டெல்டா வகை வைரசுக்கு ஸ்புட்னிக் V 90 சதவீதம் பயனளிக்கிறது : மாஸ்கோ ஆராய்ச்சி மையம் தகவல்

டெல்டா வகை வைரசுக்கு ஸ்புட்னிக் V 90 சதவீதம் பயனளிக்கிறது என்று மாஸ்கோவைச் சேர்ந்த கமலேயா தேசிய ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-06-30 12:49 GMT

மாஸ்கோ: 'டெல்டா' வைரசுக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசி 90 சதவீதம் பயனளிக்க கூடியது என்று மாஸ்கோவில் செயல்பட்டு வரும் கமலேயா தேசிய மையம் தெரிவித்துள்ளது.

மாஸ்கோவில் உள்ள கமலேயா தேசிய மையம் தெரிவித்துள்ள அறிக்கையில்,

டெல்டா வகை வைரஸ் வேகமாகப் பரவக் கூடியது; அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது' என, வல்லுநர்களால் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்ட டெல்டா வகை ரஷ்யாவில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. ரஷ்யாவில் தற்போது புதிதாக தொற்று பாதிப்பால் வருவோர்களில் 90 சதவீதம் டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.

தற்போது நிகழ்த்தப்பட்ட ஆய்வில், டெல்டா வகை வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக் தடுப்பு மருந்து 90 சதவீதம் செயல்திறன் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. முதலில் தோன்றிய கோவிட்19 வைரஸ் பாதிப்பிற்கு ஸ்புட்னிக் V , 92 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், மக்கள் அனைவருக்கும் ஸ்புட்னிக் V தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே, ராஷ்யாவில் கோவிட் பெருந்தொற்றின் அடுத்த அலை ஏற்படாமல் தவிர்க்க முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News