காசாவில் ஹமாஸுக்கு ஆதரவாக போர்க் களத்தில் 19 ஆயுதக்குழுக்கள்
ஹமாஸுக்கு ஆதரவாக ஹிஸ்புல் லா, ஹபிபுல்லா, தலீபான் உட்பட 19 ஆயுதக்குழுக்கள் போரில் இறங்க தயாராக அணிவகுத்து நிற்கின்ற னர்;
இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலுக்கு அந்த நாடு கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதனை எதிர்கொள்ள முடியாமல் ஹமாஸ் இயக்கத்தினர் தடுமாறி வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் படையினர் 18 லட்சம் பேர் பாலஸ்தீனத்தை சுற்றி வளைத்து நிற்கின்றனர். மூன்று லட்சத்து எண்பதாயிரம் பேரும் போரில் இறங்க தயாராக உள்ளனர். இதனால் ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா, ஹபிபுல்லா, தாலீபான் இயக்கத்தினர் உட்பட பத்தொன்பது ஆயுதக்குழுக்கள் களம் இறங்குவதாக அறிவித்துள்ளனர்.
இவர்கள் இஸ்ரேல் படையினருடன் மோத தயாராக நிற்கின்றனர். ஈரான், சிரியா, லிபியா நாடுகள் ஏற்கெனவே முறுக்கிக் கொண்டு நிற்கின்றன. ஈரானும் போருக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் துருக்கியின் தொனியும் சற்று மாறுகிறது. முதலில் மிகுந்த சமாதானத்துடன் பேச வந்த அந்த நாடு தற்போது தனது தொனியை சற்று மிரட்டலாக மாற்றி வருகிறது. அரபுநாடுகளின் படைகளும் கிட்டத்தட்ட தயார் நிலைக்கு வந்து விட்டன. பாகிஸ்தான், ரஷ்யா, சீனா நாடுகள் பாலஸ்தீனத்திற்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆயுத உதவிகளும் வழங்கி வருகின்றனர்.
இஸ்ரேலில் அமெரிக்க விமானப்படையும், கப்பல்படையும் குவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் இஸ்ரேலில் இரண்டு நாள் முகாமிட்டு, போருக்கு தேவையான அத்தனை ஆயுதங்களையும் கொடுத்து விட்டு, வீரர்கள் மற்றும் தேவையான ஆயத்தப்பணிகளை முடித்துள்ளார்.
பாலஸ்தீனியர்கள் 11 லட்சம் பேர் வெளியேற இஸ்ரேல் விதித்த 24 மணி நேர கெடு இன்று அதாவது அக்டோபர் 14ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த கெடு போதாது, நீடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒட்டு மொத்த ஐரோப்பிய நாடுகளும் கள உதவிகள் செய்ய தொடங்கி உள்ளன.
போரின் உக்கிரம் இன்று முதல் மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே லிபியா, சிரியா நாடுகள் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்கி உள்ளது. இந்த பரவல் மேலும் அதிகரிக்கும் போது, அடுத்தடுத்து பல நாடுகளும் களம் இறங்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. பல நாடுகள் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இந்த போரின் போக்கு ஒரு மூன்றாம் உலகப்போரை உருவாக்கி விடுமோ என்ற கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இத்தனை பேர் போருக்காக முறுக்கிக் கொண்டு நிற்கும் நிலையில், ஒரு நாடு கூட சமரசம் பற்றி பேச முன்வராதது மிகப்பெரிய துரதிருஷ்டம் என பல நாடுகள் கவலையும் தெரிவித்துள்ளன. இதனால் இப்போது உலகை சூழ்ந்துள்ள பயங்கரம் அடுத்து எப்படி நகரப்போகிறது என்பது தெரியவில்லை என இந்த போரின் நிலவரத்தை கவனித்து வரும் பல நாடுகள் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே கொரோனா பேரிடரில் உலக நாடுகள் கடும் பாதிப்பினை சந்தித்துள்ள நிலையில், ரஷ்யா- உக்ரைன் போர் உலகின் பல நாடுகளை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல்- பாலஸ்தீன போர் என்ன மாதிரி சிக்கலை ஏற்படுத்தப் போகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.