ஹாங்காங் பத்திரிகை ஆசிரியர்களுக்கு தேசத்துரோக வழக்கில் 'குற்றவாளி' என்று தீர்ப்பு..!

ஹாங்காங்கில் பத்திரிக்கை ஆசிரியர்கள் இரண்டு பேருக்கு அரசுக்கு எதிரான கருத்துக்களை பரப்பியதாக தேசத்துரோக வழக்கில் குற்றவாளி என்று கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2024-08-29 11:09 GMT

இடதுபக்கம் இரண்டாவதாக நிற்பவர் சுங் புய்-குயென், அடுத்தவர் பேட்ரிக் லாம் ஆகியோர்.

Hong Kong News Outlet Stand News and Editors Convicted of Sedition

ஹாங்காங் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 29) சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட நகரத்தில் நடந்து வரும் பாதுகாப்பு அடக்குமுறையின் கீழ் ஒரு குறிப்பிடத்தக்க வழக்கில் தேசத்துரோக கட்டுரைகளை வெளியிட சதி செய்ததாக இப்போது மூடப்பட்டிருக்கும் ஸ்டாண்ட் நியூஸ் ஊடகத்தின் இரண்டு ஆசிரியர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.

Hong Kong News Outlet Stand News and Editors Convicted of Sedition

இந்த தீர்ப்பு உலகளவில் விமர்சனத்தை பெற்றுள்ளது. மேலும் உலக அளவிலான கவனத்தையும் பெற்றுள்ளது. குறிப்பாக ஊடக சுதந்திரம் பாதிக்கப்படுவது பற்றி சந்தேகம் எழுப்பப்பட்டது.

Chung Pui-kuen, (54), மற்றும் Patrick Lam, (36), ஆகியோர் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் வகையிலான குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டனர். ஹாங்காங் 1997 ஆம் ஆண்டு பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்து சீனாவிடம் நகரத்தை ஒப்படைத்ததில் இருந்து பத்திரிகையாளர்கள் அல்லது ஆசிரியர்களுக்கு எதிரான முதல் தேசத்துரோக தண்டனையை இந்தத் தீர்ப்பு பிரதிபலிக்கிறது.

Hong Kong News Outlet Stand News and Editors Convicted of Sedition

ஹாங்காங்கில் தீவிரமடைந்து வரும் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் பத்திரிகை சுதந்திரம் குறைந்து வருவதற்கு ஒரு தெளிவான உதாரணம் என்று அமெரிக்க அரசாங்கம் உட்பட பல்வேறு சர்வதேச பார்வையாளர்களால் இந்த வழக்கின் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பத்திரிக்கை மற்றும் ஊடக சுதந்திரத்துக்கு விழுந்த சாட்டை அடியாகும் இந்த தீர்ப்பு என்று பலரும் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News