அமெரிக்காவில் ஒமிக்ரான் பாதித்த ஒருவர் மரணம் : கொண்டாட்டங்களை தவிர்க்க WHO பரிந்துரை
ஒமிக்ரான் பரவி வருவதால் உலக நாடுகள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.;
வாஷிங்டன்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நேற்று கோவிட்-19-ன் மாற்றுரு பெற்ற ஒமிக்ரான் பாதித்த ஒருவர் மரணம் அடைந்துவிட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர் என்று ஹாரிஸ் கவுண்டி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட முதல் ஓமிக்ரான் மரணம் என்று கூறப்படுகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்கள் (CDC) இந்த பிரச்சினையில் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் 50ல் இருந்து 60 வயதுடையவர். ஆனால் அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் COVID-19 பாதிப்பில் இருந்து அவரால் மீள முடியவில்லை. தடுப்பூசி போடாததே அவருக்கு கடுமையான சிக்கல்களை உருவாக்கி ஆபத்தில் முடிந்துள்ளது என்று சுகாதாரத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாவட்ட நீதிபதி லினா ஹிடால்கோ இந்த மரணம் குறித்து ட்வீட் செய்துள்ளார். இறந்தவர் மாறுபாட்டின் முதல் உள்ளூர் மரணம். தயவுசெய்து, தடுப்பூசி போட்டு ஊக்கப்படுத்துங்கள் என்று ஹிடால்கோ கூறியுள்ளார். முன்னதாக டிசம்பரில், ஒமிக்ரானில் இருந்து உலகளவில் பகிரங்கமாக உறுதிப்படுத்தப்பட்ட முதல் மரணத்தை பிரிட்டன் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கொண்டாட்டங்கள் வேண்டாம் :
உலக நாடுகளில் ஒமிக்ரான் வேகமாக பரவி வருவதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்யுமாறு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ஒமிக்ரான் பரவலைத் தடுக்க தலைவர்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.