தாதாக்களால் அமெரிக்காவில் அழியும் வணிகம்
தாதாக்களால் அமெரிக்காவில் சிறுவணிகம் முற்றிலும் அழிந்து வருவதாக கூறப்படுகிறது.;
இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது. ஆனால் அதனால் கிடைக்கும் பலன் மிக, மிக குறைவே. அதாவது பணக்காரர்கள் மட்டும் மேலும் பணக்காரர்களாகி வருகின்றனர். நடுத்தரக் குடும்பங்கள் கூட ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் பொருளாதார சமநிலை மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. பணக்காரர்களுக்கும், நடுத்தர மற்றும் ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி இமயமலைக்கும், அதல பாதாளத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை விட அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் பாடு பெரும் திண்டாட்டமாகி உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் நிலை என்னவென்று பார்க்கலாம்.இரு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் மின்னசோட்டா மாநிலத்தில் ஜார்ஜ் பிளாயிடு எனும் கருப்பர் கடையில் கள்ள நோட்டு கொடுத்து பொருட்களை வாங்க முயல்கையில் வந்த சண்டையில் காவலர் ஒருவர் அவர் மேலே ஏறி உட்கார்ந்தார். இதில் அந்த நபர் மூச்சு திணற வைத்து கொல்லபட்டார். சம்பந்தபட்ட காவலர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கபட்டது.
அதன்பின் நாடெங்கும் கலவரம், வன்முறை. காவல்துறை டிராபிக் ஸ்டாப்பிங்கில் யாரையாவது நிறுத்தினால் கூட அவர்கள் உடனே காமிராவை எடுத்து வைத்துக்கொண்டு காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.
லாஸ் வேகஸில் ஓய்வுபெற்ற காவலர் ஒருவர் சைக்கிளில் செல்கையில் அவர் மேல் காரை சில இளைஞர்கள் ஏற்றிக் கொன்றார்கள். இன பேதங்களை எல்லாம் தாண்டி ஒரு பகுதி மக்களிடம் காவலர்க்ள் என்றால் இனவாதிகள் என்ற இமேஜ் பரவி விட்டது.
அதனால் காவல் துறை இப்போதெல்லாம் ஷாப் லிப்டிங் மாதிரியான கடைகளில் திருடும் குற்றங்களை தடுப்பது கிடையாது. சின்ன திருட்டுக் குற்றங்களையும் தடுப்பது இல்லை. "கடையில் திருடுகிறார்களா? நீயே கவனிச்சுக்க" என விட்டு விடுகிறார்கள். போய் வம்பை விலைக்கு வாங்க அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?
கலிபோர்னியா ஸ்டாக்டன் நகரில் சீக்கியர்கள் நடத்தி வந்த மளிகைக் கடையில் ஒருவன் அடிக்கடி புகுந்து திருடுவான். அதுவும் பகிரங்க திருட்டு. காவல் துறையிடம் புகார் கொடுக்க அவர்கள் இதை எல்லாம் எங்க கிட்ட கொண்டு வராதே என்று விட்டார்கள்.
அதன்பின் அவன் ஒரு பெரிய குப்பைத் தொட்டியை கொன்டுவந்து அது நிறைய பொருட்களை கடையில் இருந்து எடுத்து நிரப்பிக்கொன்டிருந்தான். கடையின் உரிமையாளர் அவனை பிடித்து தடுக்க, சண்டை மூண்டது. அவரும் கடையில் இருந்த அவரது சகோதரரும் சேர்ந்து ஒருவர் அவனை பிடித்து கீழே அமுக்கி திருப்ப, இன்னொருத்தர் ஒரு தடியை கொன்டுவந்து பட்டக்ஸில் அடித்து வெளுக்க தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என அவன் ஓட அவர்கள் இருவரும் "Danda, the Stick Wielding Ass-Beater" என சமூக ஊடகங்களில் புகழ்பெற்று விட்டார்கள்.
ஆனால் இப்படி எல்லா கடைகளிலும் கடைக்காரர்களே சட்டத்தை கையில் ஏந்தும் நிலை ஏற்பட்டுவிட இப்ப என்ன செய்வது என யாருக்கும் தெரியவில்லை. சிகாகோவின் தென்பகுதில் இருந்த மளிகை கடைகள் பலவும் திருட்டை தடுக்க முடியாமல் கடைகளை மூடிவிட்டு ஓட, சிகாகோ மக்கள் "எங்களுக்கு மளிகைக்கடை வேண்டும்" என போராடி வருகிறார்கள்.
இதில் மிக மகிழ்ச்சி அடைந்திருப்பவர் ஒருவர்தான். அவர் தான் நம்ம பாஸ் ஜெப் பிசோஸ். எல்லா கடைகளையும் மூடினால் அவரது ஆன்லைன் விற்பனை தானே கொடிகட்டி பறக்கும்?பிசினஸ் பிஸ்தாக்கள், மற்றும் உள்ளூர் தாதாக்கள் தாங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் தங்கள் கை வரிசையினை காட்டித்தான் வருகின்றனர்.