விமான பயணத்தில் சீட் பெல்ட் அவசியம் போடணுமா..? நல்ல தகவல் படிங்க..!
விமான பயணத்தில் சீட் பெல்ட் போடுவது அவசியமா என்ற பலரின் கேள்விகளுக்கு இந்த செய்தி பதில் தரும்.;
கூரை உடைந்த நிலையில் விமானம்.
விமான பயணத்தில் சீட் பெல்ட் அவசியம் போடணுமா என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் திறந்த விமானக்கூரை.
அலோஹா ஏர்லைன்ஸ் விமானம்-AQ243 விபத்துக்குள்ளான சம்பவம் இந்த கேள்விக்கு பதில் அளிக்கும். 1988ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி, Aloha Air நிறுவன விமானம் AQ243 போயிங் 737-297 ஹவாயில் உள்ள Honolulu என்ற இடத்திற்கு புறப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 25 நிமிடங்களுக்குப்பிறகு விமானத்தின் கூரை பிடித்துக்கொண்டது. அதாவது கேபினின் கூரையில் ஒரு டிகம்ப்ரஷன் ஏற்பட்டு வெடிப்பை சந்தித்தது.
விமானத்திற்கு வெளியே உள்ள காற்றின் அழுத்தம் மற்றும் கேபின் காற்றழுத்த வேறுபாடு காரணமாக வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. கூரை கிட்டத்தட்ட பாதி திறந்தநிலையில் விமானம் சீறி பறந்துகொண்டிருக்கிறது. உள்ளே இருக்கும் பயணிகள் வானத்து மேகங்களைப் பார்க்க முடிகிறது. வேகமான காற்றை அவர்களால் உணர முடிகிறது. எல்லோரும் இறந்துபோகப்போகிறோம் என்ற அச்சம் பயணிகள் முகத்தில் மட்டுமல்ல கூக்குரலிட்டு சத்தமிடுகின்றனர். விமானி பயணிகளின் அச்சத்தை போக்கும்விதமாக ஒலிபெருக்கியில் பேசிக்கொண்டே விமானத்த்தின் கட்டுப்பாட்டையும் கட்டுக்குள் வைக்கிறார்.
கிட்டத்தட்ட 13 நிமிடங்களுக்கு மேல் கூரை உடைந்த நிலையில் விமானம் பறந்துகொண்டிருக்கிறது. விமானி அவசரமாக விமானத்தை தரை இறக்க கஹுலுய் விமான நிலையத்தில் அனுமதி கேட்கிறார். அனுமதி கிடைத்ததும், அதிர்ஷ்டவசமாக விமானி, விமானத்தை தரை இறக்கப்போவதாக அறிவித்தார். பயணிகள் உயிரை கையில் பிடித்து அச்சத்தில் உறைந்து இருந்தனர். அப்பாடா..ஒருவழியாக விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பயணிகளுக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. இருப்பினும், ஒரு மூத்த விமானப்பணிப்பெண், கிளாராபெல்லே லான்சிங், டிகம்ப்ரஷன் வெடிப்பின் போது விமானத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டுவிட்டார். அவர் மட்டும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அந்த மூத்தபணிப்பெண் விமானம் விபத்துக்கு உள்ளாக்கப்போவதால் பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் போட்டுள்ளனரா என்பதை சரிபார்த்துவிட்டு மீண்டும் இருக்கைக்கு திரும்பி சீட் பெல்ட்டைப் போடுவதற்குள் அவர் காற்றில் தூக்கி வீசப்பட்டார். இன்றுவரை அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.
விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்தன. விமான பயணத்தின் போது உங்கள் சீட் பெல்ட் போடப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவசரகாலத்தில் உங்கள் உயிரைக் காப்பாற்றுவது சீட் பெல்ட்டாகக்கூட இருக்கலாம். பயணிகள் உயிருடன் மீண்ட இந்த சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.