மாறிப்போன போர்முறைகள் : என்ன நடக்கும் இனி உலகில்..!

உலகில் சில ஆண்டுகளாக போர் முறைகள் முழு அளவில் மாறி விட்டன.;

Update: 2024-09-20 05:06 GMT

ஏவுகணைகள் கோப்பு படம் 

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா இயக்கத்தினர் சில நிமிடங்களில் பல ஆயிரம் ஏவுகணைகளை செலுத்தினர். கிட்டத்தட்ட 20 நிமிடங்களில் ஏழாயிரம் ஏவுகணைகளை செலுத்தினர். நினைத்து பார்க்க முடியாத அதிபயங்கர தாக்குதல் இது தான் என நினைத்துக் கொண்டிருக்கும்  நிலையில், பதிலடி அதனை விட மிகவும் பிரமாண்டமாக இருக்கிறது.

லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர், செல்போன் பயன்படுத்தினால் இஸ்ரேல் 'ஹேக்' செய்து விடுகிறது என்பதால் பழைய தொழில்நுட்பமான 'பேஜர்' பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டார்கள்.

ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் லெபனான் மக்களிடம் இருந்த பேஜர்கள் திடீரென பயங்கர சூடாகி ஒரே சமயத்தில் வெடிக்கத் தொடங்கியது. மறுநாள் வாக்கிடாக்கிகள் இதே பாணியில் வெடித்தன. இதில் 35க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 3500 பேர் காயம். ஆம்புலன்ஸ்களில் ஒலியால் லெபனானே அதிரத் தொடங்கியது.

'எலக்ட்ரோ மேக்னட்டிக் பல்ஸஸ்' பயன்படுத்தி தெர்மல் ரன் அவே (Thermal run away) எனும் அதீத சூட்டினை உருவாக்கி, ஒரு மெஸ்ஸேஜ் மூலம் அதை ட்ரிக்கர் செய்து, லெபனான் மக்கள் கையிலிருந்த ஒவ்வொரு பேஜரையுமே ஒரு குட்டி 'டைம் பாமாக' இஸ்ரேல் மாற்றி இருக்கக் கூடும் என விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.

பேஜரின் தம்மாத்துண்டு குட்டி பேட்டரியே இத்தனை வேலை செய்யும் போது, சீனாவில் இருந்து இறங்கும் கோடிக்கணக்கான மிகப்பெரிய செல் பேட்டரிகளை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் ? நினைத்தாலே தலை சுற்றுகிறது.

அமெரிக்க- ஜப்பான் போர் அணுகுண்டை அறிமுகப்படுத்தியது, ஈரான்- ஈராக் போர் ரசாயன யுத்தத்தை அறிமுகப்படுத்தியது, ரஷ்ய- உக்ரைன் போர் ட்ரோன் யுத்ததத்தை அறிமுகப்படுத்தியது, தற்போது அதன் அடுத்த கட்டமாக தொலை தொடர்பு எலக்ட்ரானிக் பொருட்களையே ஆயுதமாக்கும் யுத்தத்தை உருவாக்கி உள்ளது இஸ்ரேல்-லெபனான் போர்.

போரின் தன்மையும், தொழில்நுட்பமும் மாறிக் கொண்டே வருகிறது. இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் இப்படி மாறி வரும் போர்முறைகளுக்கு ஏற்ற வகையில் தங்களது பாதுகாப்பு படைகளை நவீனப்படுத்தி வருகின்றன. பாதுகாப்பு படைகளை தாக்குவது என்பது இப்போது பழைய யுக்தியாக மாறிப்போனது. பொதுமக்கள் தான் அதிகம் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

தவிர பொருளாதார கேந்திரங்கள், ஆயுத கிடங்குகள், நாட்டின் முக்கிய இலக்குகள் இப்படி நவீன எலக்ட்ரானிக் போர் முறைகளில் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. இதனால் அதிர்ந்த உலக நாடுகள் இப்போதைய போர் முறைகளுக்கு ஏற்ப வேகமான முறையில் மாற்றங்களை கொண்டு வர தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இப்போது நடக்கும் போர்களில் இருந்தெல்லாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News