லண்டன் மாநகரில் மலையகம் 200 மாநாடு மற்றும் ஓவியக் கண்காட்சி
1844 ஆம் ஆண்டு முதன் முதலாக தமிழகத்தி லிருந்து ஜார்ஜ் பேர்ட் என்பவர் 14 தொழிலாளர் களை அங்கு குடியமர்த்தினார்
இது குறித்து இங்கிலாந்து வாழ் தமிழரான சங்கர் தெரிவித்த தகவல்: லண்டன் மாநகரில் மலையகம் 200 மாநாடு மற்றும் ஓவியக் கண்காட்சி கடந்த வாரம் நடைபெற்றது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டப் பயிர்களான தேயிலை மற்றும் ரப்பர் விளைவித்தலுக்காக தமிழகத் திலிருந்து அழைத்து செல்லப்பட்டு, இலங்கையின் மலையகப் பகுதிகளில் குடியேற்றப்பட்டவர்களே ‘மலையகத் தமிழர்` எனப்படுவார்கள்.
1844 ஆம் ஆண்டு முதன் முதலாக தமிழகத்திலிருந்து ஜார்ஜ் பேர்ட் என்பவர் 14 தொழிலாளர்களை அங்கு குடியமர்த்தினார். இங்கிருந்து தான் மலையக மக்களின் வரலாறு தொடங்குகிறது. பிரித்தானிய முதலாளிகளின் கீழ் சுமார் 150 ஆண்டு கள் வரை கடுமையான சூழ்நிலைகளின் கீழ் உழைத்து, இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்கள் இவர்கள்.
எனினும் 1948ல் இலங்கையிலிருந்து வெள்ளையர்கள் வெளியேறியதும், பல தமிழ்ப் பிரதிநிதிகளின் எதிர்ப்பு களுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட இலங்கை குடியுரிமைச் சட்டத்துக்கு அமைவாக தங்களது குடியுரிமையை நிரூபிக்க முடியாமல் போனதால், இவர்களில் மிக பெரும்பாலோர் இலங்கை அரசாங்கத்தால் நாடற்றவர் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இலங்கைக்கு தொழில் நிமித்தமாக அழைத்து வரப்பட்ட மலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், இலங்கை, தமிழகம் மற்றும் தமிழ் சமூகம் வாழும் இன்னும் பிற தேசங்களில், மலையக மக்களின் 200 வருட வரலாற்றினை நினைவு கூறும் நிகழ்வுகள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றது.
இதன் நீட்சியாக லண்டன் மாநகரில் மலையகம் 200 மாநாடு, ஓவியக் கண்காட்சி, கலை நிகழ்வுகள் மற்றும் கருத்தரங்கு நடைப்பெற்றது. மலையக மக்கள் எதிர்நோக்கிய மற்றும் எதிர்நோக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு, நவீன சமகால ஓவிய முறையை கையாண்டு வரையப்பட்ட ஓவியங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ஓவியம் என்பது வெறுமனே பார்வைக்கு மட்டுமானது அல்ல. அழகியல் உணர்வுடன் ரசிப்பதற்கு மட்டுமே அல்ல. ஓவியம் என்பது ஒரு சமூகத்தின் பிரச்னைகளை வெளிக்கொணரு வதற்கும், அதற்கான தீர்வுகளை சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் உதவக்கூடிய ஒரு ஊடகம். அதை வரலாற்றில் பல்வேறு காலக்கட்டங்களில் பல சமூகங்களை சார்ந்த கலைஞர்கள் பயன்படுத்தியிருக்கி றார்கள். தமிழ் சமூகமும் சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறவில்லை எனலாம்.
மலையக மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் பிரச்னைகளை தீவிர ஆய்வுக்கு உட்படுத்துவதற்கும், அந்த பிரச்னைகளுக்கான தீர்வுகளை அடையாளம் காண்பதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் மத்தியில் எடுத்து செல்வதற்கும், இது போன்ற நிகழ்வுகள் பெரிதும் உதவும் என நம்புகிறேன்.
கூடவே மலையக மக்களின் கலை, கலாசாரம், பண்பாடு, சமூக பொருளாதார நிலை மற்றும் அரசியல் போன்றவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பின்னடைவுகள், செல்ல வேண்டிய தூரம் போன்ற விஷயங்களை வெளிக்கொணர்ந்து ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் என நம்புவோமாக.
இவ்வருடம் முழுவதும் 200 ஆண்டு கால நிகழ்வுகள் பல்வேறு தரப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு நல்ல தொடக்கம். இன்றைய மலையக தலைமுறையினரிடத்தில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் ரீதியான ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
சமூகப் பிரச்னைகள் பற்றி பொது வெளிகளில், சமூக ஊடகங்களில் தீவிரமாக பேசி வருகின்றனர். அவர்களின் அரசியல் பங்கேற்பு, மனித உரிமைகள், கல்வி, சுகாதாரம், தொழில்துறை என்பவற்றில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படுத்தும் என்பது உறுதி என்று சங்கர் தெரிவித்தார்.