இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறதா..?

கடந்த 9 நாட்களில் லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லாவின் அத்தனை தலைவர்களும் மேலே அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர் இஸ்ரேலால்.

Update: 2024-09-30 06:37 GMT

ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நசரல்லா (கோப்பு படம்)

முக்கிய தலைவர் "ஹஸன் நஸ்ருல்லா சமீபத்திய தாக்குதலில் இறந்து விட்டதாக" கூறப்படுறது. "இல்லை. இன்னும் இருக்கிறார்" என்கிறார்கள் சிலர். உயிரோடிருந்தாலும் விட மாட்டோம் என்று வரிந்து கட்டி நிற்கிறது இஸ்ரேல். ஹமாசும், ஹெஸ்புல்லாவும் இனி பழைய நிலைக்கு மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும். அந்த அளவு அடித்து நொறுக்கி விட்டது இஸ்ரேல்.

இஸ்ரேலின் வட எல்லையில் இருக்கும் லெபனானின் தெற்குப் பகுதியை ஹிஸ்புல்லா இல்லாத அளவுக்கு 'சுத்தம்' செய்ய ஆரம்பித்திருக்கிறது இஸ்ரேல். இனி, இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே ஆட்களே இல்லாத ஒரு buffer zone இருக்கும். இதனால், லெபனான் தெற்கே இருந்து ஹிஸ்புல்லாக்களால் இஸ்ரேலை 'உடனே' தாக்க முடியாது. ஹெஸ்புல்லாக்கள் தாக்கியதால் கிட்டத்தட்ட 70 ஆயிரம் இஸ்ரேலியர்கள் புலம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் மீண்டும் அங்கே குடியேற்றப்படுவார்கள் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

அதே போல.... காஸாவின் வட பகுதியை ஹமாஸ் இல்லாத அளவுக்கு 'சுத்தம்' செய்திருக்கிறது இஸ்ரேல். காஸா வாசிகள் இனி காஸாவின் தென் பகுதியில் தான் இருக்க வாய்ப்பு. காஸாவின் வட பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்து தனதாக்கிக் கொள்ளலாம் என்று தெரிகிறது.

லெபனான், காஸாவில் இஸ்ரேல் இந்த அளவு கடும் பதிலடி கொடுத்ததும் கத்தார் அமைதியாகவே இருக்கிறது. இது அமெரிக்கா உத்தரவாக இருக்கலாம். ஈரான் மட்டும் வாயைக் கொடுத்து புண்ணாக்கிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட தனது எதிரிகளை இஸ்ரேல் முழு அளவில் முடித்து விட்டது.

தவிர ஹமாஸ், ஹெஸ்புல்லா இயக்கங்களின் ஆயுத கிடங்குகளையும் முழு அளவில் அழித்து விட்டது. லெபனான் நாட்டில் ஹெஸ்புல்லாவின் ஆயுத கிடங்குகள் மக்கள் அதிக நெருக்கமாக வசிக்கும் பகுதிகளில் இருந்தது. அதனைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் இஸ்ரேல் அ்நத ஆயுத கிடங்குகளையும் அழித்தது.

இஸ்ரேலின் இந்த பத்து நாள் ஆவேசத்தை கண்டு ஒட்டுமொத்த உலகமும் மிரண்டு தான் போயிருக்கிறது. தவிர இருபத்தி ஓரு உலக நாடுகள் அமைதி பேச்சு வார்த்தைக்கு முயன்றும் இஸ்ரேல் அதனை கண்டு கொள்ளவில்லை. எங்கள் எதிரிகளை முழுமையாக முடித்து வைப்போம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஐநா சபையில் வெளிப்படையாக பேசினார்.

பேசியதை போன்றே செய்தும் வருகிறார். இந்நிலையில் இஸ்ரேல் தனது எதிரிகளை பலமிழக்க செய்த நிலையில்,  இந்த போர் வெகு விரைவில் முடிவுக்கு வரவும் வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் இப்போது இஸ்ரேல் அடித்த அடியால், இன்னும் பல ஆண்டுகளுக்கு இஸ்ரேலை தாக்க எந்த தீவிரவாத இயக்கங்களும் உருவாக வாய்ப்பில்லை. தீவிரவாத இயக்கங்களுக்கு இதுவரை உதவிய நாடுகளும் இனி பின்வாங்கியே ஆகும் என உலக போர்ச்சூழலை கவனிக்கும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

Tags:    

Similar News