12 வயது பேராசிரியர்..! உலகம் போற்றும் உன்னத சிறுவன்..!
சுபோர்னோ 'ஐசக்' பாரி யார் என்று தெரியுமா? நியூயார்க் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் 12 வயது உயர்நிலைப்பள்ளி அதிசயக்குழந்தை.
Suborno ‘Isaac’ Bari in Tamil, Isaac’ Bari,youngest high school graduate,A Little Genius
நியூயார்க்கில் உள்ள லாங் ஐலேண்டில் வங்காளதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட இளம் சிறுவன், உயர்நிலைப் பள்ளி இளைய பட்டதாரியாக வரலாறு படைக்க உள்ளார். புலம்பெயர்ந்த பெற்றோரின் மகனான சுபோர்னோ 'ஐசக்' பாரி இந்த மைல்கல்லை அடைய பல அடுக்கு வகுப்புகளைத் தவிர்த்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். வெறும் 12 வயதில், பாரி இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளான் என்றால் நம்பமுடிகிறதா? மேலும் ஒரு இந்திய பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக(guest Lecture) வந்து சென்றுள்ளார்.
Suborno ‘Isaac’ Bari in Tamil
ஜூன் 26 ம் தேதி புதன்கிழமை அன்று தனது டிப்ளோமாவைப் பெறும் பாரி, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் (NYU) முழு உதவித்தொகையைப் பெற்றுள்ளார். அங்கு அவர் கணிதம் மற்றும் இயற்பியல் படிக்க திட்டமிட்டுள்ளார். அவர் கூறும்போது,
"எனக்கு உலகெங்கிலும் உள்ள மக்கள் கணிதம் மற்றும் அறிவியலைப் புரிந்துகொள்வதற்கு நான் உதவ வேண்டும்," என்று நியூயார்க் போஸ்ட்டுக்கு பாரி கூறியது மேற்கோள் காட்டப்பட்டது. "ஒரு நல்ல பேராசிரியராக உருவாக வேண்டும் என்பதே என் லட்சியம். நல்ல வளம் தேவைப்படுபவர்களுக்கு உதவுவதும் எனது குறிக்கோள்."
Suborno ‘Isaac’ Bari in Tamil
யார் இந்த சிறிய மேதை?
பாரி, பெங்காலி-அமெரிக்க அதிசய குழந்தை. மேலும் பல்கலைக்கழகப் பேராசிரியரான இந்த சிறுவன், நியூயார்க் பிரஸ்பைடிரியன் குயின்ஸ் மருத்துவமனையில் ஏப்ரல் 9, 2012 அன்று பிறந்தார். பங்களாதேஷில் இருந்து குடியேறிய அவரது பெற்றோர்களான ரஷிதுல் மற்றும் ஷாஹெதா, அவரது சிறப்பான சில திறன்களை ஆரம்பத்திலேயே கவனித்தனர். குழந்தையாக இருக்கும்போது ஆறு மாதத்திலேயே அவர் முழுமையான வாக்கிய அமைப்பில் பேசாத தொடங்கிவிட்டார்.
மேலும் இரண்டு வயதிற்குள், அவர் சிக்கலான கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் சிக்கல்களைத் தீர்த்துவைக்கும் திறன் பெற்றிருந்தார்.
அவரது திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோக்கள் சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் கவனத்தை ஈர்த்தது. இது மெட்கர் எவர்ஸ் கல்லூரி மற்றும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களுடன் நேர்காணல்களுக்கு வழிவகுத்தது.
2016ம் ஆண்டில், நியூயார்க்கின் சிட்டி கல்லூரியின் டாக்டர் லிசா கோய்கோ கணிதம் மற்றும் அறிவியல் சோதனைகளில் அவரது விதிவிலக்கான செயல்திறனுக்காக அவரை "நம் காலத்தின் ஐன்ஸ்டீன்" என்று அழைத்தனர்.
Suborno ‘Isaac’ Bari in Tamil
நான்கு வயதில், பாரி தனது சாதனைகளுக்காக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடமிருந்து அங்கீகாரத்தைப் பெற்றார். அதைத் தொடர்ந்து தனது ஆறாவது வயதில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அவரது சிக்கல் தீர்க்கும் திறமைக்காக அங்கீகாரம் பெற்றார். அவர் விரைவில் நியூயார்க் நகரத்திற்கு கிடைத்த வெகுமதி மற்றும் திறமையான நபராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
2018 ஏப்ரல் 24அன்று, ப்ராங்க்ஸ் சி. கல்லூரியின் டாக்டர் தாமஸ் இசெகெனெக்பே, பாரியின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரசாரம் மற்றும் அவர் வெளியிட இருந்த புத்தகமான “தி லவ்” குறித்து பேட்டி அளித்தார். மார்ச் 15, 2019 அன்று வெளியிடப்பட்ட “தி லவ்” மதங்களுக்கு இடையேயான புரிதலை ஊக்குவிக்கிறது. 2019 ஏப்ரல் 28ம் தேதி அன்று ஜாக்சன் ஹைட்ஸில் பெங்காலி முஸ்லிம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து அந்த புத்தகத்தில் பேசப்பட்டிருந்தது.
2020ம் ஆண்டு ஜனவரியில் இந்திய நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியிடம் இருந்து உலகளாவிய குழந்தைப் பிரமாண்ட விருதையும் பெற்றார். அவர் மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் வருகைப் பேராசிரியராகச் சேர்ந்தார். மேலும் 2020 ஜனவரி 6 அன்று SP புனே பல்கலைக்கழகத்தில் அவரது நூலான "தி லவ்" புத்தகங்களை வழங்கினார்.
Suborno ‘Isaac’ Bari in Tamil
அவரது சாதனைகள் NBC இல் இடம்பெற்றன. 2020 மார்ச் மாதத்தில் "லிட்டில் பிக் ஷாட்ஸ்", ஹாலிவுட் லெஜண்ட் மற்றும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மலிசா மெக்கார்த்தி அவரை வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் பேட்டி கண்டார்.
அவரது ஆசிரியர்கள் மற்றும் சகாக்களால் பாராட்டப்பட்ட பாரி ஏற்கனவே மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் கற்பித்துள்ளார். மேலும் அவரது சிக்கல் தீர்க்கும் திறன்களுக்காக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றார். இருப்பினும், அவரது பெற்றோர் பாரியை ஒரு தனித்துவமான மற்றும் முன்னோக்கிச் சிந்திக்கும் பையன் என்று விவரிக்கிறார்கள். அவர் எப்போதும் தனது சக குழந்தைகளில் இருந்து தனித்து நிற்கிறார்.
சிறுவனின் வியக்கவைக்கும் பேச்சு