வர்த்தகத்துறையிலும் சீனாவின் ஆதிக்கத்தை வீழ்த்தும் இந்தியா
எல்லையில் மோதிக்கொண்டு நிற்கும் இந்தியாவும், சீனாவும் வர்த்தகத்துறையிலும் மோத தொடங்கி உள்ளன.
எல்லையில் மோதிக்கொண்டு நிற்கும் இந்தியாவும், சீனாவும் வர்த்தகத்துறையிலும் மோத தொடங்கி உள்ளன. அமெரிக்காவே அச்சப்படும் அளவிற்கு சீனா வலுவாக வளர்ந்து நிற்பது மறுக்க முடியாத உண்மை தான். ஆனால் அமெரிக்காவையே அசால்டாக கையாளும் சீனா, தனது பக்கத்து நாடான இந்தியாவை சமாளிக்க முடியாமல் திணறுகிறது.
இந்தியாவிற்கு இலங்கை, பாக்கிஸ்தான் என சீனா செக் வைத்தால், இந்தியா வியட்நாம், ஜப்பான் என சீனாவை சுற்றிலும் 17 இடங்களில் செக் வைத்துள்ளது. அதாவது இந்தியா- சீனா இடையே இனி போர் என்று வந்தால், சீனா இந்திய படைகளை 17க்கும் மேற்பட்ட இடங்களில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சீனாவை சுற்றிலும் இந்தியா இப்படி ஒரு வளையத்தை உருவாக்கி வைத்துள்ளது.
சமீபத்தில் டோக்லாம், கல்வான் என இரு இடங்களில் சீன படைகள் இந்தியாவிடம் அடி வாங்கி உள்ளன. இந்நிலையில் முழுபோர் தொடங்கினால் சீனாவை சுற்றி வளைத்து இந்தியா நொறுக்கி விடும். இதனை கண்கூடாக உணர்ந்த அமெரிக்கா இந்தியாவை தன் தலையில் துாக்கி வைத்து கொண்டாடுகிறது. மோடியின் அமெரிக்க வருகையை அமெரிக்கா ஒரு மாதமாக கொண்டாடியது.
மோடி கேட்டதும் அமெரிக்க முதலீட்டாளர்கள் 22 லட்சம் கோடி ரூபாய் வரை இந்தியாவில் முதலீடு செய்ய ஒப்புக் கொண்டனர். விரைவில் இந்த முதலீடும் இந்தியா வந்து சேர்ந்து விட்டால், தற்போது உலகின் 5வது பொருளாதார வல்லரசாக உள்ள இந்தியா 3ம் இடத்திற்கு வந்து விடும். இந்த தகவலை பிரதமர் மோடியே, அமெரிக்க பார்லிமெண்ட் கூட்டுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இப்படி ராணுவ மோதலுக்கு இரு நாடுகளும் முறுக்கிக் கொண்டு நிற்கையில் வர்த்தகப்போரும் உருவாகி விட்டது. சீனா பல்வேறு நாடுகளை இணைக்கும் வகையில் தனது வர்த்தக பயன்பாட்டிற்காக ரோடுகளை அமைத்து வருகிறது.
இதே பாணியில் இந்தியாவும் களம் இறங்கி உள்ளது. முதல் முயற்சியாக கொல்கத்தா முதல் தாய்லாந்து வரை ரோடு அமைத்து வருகிறது. இந்த ரோட்டின் 70% பணிகள் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது. இந்த 1400 கிலோ மீட்டர் நீளம் உள்ள சாலை, இந்தியா- மியான்மர் வழியாக தாய்லாந்தை இணைக்கும்.
இந்த சாலை வங்காளத்தில் உள்ள ஸ்ரீராம்பூரிலிருந்து கொல்கத்தா வழியாக சிலிகுரி-கூச் பெஹார் வழியாக அசாமில் நுழையும், அங்கிருந்து திமாபூர் வழியாக நாகாலாந்து செல்லும். தொடர்ந்து மணிப்பூரின் தலைநகர் இம்பாலை சென்றடையும். பின்னர் மணிப்பூர்- மியான்மர் எல்லையான மோரே வழியாக மியான்மரை இணைக்கும். மியன்மாரின் நகரங்களான பாகோ- யாங்கூன் வழியாக தாய்லாந்தை சென்றடையும். விமானத்தில் பயணம் செய்யாமல் கார் அல்லது பைக்கில் மூன்று நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும் என்றால் எவ்வளவு சிறப்பான விஷயம் என்று கற்பனை செய்து பாருங்கள்.
அதிகபட்சம் 1400 கிலோ மீட்டர் துாரம். 20 முதல் 25 மணி நேரம் பயணம் எடுக்கும். ஆனால் நீண்ட டிரைவ் ஆர்வலர்களுக்கு இந்த பயணம் சாகசம் நிறைந்ததாக இருக்கும்.இந்த சாலையை நிர்மாணிப்பதன் உண்மையான நோக்கம் வடகிழக்கு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதும், இந்திய பொருட்களை ஆசிய நாடுகளுக்கு கொண்டு செல்வதும் ஆகும்.
ஆசியாவின் மற்ற நாடுகளின் சந்தைகள் சீனப் பொருட்களால் நிரம்பியிருக்கிறது. இதனை வீழ்த்தி இந்திய பொருட்களை இந்த நாடுகளுக்கு எளிமையாக ரோடு வழியாக கொண்டு சென்று, அந்த நாட்டின் சந்தைகளை இந்திய பொருட்களால் நிரப்பினால் சீனாவுக்கு கடுமையான வர்த்தக போட்டியை கொடுக்க முடியும். எப்போதுமே சீனாவின் தயாரிப்புகள் மீது ஒரு நம்பகத்தன்மை இருக்காது. ஆனால் இந்திய தயாரிப்புகளுக்கு ஒரு நம்பகத்தன்மை இருக்கும். இதுவே இந்தியாவிற்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது என வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.