"பிரதமராக இருந்தாலும் குற்றம் குற்றமே" பிரதமருக்கு அபராதம் விதித்த தாய்லாந்து கவர்னர்..!

Update: 2021-04-27 06:16 GMT

ஆசிய நாடான தாய்லாந்தில் கொரோனா பரவலை தடுக்க, முக கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள், கடுமையாக்கப்பட்டு உள்ளன. விதிகளை மீறுவோருக்கு, அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே நேற்று முன்தினம், தலைநகர் பாங்காக்கில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் பிரயுத் சான்- ஓச்சா, முக கவசம் அணியவில்லை.விதிமீறலில் ஈடுபட்ட பிரதமருக்கு, பாங்காக் மாகாண கவர்னர் அஸ்வின் குவான் முவாங், நேற்று 190 டாலர்கள் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

இதுகுறித்து, தன் அதிகாரப்பூர்வ, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ள கவர்னர் அஸ்வின், பிரதமர் முக கவசம் அணியாத புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார். பின், அந்த புகைப்படம் அகற்றப்பட்டது.

சிட்டி ஹாலில் பிரதமர் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து விசாரித்திருக்கிறார், அதில் வீட்டை விட்டு வெளியே வந்தா முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பது தெரிந்திருந்தும் பிரதமர் முகக்கவசம் அணியாமல் வந்தார், இதனால் பிரதமராக இருந்தாலும் குற்றம் குற்றமே, அதனால் அபராதம் விதிக்கப்பட்டது என்கிறார் கவர்னர் அஸ்வின் குவான்முவாங்.

Tags:    

Similar News