சீன அதிபருக்கு மோடியை பார்த்து அப்படியென்ன வயிற்றெரிச்சல்..?
உலக அளவில் பிரதமர் மோடியின் வளர்ச்சியை பிடிக்காத சீன அதிபர் எல்லையில் தொல்லை தருவதன் மூலம் மோடி மீதான தனது வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தி வருகிறார்.;
பிரதமர் மோடியை உள்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் வீழ்த்த நினைப்பது மிகப்பெரிய நியாயமான விஷயம். இந்திய ஜனநாயக அரசியல் முறைப்படி எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியை ஆதரிக்கவே முடியாது. மோடி அவர் செய்த நல்லவைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து அவரது தரப்பு நிலங்களை எடுத்துரைப்பார்.
ஆனால் பிரதமர் மோடியின் திறமையையும், அதீத தலைமைப் பண்பையும் கண்டு உலக அளவில் ஒருவரின்ர் வயிறு எரிகிறது என்றால், அது சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்குத் தான். இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் கூட பிரதமர் மோடியை பார்த்து அப்படி பொறாமைப்பட்டு வயிறு எரிச்சல் பட்டதில்லை.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு என்ன காட்டமோ அல்லது தாழ்வு மனப்பான்மையோ தெரியவில்லை. மோடியை சந்தித்தப் பின், ஒவ்வொரு முறையும் தான் தான் உலகின் பிக்பாஸ் என நிரூபிக்க முயன்று, அவமானப்பட்டு நிற்கிறார். டோக்லாம், லடாக், கல்வான் என எல்லையில் மூன்று முறை பெரிய அளவில் அடி வாங்கியும் இன்னும் சீன அதிபர் ஜி ஜின்பிங் திருந்தியபாடு இல்லை.
பிரதமர் மோடியின் மீதான சீன அதிபரின் பொறாமையினை கண்டு ஒட்டுமொத்த உலகமும் சிரித்து வருகின்றன. தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியை சந்தித்து அவருடன் பேசிய பின்னர், எல்லைப்பிரச்னையை விரைவில் தீர்த்து விடலாம் என உறுதி கொடுத்த ஜி ஜின்பிங், தன் நாட்டிற்கு திரும்பியதும் செய்த முதல் வேலை, இந்தியாவின் அருணாச்சலபிரதேசத்தை தனது எல்லையுடன் இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளார்.
இதற்கும் வழக்கம் போல் மோடி பதிலளிக்கவில்லை. ஆமாம் எல்லையில் சீனா சீண்டும் போதெல்லாம், சீன அதிபர் போர் எச்சரிக்கை விடுக்கும் போதெல்லாம் இதுவரை மோடி பதில் சொல்லியதில்லை. ஆனால் இந்திய ராணுவம் அதற்கான பதிலை சீனாவிற்கு சொல்லி வந்துள்ளது. இது தான் இப்போதும் நடக்க உள்ளது.
வரைபடத்தை வெளியிட்டது, ‘‘உன்னை அடிக்க முடியாது, அதனால் உன் நிழலை அடிக்கிறேன்’’ என்ற பயத்தின் உச்சியில், விரக்தியின் உச்சியில் ஏற்பட்ட ஒரு வன்மத்தின் வெளிப்பாடு. இதற்கும் இந்திய அரசு வழக்கம் போல், ‘‘வரைபடம் வெளியிடுகிறாய் தானே, உள்ளே வந்து பார்’’ என மார்தட்டி நிற்கிறது. இதனையும் உலகம் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறது. இது பழைய இந்தியா இல்லை. உலகின் புதிய டிஜிட்டல் மற்றும் பொருளாதார, ராணுவ வல்லரசான புதிய இந்தியா என்பதை சீனாவிற்கு சொல்ல, இந்திய ராணுவம் தயாராக உள்ளது என இந்திய அரசு அதிகாரிகள் தங்கள் செயல்கள் மூலம் நிரூபித்து வருகின்றனர்.