உக்ரைனின் துறைமுக நகரமான கெர்சன்-ஐ ரஷ்யப் படை கைப்பற்றியது

ரஷ்யக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் உக்ரைனின் முதல் பெரிய நகரமாக கெர்சன் திகழ்வதாக அதன் மேயர் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-03-03 04:51 GMT

உக்ரைனின் துறைமுக நகரமான கெர்சன் ரஷ்யப் படைகளிடம் வீழ்ந்தது.

கெர்சனின் மேயர் நேற்று தி நியூயார்க் டைம்ஸிடம், இது குறித்து கூறினார். அவர் கூறும்போது, உக்ரேனியப் படைகள் கெர்சன் நகரத்திலிருந்து பின்வாங்கிவிட்டது. படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யக்கட்டுப்பாட்டின் கீழ் வரும் உக்ரைனின் முதல் பெரிய நகரமாக கெர்சன் திகழ்கிறது.

ரஷ்ய பாராட்ரூப்பர்கள் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் தரையிறங்கியதாக உக்ரைன் இராணுவம் கூறியதையும் மேயர் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறும்போது பலர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறினார். தலைநகர் கெய்வில் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆங்காங்கு குண்டு வெடிப்புகளும் நடந்துள்ளன.

Tags:    

Similar News