உக்ரைன் முன்னாள் அதிபர் முகம் விகாரத்தோற்றமாக மாறியது ஏன்?
முன்னாள் உக்ரைன் அதிபர் விக்டர் யுஷெங்கோவின் உருவம் மாறியதன் மர்ம பின்னணி இன்றுவரை கிணற்றுக்குள் கிடக்கும் கல்லாகவே இருக்கிறது.;
உக்ரைன் முன்னாள் அதிபரின் சாதாரண முகம், மற்றும் மாறிய முகம்.
2004 ஆம் ஆண்டில், உக்ரைன் அதிபர் விக்டர் யுஷெங்கோவுக்கு ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் ஒருவித ரசாயன விஷம் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக அந்த ஆபத்தில் இருந்து அவர் உயிர் தப்பினார். ஆனால் அவரது முகம் மற்றும் உடலின் தோல் வாழ்நாள் முழுவதும் மாறாத வடுவாக மாறி விட்டது. ஆமாம் அவரது தோல் சுருக்கங்கள் விழுந்து விகார தோற்றத்தை கொடுத்தது.
இன்றுவரை , யார் யார் யுஷ்செங்கோவுக்கு விஷம் கொடுத்தார்கள் என்பதற்கு உறுதியான பதில் யாரிடமும் இல்லை என்றே கூறுகிறார்கள். ஆனால், ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்த உக்ரேனிய அதிகாரிகளுடன், அன்று இரவு அவர் உண்ட விருந்தைப் பற்றி பலர் சுட்டிக்காட்டினர்.
அந்த விருந்து முடிந்து அவர் வீட்டிற்கு வந்து அவரது மனைவிக்கு முத்தமிட்டார். அப்போது அவரது மனைவி, 'உன் உதடுகளில் உலோக சுவை வருகிறது' என்று கூறினாராம். ஆகவே, விஷம் அவரது உணவில் வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
அவரது அந்த நோய்க்கு மோசமான உணவு மற்றும் அதிகப்படியான மது குடித்ததே காரணமாக இருக்கலாம் என்று ரஷ்யா கூறிய போதிலும், மருத்துவர்கள் அவரது இரத்தத்தில் நச்சு இரசாயனம் 'டையாக்ஸின்' இருக்கும் தடயங்களைக் கண்டறிந்தனர். இன்னும் அது விலகாத மர்மமாகவே இருக்கிறது.