ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரம் : பின்வாங்குகிறதா பாகிஸ்தான்..!?

பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் அட்டர்னி ஜெனரல் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-06-03 03:41 GMT

பலுச்சிஸ்தான் பகுதி (கோப்பு படம்)

பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டியில் வசித்து வந்த கவிஞரும், பத்திரிகையாளருமான அகமது பர்ஹத் ஷா பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளால் கடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அகமது பர்ஹத் ஷாவின் மனைவி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் நீதிமன்றம், அகமது பர்ஹத் ஷாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் விரும்புகிறது என நீதிபதி அக்தர் கயானி தெரிவித்தார். இது தொடர்பாக விசாணை நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான பாகிஸ்தான் கூடுதல் அட்டர்னி ஜெனரல், "அகமது பர்ஹத் ஷா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போலீஸ் காவலில் உள்ளார். அவரை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் முன் ஆஜர்படுத்த முடியாது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வெளிநாட்டு பகுதி. அதற்கென தனி அரசியலமைப்பு, தனி நீதிமன்றம் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பு, வெளிநாட்டு நீதிமன்ற தீர்ப்பாக கருதப்படும் என கூடுதல் அட்டர்னி ஜெனரல் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையே பல தசாப்தங்களாக பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் கூடுதல் அட்டர்னி ஜெனரல் இவ்வாறு கூறியது வியப்பதாக பார்க்கப்படுகிறது.

அதேவேளையில் இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. அது இந்தியாவுடன் இணைக்கப்படும் என தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கிடையே நீதிபதி, "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வெளிநாட்டு பகுதி என்றால், பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் நிலைகள் எப்படி அந்த நிலத்தில் நுழைய முடியும்" என கேள்வி எழுப்பியுள்ளார்.

அகமது பர்ஹத் ஷா திர்காட் போலீசால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News