பெண் விமானி கழிப்பறை சென்றதால் கோபத்தில் விமானிகளின் அறையை பூட்டிய கேப்டன்..!

கழிப்பறை சென்றுவந்த பெண் விமானியை விமானிகளின் அறைக்குள் நுழையவிடாமல் அறையைப் பூட்டிய ஆண் விமானி, பெண் விமானியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.;

Update: 2024-10-17 05:31 GMT

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் -கோப்பு படம் 

ஒரு விமானி தன்னுடன் பணிபுரியும் பெண் துணை விமானி கழிப்பறைக்குச் சென்றுவிட்டு மீண்டும் விமானி அறைக்குள் நுழையாதவாறு காக்பிட் என்று அழைக்கப்படும் விமானிகளின் அறையைபூட்டிவிட்டார். இவ்வாறு ஒரு பெண் விமானியிடம் அற்பமான செயலை செய்து அவர் கேப்டன் என்கிற அவரது மரியாதையை இழக்கச் செய்துள்ளார்.

கடந்த (14ம் தேதி)திங்கட்கிழமை சிட்னியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 10 மணி நேர பயணத்தின் போது ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தைத் தொடர்ந்து பெண் விமானியை வெளியே வைத்து கேப்டன் பூட்டியுள்ளார்.

நிலையான இயக்க நடைமுறைகளின்படி ஒரு விமானி இல்லாத சமயத்தில் இன்னொரு விமானி விமான இயக்கத்தை கவனித்துக்கொள்ளவேண்டும். ஆனால் பெண் விமானி கழிப்பறை சென்ற காரணத்தைக்கூறியதுடன் அவர் இல்லாத நேரத்தில் மாற்றாக ஒருவரை ஏற்பாடு செய்ய பெண் அதிகாரி தவறியதால் கேப்டன் கோபமடைந்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த பெண் விமானி கழிப்பறைக்குச் செல்வதற்கு முன்னர் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அவ்வாறு பெண் விமானி கழிப்பறைக்குச் சென்று மீண்டும் விமானிகளின் அறைக்கு திரும்பியபோது கேப்டன் கதவை லாக் செய்துவிட்டார். அதனால் பெண் விமானிக்கு விமானிகளின் அறைக்குள் செல்லமுடியவில்லை.

கேப்டன் கதவைத் திறக்க மறுத்ததால் விமானம் வானுச்சியில் பறந்துகொண்டிருக்கும் வேளையில் இருவருக்குமிடையே பதட்டமான மோதல் ஏற்பட்டது. ஒரு மூத்த விமானப் பணிப்பெண் அந்த சண்டையை முடிவுக்குக் கொண்டு வர தலையிட்டார். விமானத்தின் இன்டர்போன் சிஸ்டம் மூலமாக அந்த மூத்த விமானப்பணிப் பெண்  கேப்டனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். துணை விமானியை மீண்டும் காக்பிட்டுக்குள் அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

விமானத்தில் 297 பயணிகள் இருந்தனர். பின்னர் அந்த விமானம் அதன் இலக்கில் பறந்து பாதுகாப்பாக தரையிறங்கியது.

விமானி அறைக்குள் இருக்க வேண்டிய விமானிகளின் எண்ணிக்கை குறித்து வெவ்வேறு விமான நிறுவனங்கள் வெவ்வேறு விதிகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், அவர்களில் இருவர் எல்லா நேரங்களிலும் காக்பிட்டில் இருக்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் கட்டளையிடுகிறார்கள். இது ஒரு சில சந்தர்ப்பங்களில் தனிமையாக ஒரு விமானியின் கட்டுப்பாட்டில் விடப்பட்டபோது பல பாதுகாப்புக் கவலைகளுக்கு வழிவகுத்த சம்பவங்கள் உள்ளன.

இதே வழியில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானி அறைக்குள் எந்த நேரத்திலும் குறைந்தது இரண்டு பேராவது இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

இந்த சம்பவத்தை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 21 அன்று சிட்னியில் இருந்து கொழும்புக்கு UL607 விமானத்தில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு கேப்டன் தரையிறக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் அறிக்கையை விமான நிறுவனம் வெளியிட்டது.

"விமான நிறுவனம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைப்புடன் விசாரணை மேற்கொண்டுள்ளளது.மேலும் விசாரணையின் முடிவு நிலுவையில் உள்ளது. கேப்டன் உடனான விசாரணை இன்னும் முடியவில்லை." என்று விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"பாதுகாப்பு மற்றும் அனைத்து ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கும் இணங்குதல் என்பது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முதன்மையான முன்னுரிமைகளாக உள்ளன."என்றும் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News