உலக அளவில் உச்சம் பெற்று வரும் இந்தியாவின் பொருளாதார ரேட்டிங்
ஒரு தனிப்பட்ட மனிதனின் வருமானத்திற்கும், செலவினங்களுக்கும், நம்பகத் தன்மைக்கும் ஏற்ப அவனின் Credit Rating இருக்கும்
அதாவது ஒருவன் அபரிதமான செல்வம் இருந்தாலும், கடன் வாங்கி பயன்படுத்தாத போது, அவனுக்கு கிரிடிட் ரேட்டிங் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் கடன் வாங்கி, அதை சரியாக திருப்பி செலுத்துபவனுக்கு அதன் ரேட்டிங் அதிகரிக்கும். அதைவிட வட்டி கட்டுபவனுக்கு ஸ்கோர் அதிகமாக இருக்கும்.
அதற்கு காரணங்கள் இல்லாமலில்லை. என்னுடைய வருமானம் 1 லட்சம் என்றால், அதுவே போதும் என்று இருந்தால் என் வருமானம் பல்கிப்பெருகாது. மாற்றாக என் சக்திக்கு ஏற்ப, கடன் வாங்கி தொழிலை விரிவாக்கும் போது வளர்ச்சி வேகமாக இருக்கும், அதை சரியாகன் பயன்படுத்தும் வரையில்.
ஆனால் அந்த கடன் வாங்கி செய்யும் முதலீடு சரியாக இருக்க வேண்டும். நமது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் முந்தைய பட்ஜெட் உறையின் போது, இந்தியாவின் கட்டமைப்பிற்கான முதலீடு என்பது ₹1 க்கு நான்கு ஆண்டுகளில் ₹2.15 பைசா வருமானம் என்பது ஒரு மிகச்சிறந்த முதலீடு. அதாவது அந்த முதலீடு என்பது புதிய அபிவிருத்திக்கானது.
உதாரணமாக டெல்லி- மும்பை எக்ஸ்பிரஸ் வழி என்பது பெரிய முதலீடு. அதில் போட்ட முதலீடு என்பது போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். அதன் காரணமாக கூட்ஸ் கேரீருக்கு (லாரி) நேரமும், எரிபொருளும் சேமிக்க முடியும். முன்பு வாரத்தில் இரண்டு முறை போய்வர முடியும் என்பது, இப்போது, அதே லாரியில் நான்கு முறை போய்வர முடியும் என்பதால் அதே லாரியை அதிகம் பயன்படுதுகிறோம். அதே டிரைவர் ஆனால் கூடுதல் வருமானம்.
வாஜ்பாயின் தங்க நாற்கர சாலை வந்தபின் கார்களின் எண்ணிக்கு பலமடங்கானது. கார் வொர்க்ஷாப்புகள் அதிகரித்தன. ரோட்டோரங்களில் பல புதிய உணவங்கள் வந்தன. இப்படி தொழி வளர்ச்சி அடைவதைத்தான் வளர்ச்சி ஆரோக்கியமான வளர்ச்சி என்கிறோம்.
அதனால்தான் இந்தியாவின் பொருளாதாரம் நிர்ணயித்த 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே ₹1 முதலீட்டை ₹2.15 ஆக உயர்த்த முடிந்தது. அதனால் மோடி அரசு கடன் வாங்குகிறது. அதற்கு மேலே அதை சரியான வகையில் உபயோகப்படுத்துகிறது. அதற்கான ஆதாயத்தை அடைகிறது.
ஆனால் அதற்கு நேர்மாறாக கடன் வாங்கி நலத்திட்டங்கள் என்ற பெயரில் இலவசமாக கொடுத்தால், அந்த பணம் அரசுக்கு வருமானத்தை அதிகரிக்காமல், உழைப்பவர்களை சோம்பேறிகள் ஆக்கினால், அதன் மூலம் அரசுக்கு வருமான இழப்புதான் ஏற்படும். அரசு செய்யும் முதலீட்டில் 40% வரை கமிஷனாக போகும்போது அது தவறானவர்கள் கையில் சென்று சேரும். அதனால் நிதி மேலாண்மையை சரியாகக் கடைபிடிக்காத அரசு கட்ட வேண்டிய வட்டி அதிகரித்தால் அது வளர்ச்சியல்ல, வீக்கம்.
அப்படிப்பட்ட கணக்கீடுகளின் படி, உலகின் மிகப்பெரிய கடன்காரன் என்றால் அது அமெரிக்காவே. ஆனால் அதன் கடன் 32.5 ட்ரில்லியன் டாலரை கடந்து விட்டது. சென்ற வருடம் வரை அதன் டாலர் என்பது அதன் பிரதான ஆயுதம். அதை வைத்து கச்சா எண்ணெய், ஆயுத உற்பத்தி, மருந்து வர்த்தகம் என்று எல்லா வகையிலும் அதை உயர்த்தி, இலவசமாக டாலரை பிரிண்ட் செய்து ஊரை ஏமாற்றி வந்தது. அது உக்ரைன் போருக்கு பின்பு, டாலரின் நம்பிக்கை ஒரு பக்கம் குறைய, மறுபக்கம் அதன் வல்லரசு என்ற கட்டமைப்பும் வீழ்கிறது. எனவே அதன் கிரிடிட் ரேட்டிங் சரிந்து விட்டது.
தற்போது Fitch ரிப்போர்டின்படி அமெரிக்கா கிரிடிட் ரேட்டிங்கில் தனது AAA அந்தஸ்தை இழந்துள்ளது. முன்பு அது 2008 ல் அப்படியொரு நிகழ்வு நடந்தது, ஆனால் தனது ஆளுமையால், ஆதிக்கத்தால் அதை 5 வருடத்தில் திரும்ப எளிதாக பெற்றது. காரணம் வல்லரசு என்ற ஆதிக்கம். ஆனால் இந்த முறை மீண்டும் அதைப்பெற வாய்ப்புகள் மிகக்குறைவு. ஏனெனில், அதன் அடி நாதமானா டாலர் உலக நாணய அந்தஸ்தை வேகமாக இழந்து வருகிறது. மறுபக்கம் தனது கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் கட்டுப்பாட்டை OPEC நாடுகளிடம் இழந்து விட்டது.
மூன்றாவதாக ஆயுத விற்பனையின் ஆதிக்கத்தை இழக்கிறது. மாறாக இந்தியாவின் ஆதிக்கம் விரிவடைகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில், இந்தியாவின் ஆயுத விற்பனை ஒரு டிரில்லியன் டாலரை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்காவதாக அமெரிக்காவின் inflation என்பது கைமீறி போய் விட்டது. உலக நாணய அந்தஸ்தை இழந்து வருவதால் ஒரு பக்கம் டாலரின் உள்வரவு அதிகமாகிக் கொண்டே இருக்கும். மறுபக்கம் அதன் வாங்கும் திறன் வீழும். அதன் வாங்கும் சக்தி மட்டுமல்ல, விற்கும் சக்தி என்பதும் அதன் பண வீக்கத்தால் வெகுவாக சரியும்!
உதாரணமாக இப்போது ஏர் இந்தியாவுடன் 850 விமானங்களுக்கான மிகப்பெரிய விமான விற்பனை ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் இந்த விலைவாசி உயர்வால் அதன் உற்பத்தி விலை எகிறும் பட்சத்தில், அப்போது அது லாபகரமான உற்பத்தியாக இருக்க முடியாது என்பதால் அது லாபத்தை தருவதைவிட உற்பத்தி செய்வதையே முடியாமல் முடக்கி விடும். அந்த நிலையில் டாடா நிறுவனம் போயிங் நிறுவனத்தை கைப்பற்ற வாய்ப்புகள் உண்டு என்பது பொருளாதார நிபுணர்களின் புதிய கணிப்பாகும்.
ஐந்தாவதாக அதன் கடன் சுமை கழுத்தை நெரிக்கும்.அதனால் கடன் வாங்காமல் காலம் தள்ள முடியாது. இப்போது வட்டி கட்டவே முடியாது. அதை செய்யாதபோது, அதன் ஓய்வூதியம் முதல் அரசு செலவுகள் வரை எதுவும் முன்னெடுக்க முடியாது.
இப்படி பல விஷயங்களை அடுக்கலாம். எனவே மீண்டும் அமெரிக்கா தனது கிரிடிட் ரேட்டிங்கை AAA க்கு மீண்டும் கொண்டு வரவே முடியாது. அதே சமயம் இப்பொழுது இருக்கும் ரேட்டிங்கே மேக்கப்தான், உண்மையாக அதன் ரேட்டிங் வெறும் A ஆகத்தான் இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, Morgan Stanley தனது வருடாந்திர ரேட்டிங்கில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளான ஐரோப்பிய நாடுகளை Under Weight ஆக குறைத்துள்ளது.
சீனா Over Weight லிருந்து, Equal Weight என்று அதன் தரம் தாழ்ந்துள்ளது. சீனாவில் ஏற்றுமதி மட்டுமல்ல, உள்நாட்டில் வறுமை தாண்டவமாட தொடங்கி இருக்கிறது. பல வங்கிகள் திவால் ஆகும் நிலையில். அது OBOR என உலகளவில் செய்த முதலீடுகள் செத்துக்கொண்டு இருக்கிறது.
உதாரணமாக இந்தியா காஷ்மீரின் கில்கிட் பகுதியை இந்தியாவுடன் இணைத்து விட்டால், பாகிஸ்தானில் சீனா செய்த ட்ரில்லியன் டாலர் முதலீடுகள் பட்டை நாமம்தன் மிஞ்சும். ஆமாம் பாகிஸ்தான் நான்காக உடைந்தால்? யாரிடம் போய் கொடுத்த கடனை வாங்குவது?
அதே நேரத்தில், இந்தியா Equal Weight லிருந்து, Over Weight என்று தரம் உயர்ந்துள்ளதால், பல முதலீடுகள், உலகில் ஒரே வளரும் பொருளாதாரமாக இருக்கும் இந்தியாவின் மீது முதலீடு செய்கிறார்கள், இன்னும் அதிகமாக செய்வார்கள். அது அமெரிக்காவைவிட, சீனாவை நேரடியாக பாதிக்கும்.
இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால் உலகளவில் ஒரு பெரிய போர் வரவேண்டும். அதில் அமெரிக்கா நேரடியாக போரிடக்கூடாது, ஆனால் ஆயுதம் விற்று சம்பாதிக்கும் சூழல் உருவானால் மட்டுமே அது சாத்தியம். அதற்கு அது எதிர்பார்ப்பது இந்திய- சீனப்போரைத்தான்.
ஆனால் இன்றைய எதார்த்த நிலை என்பது சீனாவை தைவான் விஷயத்தில் நேரடியாக அமெரிக்கா போரில் சந்திக்கின்ற நிலை. இன்று உக்ரைன் போரில் அது கொடுப்பது எல்லாம் கடன். அந்த கடனை திருப்பித்தர, அந்த நாட்டிற்கு 30+ ஆண்டுகளாகும். இப்போதைய அதன் சீரழிந்த பொருளாதார நிலையில் அதனால் அமெரிக்காவிற்கு தேவையான உணவு பொருளைக்கூட தர முடியாது. ஏனெனில் ரஷ்யா தாக்குவது உக்ரைனின் உணவு கிடங்குகள் மீது தான்.
உலக நாடுகளின் சமன்பாடுகள் மிகவேகமாக மாறிவருகிறது. அதில் இந்தியா அடுத்த சில நூற்றாண்டுகள் ஆதிக்கத்தை மீண்டும் உலகளவில் செய்யும். ஆனால் அமெரிக்கா , சீனா செய்தது போலல்ல, ஒரு வசிஷ்ட குருவாக, தாயாக செய்யும். அதன் மூலம் ஏழை நாடுகளும் பொழிவடையும். அதனால் முதலீடுகளை டாலரை மையப்படுத்தி செய்வதை குறைத்து, இந்திய ரூபாயை மையப்படுத்தி செய்யலாம். அதே வேளையில், இந்த குழப்பங்கள் காரணமாக தங்கத்தின் மதிப்பு தற்காலிகமாக உயரும்.