மிரட்டும் இந்தியா.... பரிதவிக்கும் சீனா....
இன்றைய தேதியில் உலக அளவில் அதி நவீன..அதி உச்ச செயல்திறன் கொண்ட ஏவுகணையாக பார்க்கப் படுவது ஹைப்பர் சோனிக் க்ரூஸ் வகைதான்;
இன்றைய தேதியில் உலக அளவில் அதி நவீன..அதி உச்ச செயல்திறன் கொண்ட ஏவுகணையாக பார்க்கப் படுவது ஹைப்பர் சோனிக் க்ரூஸ் வகைதான். இதில் உலக அளவில் ரஷ்யா தான் முன்னோடி. ஆனானப்பட்ட அமெரிக்காவே தத்தளித்துக் கொண்டு இருக்கிறது இத்துறையில். ஆனால் இந்தியாவில் இதனை வெற்றிகரமாக சாதித்து இருக்கிறார்கள்.
கடந்த மாதம் நடைபெற்ற இரண்டு சோதனை முயற்சிகளிலும் அமெரிக்கா தோல்வியை தழுவியது. முதன் முதலாக அவர்கள் இதனை வானில் வைத்து ஏவும் ATG எனப்படும் ஏர் டூ கிரவுண்ட் மிஸைலாக சோதனை செய்து பார்க்க அவர்களுடைய B52 குண்டு வீச்சு விமானத்தில் பொருத்திக் கொண்டு சென்றார்கள். ஆனால் கட்டளையை உள்வாங்கி அது விமானத்தில் இருந்து அந்த ஏவுகணை பிரியவில்லை.. ஒரு வாரம் கழித்து வேறோர் விதமாக பொருத்தி சோதனை செய்ய புறப்பட இம்முறை கட்டளையை ஏற்று பிரிந்த ஏவுகணை இலக்கு நோக்கி பாயவில்லை. மாறாக ஏவுகணை இஞ்சின் இயங்காமல் பழுதாகி நான்கு கிலோமீட்டர் தொலைவிலேயே தரையில் விழுந்துவிட்டது என்று அறிவித்து இருக்கிறார்கள்.
ஆனால்.. இந்தியா தனது சொந்த தயாரிப்பு ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே செய்து பார்த்து விட்டது என்பது நம்மில் பலருக்கும் தெரியவில்லை.. அது தான் சௌரியா ஏவுகணை. இந்நிலையில் பிரமோஸ் ஏவுகணையை ஹைப்பர் சோனிக் ஏவுகணையாக மாற்றம் செய்து சோதனை செய்ய தயார் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
இது தவிர முற்றிலும் புதிய பாணியில் புதிய தொழில்நுட்பத்தில் ICBM கானிஸ்டர் ரக ஏவுகணையில் ஸ்க்ராம்ஜெட் இஞ்சினில் இயங்கும் ஹைப்பர் சோனிக் க்ரூஸ் மிஸைல் ஒன்றை சோதனை முறையில் வெற்றிகரமாக இயக்கி சோதித்து பார்த்து இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இது ஒரு மைல் கல் சாதனையாகும்.
பொதுவாக ராம் பம்ப்களை இயக்க வெளி காரணிகளான.... உந்துவிசை வழங்கும் மோட்டார்களை அதில் பொருத்துவதில்லை. மாறாக நீரின் புவியீர்ப்பு சக்தியை உபயோகித்து அதே நீரிணை மேலேற்றும் பொறிமுறை பண்புகளை கொண்டதின் பெயர் தான் ராம் பம்ப்புகள். அதேதத்துவத்தை அடிப்படையில் இயங்குவது தான் ஸ்க்ராம் ஜெட் இஞ்சின். இந்த ரக இஞ்சினை பயன்படுத்தி இந்தியா ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்து இருக்கிறார்கள். இதனை ATG யாக மட்டும் இல்லாமல் STA எனப்படும் சர்ஃபேஸ் டூ ஏர் மிஸைலாகவும் பயன்படுத்த முடியும் என்கிறார்கள். நம்மவர்களின் தயாரிப்பு அவ்வளவு துல்லியமாக உள்ளது. இது ஒரு புரட்சிகரமான மாற்றங்களை இனி இந்தியாவில் உண்டு பண்ணும் என்கிறார்கள்.
ஏற்கெனவே இந்தியா தனது பிரத்தியேகமான சொந்தக் தயாரிப்பு விமானங்களை கட்டமைப்பு செய்து கொண்டு இருக்கிறார்கள் என்கிற செய்தி உலக அளவில் பல நாடுகளுக்கும் கிலி கொடுத்துள்ள நிலையில் தற்போது இந்தியாவில் ஹைப்பர் சோனிக் வகை க்ரூஸ் ஏவுகணைகளிலும் வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டு சோதனை செய்ய தயார் ஆகி கொண்டு இருக்கிறார்கள் என்கிற செய்தி பல நாடுகளுக்கும் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.
இவையனைத்தும் சேர்த்து நாளை இந்தியாவை முன்னணி ராணுவ பலம் வாய்ந்த நாடாக மாற்றியமைக்க போகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை என்கிறார்கள் உலக அரசியல் பார்வையாளர்கள். அசூரனாய் உலக வரைபடத்தில் அச்சுறுத்தும் பல நாடுகளை. தனது சொந்த தயாரிப்பு சாதனங்களால் அசூர வேகத்தில் வளர்ந்து வரும் இந்தியா பல உலக நாடுகளுக்கு ஆபத்பாந்தவனாய் அபயம் அளிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவே இன்று உலக நாடுகள் பலவும் பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சீனாவின் வலையில் விழுந்து தத்தளிக்கும் பல நாடுகளின் நம்பிக்கை இந்தியா தான் என்பது மிகையல்ல. அதனை இந்தியாவும் நன்கு உணர்ந்தே தனது செயல்பாடுகளை வடிவமைத்து கொண்டு வருகிறது.