இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்- விமான போக்குவரத்தை நிறுத்திய நாடுகள்

Update: 2020-12-21 07:15 GMT

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் நிறுத்தியுள்ஙளன.

தெற்கு இங்கிலாந்து பகுதியில் கொரோனா வைரஸில் புதிய வகை வேகமாகப் பரவிவருகிறது. இதனால் நேற்று இரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது. புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பிரட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன.சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளும் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு தடைவிதித்துள்ளன. கனடா அரசு முதற்கட்டமாக 3 நாட்களுக்கு இங்கிலநாந்துக்கான விமான போக்குவரத்தை நிறுத்தி உள்ளது. 

Tags:    

Similar News