'கட்டிப்பிடிப்பது எங்கள் கலாசாரம்..!' மோடியின் 'கட்டிப்பிடி' கேள்விகளுக்கு பதிலடி..!
கட்டிப்பிடித்து அரவணைப்பது எங்கள் கலாசாரம். அது உங்களுக்குத் தெரியாது என்று மேற்கத்திய ஊடகங்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.;
Modi's Hug Diplomacy, PM Modi, Volodymyr Zelenskyy, Vladimir Putin,Ukrain, Russia, India
பிரதமர் மோடி ரஷ்ய பயணத்தின்போது அதிபர் புதினை கட்டிப்பிடித்த சம்பவம் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஆனால், அதற்கு பதிலடியாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை சந்தித்தபோதும் அவரை கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்த சம்பவம் பலரது கேளிவிகளுக்கு பதிலாக அமைந்துவிட்டது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று (23ம் தேதி) உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியை சந்தித்தபோது, முதலில் கைகுலுக்கிய அவர் உடனே செலென்ஸ்கியை கட்டி அணைத்தார். உக்ரைனின் பரம எதிரியான ரஷ்யாவின் தலைவரான ஜனாதிபதி விளாடிமிர் புதினை,மோடி இதேபோல் கட்டிப்பிடித்த ஆறு வாரங்களுக்குப் பிறகு போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் உயர்மட்டத் தலைவரைக் கட்டிப்பிடித்த சம்பவம் பலரது வாயை மூட வைத்துள்ளது.
Modi's Hug Diplomacy
மோடி-செலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஊடகவியலாளர் சந்திப்பின் போது, வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம், புதினுடனும் இப்போது செலன்ஸ்கியுடனும் மோடி நடத்திய சந்திப்புகளின் வெளிப்படையான தொடர்புகள் குறித்து கருத்து கேட்கப்பட்ட கேள்வியில், மோடியின் 'கட்டிப்பிடித்து அணைப்பது ' பற்றி கேட்கப்பட்டது.
"உலகின் எங்கள் பகுதியில், மக்களைச் சந்திக்கும் போது, அவர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அரவணைத்துக்கொள்வது வழங்க்கம். இது ஒரு ஆறுதல். இந்த எங்களது வழக்கம் உங்கள் கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருக்காது. ஆனால் இவ்வாறு கட்டிப்பிடித்து எங்கள் உறவை வெளிப்படுத்துவது எங்களுடையது, எங்களுக்கானது என்று நான் உங்களுக்கு உறுதியாக கூறிக்கொள்கிறேன்.
உண்மையில், இன்று, நானே நினைத்தேன், பிரதமர் (மோடி) ஜனாதிபதி ஜெலென்ஸ்கியையும் கட்டித் தழுவுவார் என்று. அது நடந்துவிட்டது. நானும் அதைப்பார்த்தேன்" என்று ஒரு மேற்கத்திய நிருபரின் குறிப்பிட்ட கேள்விக்கு ஜெய்சங்கர் பதிலளித்தார். இது சில வாரங்களுக்கு முன்பு மோடி புதினைத் தழுவியது பற்றி பல வார்த்தைகளில் வெளிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
"மேலும் பல இடங்களில் அவர் வேறு பல தலைவர்களை சந்திக்கும்போதும் அதைச் செய்ததை நான் பார்த்திருக்கிறேன். எனவே, இந்த மரியாதைகள் எதைக் குறிக்கின்றன என்பதன் அடிப்படையில் இங்கு ஒரு சிறிய கலாசார இடைவெளி இருப்பதாக நான் நினைக்கிறேன்," என்று ஜெய்சங்கர் மேலும் கூறினார்.
Modi's Hug Diplomacy
மேற்கத்திய வல்லரசுகளின் வருத்தத்தை என்பதைவிட வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும் வகையில், ஜூலை மாதம் புதினைச் சந்தித்த மோடி, ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கான தீர்வை எப்படி ஏற்படுத்தலாம் என்பது பற்றி புதினுடன் பேசும்போது ரஷ்யா -உக்ரைன் நாடுகளுக்கிடையே அமைதி நிலவ வேண்டும். அதற்கு போர் தீர்வல்ல. குண்டுகளும் தோட்டாக்களும் அமைதியை ஏற்படுத்தாது என்று பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடன் பேசும்போது குறிப்பிட்டார். போரினால் அமைதி முயற்சிகள் வெற்றியடையாது என்பாது பற்றி பேசினார்.
நேற்று, உக்காரன் அதிபர் செலன்ஸ்கியை சந்தித்தபோதும் இதையேதான் வலியுறுத்தினார். உக்ரைனும் ரஷ்யாவும் தங்களுக்கு இடையே நடந்து வரும் மோதலுக்கு தீர்வு காண ஒருவருக்கொருவர் பரஸ்பர பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று இந்தியா கூறியது.
மோடி புதினைச் சந்தித்த பிறகு, மேற்கத்திய ஊடகங்களில் 'மோடி புதினுடனான கட்டிப்பிடிப்பை இர்க்ஸ் பிடென் அணி கியேவுக்கு ஆதரவைத் தள்ளுகிறது' போன்ற தலைப்புச் செய்திகளை நிரப்பியது. அதே நேரத்தில் பிபிசி தனது அறிக்கை ஒன்றில் கூறும்போது, "மாஸ்கோவிலிருந்து வரும் புகைப்படங்கள் திரு மோடி ரஷ்ய அதிபரைக் கட்டிப்பிடிப்பது இரு நாடுகளுக்கிடையேயென நட்பின் ஒளிர்தலைக் காட்டுகிறது என்று எழுதியது."
Modi's Hug Diplomacy
தற்செயலாக, வாஷிங்டனில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் புதினை சந்தித்ததற்காக மோடியை செலன்ஸ்கி விமர்சித்தார். இது ஒரு "பெரும் ஏமாற்றம்" என்று விவரித்திருந்தார்.
தற்போது மோடி செலன்ஸ்கியை கட்டிப்பிடித்து' கலங்காதீர்..நான் இருக்கிறேன்" என்பது போன்ற ஒரு அரவணைப்பினை உக்ரைன் மக்களுக்கு அதிபர் செலன்ஸ்கி மூலமாக மோடி கூறி இருப்பது போல தெரிகிறது.
முன்னதாக, ஜூன் மாதம் இத்தாலியில் நடந்த ஜி7 மாநாட்டின்போது மோடி ஜெலன்ஸ்கியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் இந்த இருநாட்டு பயணம் உலகத் தலைவர்களை உற்று நோக்க வைத்துள்ளது. உலக அரங்கில் இந்தியா கவனிக்கப்படும் நாடாக உருவெடுத்து வருவதை இது காட்டுகிறது. போலந்து இந்தியாவின் நேச நாடு. போலந்து சென்ற மோடி, அங்கிருந்து உக்ரைன் சென்றுள்ளார். அது நட்பின் தூதுவராக சென்றதற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சமாதானம் ஏற்படும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
மோடியின் இந்த நகர்வை கவலையோடு பார்ப்பது சீனா மட்டுமே.