இனி அரபு அமீரகத்திலும் யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம்..!

மத்திய கிழக்கு நாடுகளில் யுபிஐ செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Update: 2024-07-06 05:36 GMT

யுபிஐ பண பரிவர்த்தனை - ஐக்கிய அமீரகத்தில்.(கோப்பு படம்)

உலகம் முழுவதும் யுபிஐ செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு வேகமாக செய்து வருகின்றது.

இந்நிலையில், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக நெட்வொர்க் இண்டர்நேஷனல் என்ற வர்த்தக நிறுவனத்துடன் என்பிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது.

தற்போது இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்பவர்கள் அல்லது அங்கு வசிக்கும் இந்தியர்கள், யுபிஐ செயலிகள் மூலம் ’க்யூ-ஆர் கோடை’ ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.

இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தாண்டும் மட்டும் 98 லட்சம் பேருக்கு மேல் அந்த நாடுகளுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், அமீரகத்துக்கு மட்டும் 53 லட்சம் இந்தியர்கள் பயணிக்கவுள்ளனர். இந்நிலையில், யுபிஐ செயலிகளை உலகளவில் ஊக்குவிக்கும் பணிகளை மத்திய அரசுடன் இணைந்து இந்திய ரிசர்வ் வங்கியும், என்பிசிஐயும் செய்து வருகின்றன.

ஏற்கெனவே நேபாளம், இலங்கை, சிங்கப்பூர், பிரான்ஸ், பூடான் மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் யுபிஐ அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தி வருகின்றனர்.

என்பிசிஐ தரவுகளின்படி, கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் யுபிஐ செயலிகள் மூலம் 1,390 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இது ஒவ்வொரு ஆண்டும் 49 சதவிகிதம் அதிகரித்து கொண்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் மட்டும் யுபிஐ செயலிகள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 46.3 கோடி பரிவர்த்தனைகளில் ரூ. 66,903 கோடி மதிப்பிலான தொகை பகிரப்பட்டு வருகின்றது.

யுபிஐ பணப்பரிவர்த்தனை அதிகரித்து கொண்டிருப்பதன் காரணமாக யுபிஐயுடன் ரூபே கிரெடிட் கார்டுகளை இணைக்கும் பணிகள் வெளிநாடுகளிலும் தொடங்கியுள்ளன. 

Tags:    

Similar News