உக்ரைன்- ரஷ்யா போரை நிறுத்த இந்தியாவின் உதவி கேட்ட அமெரிக்கா..!

உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த இந்தியா உதவி செய்ய வேண்டும் என அமெரிக்கா வெளிப்படையாக கேட்டுள்ளது.;

Update: 2024-09-26 07:18 GMT

"நட்பு நாடு மட்டுமல்ல மோடி. நீங்களும் எனக்கு நண்பர்தான்." என்று கூறுகிறாரோ அமெரிக்க அதிபர் ஜோ பிடன் 

அமெரிக்காவில் மோடியின் சுற்றுப்பயணம் பெரும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றது, குவாட் மாநாட்டினை தொடர்ந்து அமெரிக்க வாழ் இந்தியரை சந்தித்து வரும் மோடி உலக மக்களையும் கவர்ந்து வருகின்றார்.

அமெரிக்க அதிபருடனான தனிப்பட்ட பேச்சுவார்த்தையில் மோடியிடம் பல உறுதிகளை அமெரிக்கா வழங்கியது. பதிலுக்கு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உதவவேண்டுமென அமெரிக்கா உதவி கேட்டு இருக்கின்றது. ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவினை நிரந்தர உறுப்பினராக்க உதவி செய்வதாகவும் அமெரிக்கா வாக்குறுதி கொடுத்துள்ளது.

தொடர்ந்து விண்வெளி முதல் பல விஷயங்களில் இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. மகா முக்கியமாக ஆளில்லா தொழில்நுட்பம் முதல் செயற்கை நுண்ணறிவு , மின்ணணு செல்கள் எனப்படும் சிப் தயாரிப்பு ஆகியவைகளில் கூட்டாக கவனம் செலுத்த இருநாடுகளும் இணங்கியிருக்கின்றன.

மின்னணு உலகில் இந்த சிப் என்பது முக்கியமானது. ஒவ்வொரு தலைமுறைக்கும் இவை புதிது புதிதாக உருமாறும் போது தான் உலகம் மாறும். விஞ்ஞான மாற்றம் வரும் கணிணி வரை அப்படித்தான். இனி எதிர்காலத்தில் தயாரிக்கப்படும் சிப்புகள் இன்னும் வலுவாக நுணுக்கமாக வேண்டும். அப்போது தான் ஆளில்லா தொழில் நுட்பம், செயற்கை அறிவு நுட்பமெலலம் துல்லியமாய் இயங்கும். இது தான் ராணுவம் , விண்வெளி, இதர நுணுக்க விவேக கருவிகளில்லெல்லாம் கைகொடுக்கும்.

சீனாவிடம் இருந்து இந்த ஆலைகளை அமெரிக்கா தட்டி இந்தியாவிடம் கொடுத்திருக்கிறது. இந்தியாவின் முதல் செமி கண்டக்டர் தொழிற்சாலை சிலமாதம் முன் அசாமில் அமைக்கப்பட்டது, தொடர்ந்து அது நாடெல்லாம் விரிவாக்கப்படுகின்றது. மோடி அதை சுட்டிகாட்டி "எதிர்காலத்தில் இந்திய சிப்புகள் அமெரிக்காவில் பயன்படுத்தபடும்" என்றார். அமெரிக்காவில் என்றால் உலகம் முழுக்க என அர்த்தமாகும். அதை சூசகமாக சுட்டிக் காட்டினார் மோடி.

மோடியின் பேச்சினில் கவனிக்கபட்ட விஷயம் இந்தியா எந்த அளவு மகா நுணுக்கமான விஷயங்களில் முன்னேறிருப்பது என்பது தான். "இந்தியா இப்போது வாய்ப்புகளின் பூமி. அது இனி வாய்ப்புகளுக்காக காத்திருக்காது, அது வாய்ப்புகளை உருவாக்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் வாய்ப்புகளை உருவாக்கி தரும் களமாக இந்தியா மாறியுள்ளது.

கொரொனா மருந்தை தொடர்ந்து கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியினை கண்டறிந்துள்ளோம். நோயற்ற உலகை காண பாரதம் விரும்புகின்றது. அப்படியே போரற்ற உலகையும் காணவே பாரதம் பாடுபடுகின்றது. உலகமெல்லாம் ஒரே குடும்பம் என்பதே எங்கள் கொள்கை. எல்லோரையும் சகோதரர்களாகவே பார்க்கின்றோம்.

இன்றைய பாரதம் ஆற்றல் மற்றும் கனவுகளால் நிரம்பி வழிகிறது. ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளைப் பார்க்கிறோம். பெண்கள் நலனில் மட்டுமின்றி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அரசு கட்டிய பல வீடுகள் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், 10 கோடி பெண்கள் குறுந்தொழில் முனைவோர் திட்டத்தில் இணைந்துள்ளனர்.

விவசாயத்தில், நாங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். விவசாயத்திற்கு ட்ரோன்களைப் பயன்படுத்துகிறோம். கிராமப்புற பெண்கள் இந்த முயற்சியில் முன்னணியில் உள்ளனர். ஆயிரக்கணக்கான பெண்களுக்கு ஆளில்லா விமானத்தை விவசாயத்துக்கும் இதர பயனுள்ள வகையில் பயன்படுத்த பயிற்சி அளித்து வருகிறோம். இந்த தொழில்நுட்ப புரட்சி கிராமங்களைச் சேர்ந்த பெண்களால் இயக்கப்படுகிறது.

இந்தியாவின், 5ஜி தொழில்நுட்பம் அமெரிக்காவை விட பெரியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இது சாத்தியமாகி உள்ளது. அடுத்த கட்டமாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் 6ஜி தொழில் நுட்பம் நோக்கி நகர்ந்துள்ளோம். அனைத்து மின்னணு சாதனங்கள் இயங்குவதற்கு தேவையான, 'செமிகண்டக்டர்' எனப்படும், 'சிப்' தயாரிப்பில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. இந்திய தயாரிப்பு, 'சிப்'களை அமெரிக்காவில் நீங்கள் காணும் நாள் வெகு துாரத்தில் இல்லை. அந்த சிறிய, 'சிப்'கள், வளர்ந்த இந்தியாவை புதிய உயரத்துக்கு உயர்த்தும்.

மாறிவிட்ட இந்தியாவில் இருந்து, உலக தரத்துக்கு உயர்ந்து விட்ட பாரதத்தில் இருந்து நான் வந்திருக்கின்றேன். இனி இந்தியாவின் பெரும் விஞ்ஞான பொருட்களை அமெரிக்காவில் பார்க்கும் நாள் தொலைவில் இல்லை .

கவனியுங்கள், உலகமே ஆளில்லா விமானங்கள் ட்ரோன்கள் என ஆய்வில் இருக்க்கும் போது அதை கொண்டு விவசாயத்துக்கு மருந்து தெளிப்பது எப்படி, கால்நடை பராமரிப்பு எப்படி, விவசாயத்தில் ஆளில்லா ட்ரோன்கள் பங்களிப்பு எப்படி என கிராம பெண்கள் கையில் அந்நுட்பம் கிடைக்கும்படி பாரதம் மோடி காலத்தில் சாதித்து கொண்டிருகின்றது.

புற்றுநோய்க்கான ஆய்வில் முக்கிய கட்டம் அடைந்து விட்டோம், 6ஜி நுட்பத்தில் நாங்கள் அடியெடுத்து வைத்து விட்டோம், ஆறாம் தலைமுறை சிப் எங்களுடையது என மோடி பெருமையாக சொல்லும் நேரம் உலகம் பாரதத்தையும் மோடியினையினையும் பெருமையாய் பார்க்கின்றது.

மோடியின் அமெரிக்க பயணத்திலும் ஒரு நிமிடம் கூட அவர் ஓய்வில் இல்லை, அங்கும் ஓயாத சந்திப்பு மக்களிடம் கலந்துரையாடல் முக்கியமான கூட்டங்கள் என ஓடிக்கொண்டே இருக்கின்றார். அமெரிக்காவில் அவருக்கான மரியாதை மற்றும் வரவேற்பும், இந்தியா காட்டிக் கொண்டிருக்கும் பெரும் பாய்ச்சலும் உலக ஊடகங்களால் விவாதிக்கபட்டு வருகின்றன.

Tags:    

Similar News