கனடா 55 வயதிற்குட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை இடைநிறுத்துகிறது, கனடா நாட்டில் சுகாதாரத்தை நிர்வகிக்கும் மாகாணங்களில் திங்கட்கிழமை முதல் இடைநீக்கம் செய்வதாக அறிவித்தன.55 வயதிற்கு உட்பட்ட பெரியவர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசிகளை வழங்குவதன் நன்மை குறித்து நிச்சயமற்ற தன்மை உள்ளது என்று நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் டாக்டர் ஷெல்லி டீக்ஸ் கூறினார்.
55 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஆக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா கோவிட் தடுப்பூசி பயன்படுத்துவதை கனடா திங்களன்று நிறுத்தியது.இது இரத்த உறைவு தொடர்பான சர்ச்சைகளால் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.தேசிய ஆலோசனைக் குழுவால் பாதுகாப்பு காரணங்களுக்காக இதற்கான இடைநிறுத்தம் பரிந்துரைக்கப்பட்டது.
மேலும் இரத்தக் கட்டிகளின் ஆபத்து இப்போது 100,000 ல் ஒன்று வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.