிஸ் வைரஸால் இறக்கிறார். இது ஆண்டுக்கு 1 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் ஆகும். எச்.ஐ.வி மற்றும் மலேரியாவால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையை விட இது அதிகமான எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெபடைடிஸ் 2023 -ன் கருப்பொருள்

"ஒரு வாழ்க்கை, ஒரு கல்லீரல்" என்ற கருப்பொருளின் கீழ், இந்த ஆண்டு உலக ஹெபடைடிஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆரோக்யமான வாழ்க்கைக்கு கல்லீரலின் முக்கியத்துவத்தையும், கல்லீரல் ஆரோக்யத்தை மேம்படுத்தவும், கல்லீரல் நோயைத் தடுக்கவும் ஹெபடைடிஸ் வைரஸ் தடுப்பு, சோதனை மற்றும் சிகிச்சையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்கும் விதமாக உள்ளது. மேலும் 2030ம் ஆண்டுக்குள் ஹெபடைடிஸ் பாதிப்புகளை ஒழிக்க இலக்குகளை அடைய உறுதி எடுக்கவேண்டும்.

Tags:    

Similar News