ஷேக் ஹசீனா அரசியல் கதையை முடித்த பாகிஸ்தான்!

தனது பரம எதிரியான ஷேக் ஹசீனாவின் அரசியல் கதையை 54 ஆண்டுக்கு பின் பாக்கிஸ்தான் முடித்து பழிதீர்த்துள்ளது.;

Update: 2024-08-07 03:04 GMT

வங்கதேசத்தில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டம்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நாட்டைவிட்டே வெளியேறி நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில் தான் பாக்கிஸ்தானில் இருந்து வங்கதேசத்தை தனியாக பிரித்த ஷேக் ஹசீனாவின் தந்தையால் நொந்து போன பாகிஸ்தான் 54 ஆண்டுகள் காத்திருந்து ஷேக் ஹசீனாவை சொந்த நாட்டை விட்டே பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மூலம் வெளியேற்றி உள்ளது. மேலும் ஷேக் ஹசீனாவின் கதையை பாகிஸ்தானில் இருந்தே ஐஎஸ்ஐ முடித்தது எப்படி? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டம் பெரிய அளவில் வன்முறையாக மாறியது. இதையடுத்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நம் நாட்டுக்கு வந்துவிட்டார்.

தற்போது வங்கதேசம் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் கட்டுப்பாட்டில் உள்ளது. விரைவில் இடைக்கால அரசு என்பது அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தது, நாட்டை விட்டு வெளியேறியது தொடர்பான அடுத்தடுத்த பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தான் ஷேக் ஹசீனாவின் இந்த பதவி விலகல் மற்றும் அவரை நாட்டை வெளியேற்றியதன் பின்னணியில் பாகிஸ்தான் நாட்டின் ஐஎஸ்ஐ எனும் உளவு அமைப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அது எப்படி சாத்தியமானது?

வாங்க பார்க்கலாம். பாகிஸ்தானில் இருந்து தான் வங்கதேசம் புதிய நாடாக பிறந்தது. இதனால் பாகிஸ்தானுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே எப்போதுமே மோதல் போக்கு என்பது இருந்து வருகிறது. மேலும் வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவுடன் செயல்படும் அமைப்புகள் உள்ளன.

இதன் மாணவர் பிரிவின் பெயர் ஐசிஎஸ் எனும் இஸ்லாமிய சத்ரா ஷிபிர். இந்தஅமைப்பை சேர்ந்தவர்கள் தான் கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே வங்கதேசம் தனி நாடாக உருவாக போராடிய தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வந்தது.

இந்த ஜமாத் இ - இஸ்லாமி மற்றும் இஸ்லாமிய சத்ரா ஷிபிர் ஆகிய அமைப்புக்கு பாகிஸ்தான் நாட்டின் அதிகாரப்பூர்வ உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் ஆதரவு உள்ளது. அதாவது நம் நாட்டில் ‘ரா’ உள்ளிட்ட உளவு அமைப்பு போன்று பாகிஸ்தானில் ஐஎஸ்ஐ என்பது அதிகாரப்பூர்வ அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

ஷேக் ஹசீனா வங்கதேசத்தின் பிரதமாக இருப்பது பாகிஸ்தானுக்கு பிடிக்கவில்லை. அதேவேளையில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற கட்சிகளின் தலைவர்களை ஷேக் ஹசீனா சிறையில் அடைத்தார். குறிப்பாக சிறையில் அடைக்கப்பட்ட முக்கிய தலைவர் ஒருவர் யார் என்றால் பிஎன்பி எனும் வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலிதா ஜியா. இவர் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர்.

இவரை ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனா சிறையில் அடைத்தார். அதேபோல் அவரது கட்சிகளை சேர்ந்த பலரும் சிறையில் உள்ளனர். இதனால் பாகிஸ்தான் தனது ஆதரவு பெற்ற அதேவேளையில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் கலிதா ஜியா சப்போர்ட் செய்யும் ஜமாத் இ இஸ்லாமி மற்றும் அதன் மாணவர் பிரிவான இஸ்லாமிய சத்ரா ஷிபிர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளில் இஸ்லாமிய சத்ரா ஷிபிர் பிரிவை சேர்ந்தவர்கள் அந்த நாட்டின் பல்வேறு பல்கலைக்கழங்களில் சேர்ந்தனர். குறிப்பாக டாக்கா பல்கலைக்கழகம், சிட்டகாங் பல்கலைக்கழகம், ஜஹாங்கீர் பல்கலைக்கழகம், சில்ஹெட் பல்கலைக்கழகம் மற்றும் ராஜ்ஷாஹி பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் இவர்கள் அதிகளவில் சேர்ந்துள்ளனர். அதுமட்டுமின்றி அந்த பல்கலைக்கழகங்களில் நடந்த மாணவர் அமைப்பு தேர்தல்களில் அவர்களே வெற்றியும் பெற்றுள்ளனர்.

இதனால் அவர்கள் மிகவும் வலுவாக காலுன்றியுள்ளனர். தற்போது இவர்கள் தான் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கி தொடர்ந்து வீரியமாக்கினர். மேலும் நேற்று முன்தினம் நடந்த மோதலில் ஒரே நாளில் 110 பேர் வரை கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை தீவிரமாக்கி ஷேக் ஹசீனாவை ராஜினாமா செய்ய வைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி மாணவர் அமைப்பு மட்டுமின்றி ஜமாத், மதராஸ் சார்ந்த சில நிர்வாகிகளும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள் மூலம் மாணவர்களுக்கு சதித்திட்ட விபரங்கள் பகிரப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் பாகிஸ்தானில் இருந்தபடியே அந்த நாட்டின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பானது வங்கதேசத்தில் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பான பிரச்சனையை தூண்டி கலவரத்தை அரங்கேற்றி ஷேக் ஹசீனாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வைத்துள்ளது.

அதுமட்டுமின்றி பாகிஸ்தானுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வங்கதேசத்தை தனிநாடாக 1971ல் அப்போதைய நம் நாட்டு பிரதமர் இந்திரா காந்தி உதவியுடன் உருவாக்கியது ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜ்புர் ரஹ்மான் தான். இப்படி இருக்கும்போது பாகிஸ்தானை 2 ஆக பிரித்ததற்கு பழிவாங்கும் வகையில் 54 ஆண்டுகள் கழித்து ‘வங்கதேசத்தின் தேசப்பிதா’ என அழைக்கப்படும் தந்தை ஷேக் முஜ்புர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனாவையே பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வைத்து சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றி உள்ளது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ என்பது பெரும் சோகமாகும்.

Tags:    

Similar News