மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம்..!

ஹமாஸ் இயக்க தலைவர் இஸ்மாயில் ஹனி கொல்லப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதட்டம் அதிரித்துள்ளது.;

Update: 2024-08-03 05:56 GMT

கோப்பு படம் 

ஈரானில் உள்ள தனது நாட்டின் அனைத்து குடிமக்களையும் உடனடியாக வெளியேற பிரான்ஸ் உத்தரவிட்டுள்ளது.

கிரீஸ் நாட்டில் உள்ள இஸ்ரேலிய சொத்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையால் நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு நிலையை அறிவித்துள்ளது கிரீஸ் அரசு.

மத்திய கிழக்கில் அமெரிக்க படைகளின் தயார்நிலை மற்றும் தேவையான ராணுவ சொத்துக்கள் இருப்பில் உள்ளதை பென்டகன் உறுதி செய்து வருவதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு துருக்கி, பாகிஸ்தானில் அரசு துக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

இஸ்ரேலில் உள்ள துருக்கி நாட்டு தூதரக அதிகாரிகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற இஸ்ரேலிய பாதுக்காப்புத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஈரான், காசா, லெபனான் மற்றும் யேமனில் இருந்து வரும் நாட்களில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் கூடுதல் போர் விமானங்களை மத்திய கிழக்கிற்கு அனுப்ப அமெரிக்கா தயாராகி வருவதாக Newyork Times செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமான சேவையை இந்தியா ரத்து செய்துள்ளது கூர்மையாக கவனிக்கப்படும் விஷயமாக மாறி உள்ளது.

Tags:    

Similar News