அணு ஆயுதங்களை கையில் எடுப்போம்! நேட்டோ படைகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை!

நேட்டோ படைகள் களம் இறங்கினால், அணு ஆயுதங்களை கையில் எடுப்போம் என ரஷ்யா அறிவித்துள்ளது.;

Update: 2024-05-11 12:30 GMT

ரஷ்யா- உக்ரைன் போர் இரண்டாண்டுகளை கடந்தும் நடந்து வருகிறது. தொடக்கத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் கொடுத்த ஆயுதங்களை வைத்து உக்ரைன் சமாளித்து வந்தது. ரஷ்யாவின் தொடர்ந்த தாக்குதல்களால் உக்ரையின் படைபலம் பெரும் அளவில் அழிக்கப்பட்டு விட்டது. உக்ரைன் நாட்டு வீரர்கள் மனஉறுதி குழைந்து விட்டது. பல இடங்களில் உக்ரைன் நாட்டு வீரர்கள் பின்வாங்கி வருகின்றனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தேடப்படும் குற்றவாளியாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதே நிலை நீடித்தால், ஒரிரு மாதங்களில் உக்ரைன் முழுமையாக வீழ்ந்து விடும். ஒற்றை ஆளாக நின்று கொண்டிருக்கும் ரஷ்யா, ஒட்டுமொத்த நேட்டோ நாடுகளையும் போரில் சிதறடித்து விட்டது.

இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் 5வது முறையாக அதிபர் பதவியேற்றுள்ளார். பதவியேற்றதும் அவர் நேட்டோ நாடுகளை கடுமையாக எச்சரித்தார். நேட்டோ நாடுகளின் ஆயுதங்களையே நாங்கள் ஏற்கவில்லை. இந்நிலையில் படைகளை இறக்கினால் நிச்சயம் அணுஆயுதங்களை கையில் எடுப்போம் என அறிவித்துள்ளார். ரஷ்யாவை தாக்க நினைத்த நெப்போலியன், ஹிட்லர் ஆகியோருக்கு ஏற்பட்ட பேரழிவு தான் இம்முறையும் நேட்டோ நாடுகளுக்கு ஏற்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

நேட்டோ நாடுகள் ரஷ்யாவை ஒரு ஈராக்போன்றோ, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்றோ மாற்ற முடியாது. நாங்கள் உலகின் அதி சூப்பர் பவர் வல்லரசு எனவும் அறிவித்துள்ளார்.

அதையும் மீறி இங்கிலாந்து தனது நாட்டு படைகளை உக்ரைனுக்கு ஆதரவாக அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் மூளக்காரணமே இங்கிலாந்து நாட்டின் ஆதிக்கம் தான். அந்த நாடு தேவையில்லாமல் தலையிட்டதே இரண்டு உலகப்போர்களுக்கு காரணமாகி விட்டது. இப்போது மூன்றாவது உலகப்போர் மூளும் நிலைக்கு இங்கிலாந்து உலகை தள்ளிச்செல்கிறது என பகிரங்கமாக கண்டனங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் 70 சதவீதம் அமெரிக்கர்கள் உக்ரைன் போரில் அந்த நாடு தலையிடுவதை விரும்பவில்லை. அதையும் மீறி உக்ரைனுக்கு படைகளை அனுப்ப ஜோபினை் முடிவு செய்துள்ளார். இப்படி அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகள் படைகளை இறக்கினால், எங்களின் அணுஆயுதங்களுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும் என ரஷ்ய அதிபர் புடீன் மீண்டும் அறிவித்துள்ளார். இந்த சூழ்நிலையால் ஒட்டுமொத்த உலகமும் கலங்கிப்போய் உள்ளது.

எப்படியாவது மூன்றாவது உலகப்போர் அபாயத்தில் இருந்து உலகநாடுகளை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Tags:    

Similar News