Israel Hamas War 2023-பாலஸ்தீனத்தின் துயரத்துக்கு இஸ்ரேல் மட்டுமா காரணம்? ஒரு விரிவான பார்வை..!
பாலஸ்தீன விவகாரத்தில் ஒரு வலிமிக்க உண்மையினையும் நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். அவர்களின் இந்த நிலைக்கு இஸ்ரேல் மட்டுமே காரணமாகிவிட முடியுமா?;
Who is the sole cause for palestine's misery?, Israel-Paletine War, Israel Hamas War 2023, Israel Hamas War News, Israel Hamas War Update News
பாலஸ்தீன மக்களின் உண்மையான துயரத்துக்கு இஸ்ரேல் மட்டும் காரணமல்ல. சக இஸ்லாமிய நாடுகளும் பெரும் வகையில் காரணம் என்பதை வரலாற்றில் இருந்து நாம் அனுமானிக்கலாம். பாலஸ்தீனத்தை சுற்றிலும் உள்ள நாடுகள் பாலஸ்தீன மக்களின் கோரிக்கைக்காக பொங்குவார்கள். பாலஸ்தீன போராளிகளுக்கு அக்கம் பக்கம் நாடுகளில் இடமும் காவலும் வழங்குவார்கள். ஆயுதம் உள்பட எல்லாவற்றுக்கும் அள்ளி அள்ளிக் கொடுப்பார்கள். ஆனால் அம்மக்கள் பாதிக்கப்படும் போது அவரவர்கள் போக்கில் இருப்பார்கள்.
போரைத் தூண்டி விட மட்டும் உதவுவார்களே தவிர, மோதல் வந்து விட்டால் சத்தமே காட்டாமல் ஒதுங்கி இருந்து விடுவார்கள். இது பல காலமாக நடக்கும் ஒரு விஷயம். பாலஸ்தீனின் மேற்கு கரையில் (West Bank ) மோதல் வந்தால் அம்மக்கள் ஜோர்டானுக்கும் இதர நாடுகளுக்கும் தான் தெறித்து ஓடியாக வேண்டும். காசாவில் சிக்கல் என்றால் எகிப்துக்குத் தான் ஓட வேண்டும்.
ஆனால் அவர்களை சம்பந்தபட்ட நாடுகள் ஏற்குமா என்றால் ஏற்கவே மாட்டார்கள். அது தான் உண்மையான விவகாரம். ஐரோப்பாவோ ஆப்ரிக்காவோ தங்கள் மதம் தங்கள் இனம் என்றாலும் அடுத்த நாட்டுக்காரர்களை விலக்கித்தான் வைப்பார்கள். இந்த கொடுமைக்கு பாலஸ்தீன அபலை மக்களும் விதிவிலக்கு அல்ல என்பதே வருத்தமான உண்மை.
பாலஸ்தீன மக்கள் பலமுறை தாக்கப்பட்டு விரட்டப்பட்டார்கள். எந்த நாடும் அவர்களை முழுக்க அனுமதித்து அரவணைத்ததுமில்லை. தங்கள் சொந்த மக்கள் போல் நடத்தியதுமில்லை. இந்தக் கொடுமை எல்லா போர்க் காலங்களிலும் நடந்து வருகிறது.
Israel Hamas War 2023
இப்போதும் கூட காசா மக்கள் உயிர் பிழைக்க எகிப்து நோக்கி ஓடுகின்றார்கள். ஆனால் எகிப்து தன் எல்லையில் பெரும் சுவர் எழுப்பி இறுக்கமாக அடைத்து நிற்கின்றது. இந்த சுவரை திறக்கவில்லை. பல்லாயிரக் கணக்கான மக்கள் எல்லையில் காத்து நிற்கும் போது, உணவுக்கும் குடிநீருக்கும் குறைந்தபட்சம் உயிர்பாதுகாப்புக்கும் குடும்பம் குடும்பமாய் தவிக்கும் போதும் எகிப்து எல்லையினை திறக்கவில்லை.
காரணம் அகதிகளை ஏற்பது நாட்டிற்கு பெரும் செலவு. இன்னும் அகதிகளால் கூடுதல் சிக்கல் வரலாம். அகதிகளில் ஹமாஸ் தீவிரவாதிகளும் ஊடுருவி வரலாம் என பல கணக்குகள் இதில் உண்டு. இது தான் களத்தின் உண்மை நிலையே தவிர அகதிகளை ஏற்று விட்டால் காசாவினை இஸ்ரேல் பிடித்து விடும் என்பதெல்லாம் வாதமல்ல.
இங்கு சற்று ஆழ்ந்து கவனியுங்கள், ஒரே இனம். ஒரே மதம் என்ற போதும் எகிப்து தன்நாட்டு எல்லையினை திறக்க மறுக்கின்றது. இவ்வளவுக்கும் கோடிக்கணக்கான அகதிகள் வரப் போவதில்லை. மிஞ்சி போனால் 2.5 லட்சம் பேரை தாண்டாது. இந்த சிறிய எண்ணிக்கையினை கூட ஏற்க சக மக்கள், சக மதத்தவர் என அவர்கள் தயாராக இல்லை.
Israel Hamas War 2023
"தாயும் பிள்ளையும் ஆன போதிலும் வாயும் வயிறும் வேறடா" என்ற நிலைப் பாட்டில் தான் பாலஸ்தீனத்தை சுற்றியுள்ள எல்லா நாடுகளின் நிலைப்பாடும் உள்ளன. பாலஸ்தீன மக்கள் அகதிகளாக மாறி அலை மோதுகின்றார்கள். அப்படி ஒரு நிலையினை உருவாக்கிய ஹமாஸ் இயக்கமும் அமைதியாகி மக்களை கண்டுகொள்ளாமல் அவர்கள் போக்கில் இருக்கின்றார்கள்.
ஹமாஸை தூண்டி விட்ட ஈரான் தன் குடிமக்களை கவனமாக காக்கின்றது. ஆனால் காசா மக்கள் பற்றி கவலைப்படவே இல்லை. இதே நிலைப்பாடுதான் பலநாடுகளுக்கும் உள்ளது. எகிப்துக்கும் அந்த மனிதநேயமில்லை. தூண்டிவிட வரும் யாரும் ஆபத்துக்கு அப்பாவிகளுக்கு உதவுவது இல்லை.
இதிலிருந்து படிக்கவேண்டிய பாடம் ஒன்று தான். கவனியுங்கள். சில ஆயிரம் சிரிய அகதிகளை ஏற்க முடியாமல் ஐரோப்பா கதவை மூடியது. படகில் வரும் சிலநூறு ஆப்ரிக்கர்களை கூட ஏற்காமல் கடலில் அவர்கள் சாக காரணமாகின்றது, ஐரோப்பா. ஆஸ்திரேலிய நிலையும் அப்படியே. மெக்ஸிகோ அகதிகளை சுவர் கட்டித் தடுக்கின்றது, அமெரிக்கா. உலகில் எல்லா நாடுகளும் பிற நாட்டு மக்களை ஏற்க மறுக்கின்றனர். இந்த சிக்கலில் தான் பாலஸ்தீன மக்கள் தற்போது சிக்கித் தவிக்கின்றனர்.
ஆனால் இந்தியாவின் வரலாறு என்ன? அதன் பெருமை என்ன?
அது ஆயிரம் ஆண்டுகளாக எல்லோரையும் தன்னில் ஏற்றது. அங்கே துருக்கியர், ஆப்ரிக்கர், அராபியர், பார்சி, யூதர், பவுத்தர், சமணர், ஐரோப்பியர் என யார் யாரோ வந்தார்கள் தேசம் ஏற்றது. 1950க்கு பின்னும் அது திபெத் அகதிகளை ஏற்றது. இலங்கை மக்களை ஏற்றது. வங்க தேச மக்களை என்றும் ஏற்றது.
Israel Hamas War 2023
இன்றும் ஏற்று கொண்டே இருக்கின்றது. எப்படி இந்தியாவினால் மட்டும் அது முடிகின்றது?. அதற்கு ஒரே காரணம் அது ஓர் இந்தியாவின் தாத்பரியம் புகழ் மிக்கது. அளவில்லா மானிட நேயம் கொண்டது. "லோகா சமஸ்தா சுகினோ பவந்து’’ (எல்லா உலக மக்களும் நன்றாக இருக் கட்டும்). சர்வே ஜனா சுகினோ பவந்து (எல்லா மக்களும் நன்றாக இருக்கட்டும்) எனும் அடிப்படை கொண்டது.
இங்கும் ஆயிரமாண்டு பெரும் போர் நடந்தது. பெரும் விடுதலைப்போர்கள் நடந்தது. ஆனால் அகதிகள் என ஒருவரைக்கூட இத்தேசம் வெளியே தள்ளியதும் இல்லை. உலகெல்லாம் அகதியாக அலையவிட்டதும் இல்லை. இதுவே நமது பெருமை.