Anne Frank டைரி குறிப்புகள் தமிழில் - போர் ஆவணம் : Doodle-ல் கொண்டாடும் Google
Google News Today in Tamil-ஆன் பிராங்க்-ன் டைரி பின்னாளில் நாஜிப்படைகளின் கொடுங்கோள்களை எடுத்துக்காட்டும் ஒரு ஆவணமாக மாறிப்போனது.
Google News Today in Tamil- ஆன் பிராங்க்(Anne Frank),என்ற சிறுமியின் டைரி பின்னாளில் நாஜிப்படைகளின் கொடுங்கோள்களை எடுத்துக்காட்டும் ஒரு ஆவணமாக மாறிப்போனது. அதை இன்று Google doodle -ல் கொண்டாடுகிறது.
ஆன் ஃபிராங்க் ஜூன் 12, 1929ம் ஆண்டில் ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில் பிறந்தார். அவரது பெற்றோர் - ஓட்டோ மற்றும் எடித் ஃபிராங்க் ஆகியோர் ஆவார்கள். அவரது குடும்பத்தினர் 1934 ம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தபோது ஆம்ஸ்டர்டாமுக்கு குடிபெயர்ந்தனர். யூதர்களின் துன்புறுத்தல்கள் அதிகரித்துக் கொண்டிருந்தபோது அன்னே அந்த நாட்குறிப்பைப் பரிசாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
the diary of anne frank-அன்றிலிருந்து அந்த நாட்குறிப்பை தன்னிடம் வைத்துக் கொண்ட அந்த சின்னஞ் சிறுமி , தன் குடும்பத்தின் தலைமறைவு வாழ்க்கையை அதில் எழுதத்தொடங்கினார். தினசரி நடவடிக்கைகள் மட்டுமின்றி கூடுதலாக, அவர் சிறுகதைகளையும் அந்த டைரியில் எழுதினார். முதலாவதாக ஒரு நாவலில் தொடங்கினார். அவர் தனது 'அழகான வாக்கியங்களின் புத்தகத்தில்' படித்த வாக்கியங்களை மனதில் இருத்தி அவருக்குத் தேவையான விஷயங்களுக்கு அந்த வாக்கியங்களை நேர்த்தியாக பயன்படுத்தினார்.
1944 ம் ஆண்டில் பெர்கன்-பெல்சன் வதை முகாமில் நடந்த படுகொலையில் ஃபிராங்க் இறந்துபோனார். அவரது தந்தை ஓட்டோ மட்டுமே படுகொலையில் இருந்து தப்பி எஞ்சியிருக்கும் ஒரே குடும்ப உறுப்பினர். அவர் ஆம்ஸ்டர்டாமிற்குத் திரும்பினார். அங்கு ஆன் -இன் நாட்குறிப்பைக் (டைரியை )கண்டுபிடித்தார். ஓட்டோவின் நண்பர்கள் நாட்குறிப்பை (டைரியை ) வெளியிட அவரை உற்சாகப்படுத்தினர். ஜூன் 1947 இல், முதல் தொகுதி பிரதிகள் அச்சிடப்பட்டன. நாஜி ஆட்சியின் சுமைகளைச் சுமந்த யூதர்களின் துயரங்களைப் புரிந்துகொள்வதில் ஆன் -இன் டைரி பின்னர் ஒரு முக்கிய ஆவணமாக மாறியது.
உலக மொழிகளில் ஆன்(Anne)-இன் டைரி:
the diary of anne frank-இந்த நாட்குறிப்பு இன்றுவரை 70க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. காலப்போக்கில், டைரி உலகில் அதிகம் விற்பனையாகும் குறிப்பு புத்தகங்களில் ஒன்றாக மாறிபோனது. இந்த கதை பல திரைப்படங்களுக்கு அடிக்கருவாக அமைய உத்வேகம் அளித்தது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2