ஸ்டெஃபேனியா மெராசினானுவின் பிறந்தநாள், கொண்டாடிய கூகுள் டூடுல்

Google News Today in Tamil - ருமேனிய இயற்பியலாளர் ஸ்டெஃபேனியா மெராசினானுவின் 140வது பிறந்தநாளை கூகிளில் வெளியிட்டு டூடுலுடன் கொண்டாடுகிறது.

Update: 2022-06-18 04:58 GMT

Google celebrates Romanian physicist Stefania Maracineanu-கூகுள் கொண்டாடும் பெண் அறிவியல் மேதை.

Google News Today in Tamil - இன்டர்நெட் ஜாம்பவானான கூகுள் ருமேனிய இயற்பியலாளர் ஸ்டெஃபேனியா மெராசினானுவின் 140வது பிறந்தநாளை கூகிளில் வெளியிட்டு டூடுலுடன் கொண்டாடுகிறது. கதிரியக்க கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சியில் முன்னோடியாக இருந்த பெண் அறிவியலாளர்களில் மெராசினியானுவும் ஒருவர்.

ஸ்டெஃபேனியா மெராசினா ஜூன் 18ம் தேதி 1882 ம் ஆண்டில் ரோமானிய நாட்டில் புக்கரெஸ்ட் -ல் பிறந்தார். அவர் 1910 ம் ஆண்டில் இயற்பியல் மற்றும் வேதியியலில் அறிவியல் பட்டம் பெற்றார். புக்கரெஸ்டில் உள்ள பெண்களுக்கான மத்திய பள்ளியில் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு பணியில் இருந்தபோது ரோமானிய அறிவியல் அமைச்சக உதவித்தொகையினை பெற்றார். பின்னர் பாரிஸில் உள்ள ரேடியம் நிறுவனத்தில் தனது ஆராய்ச்சியைத் தொடர முடிவு செய்தார்.

அப்போது இயற்பியலாளர் மேரி கியூரியின் ரேடியம் நிறுவனம், கதிரியக்க ஆய்வுக்கான உலகளாவிய மையமாக மாறிக் கொண்டிருந்தது. கியூரி கண்டுபிடித்த ஒரு தனிமமான பொலோனியம் குறித்த தனது PhD ஆய்வறிக்கையில் மெராசினானு தனது ஆய்வினை மேற்கொள்ளத்தொடங்கினார்.

ர்யுகு சிறுகோளில் உயிர்களுக்கான சாத்தியக்கூறு -ஜாக்ஸா ஆய்வு

Google celebrates Romanian physicist Stefania Maracineanu-பொலோனியத்தின் அரை-வாழ்க்கை(half-life) பற்றிய தனது ஆராய்ச்சியின் போது, ​​அரை-வாழ்க்கைத் தன்மை அது வைக்கப்பட்ட உலோகத்தின் வகையைச் சார்ந்ததாகத் தோன்றியதை மெராசினானு கவனித்தார். பொலோனியத்தில் இருந்து ஆல்ஃபா கதிர்கள் உலோகத்தின் சில அணுக்களை கதிரியக்க ஐசோடோப்புகளாக மாற்றியது அவரை ஆச்சரியப்பட வைத்தது. அவரது அந்த ஆராய்ச்சி செயற்கை கதிரியக்கத்தின் முதல் எடுத்துக்காட்டாக அமைந்தது.

மெராசினானு இயற்பியலில் தனது PhD-ஐ முடிப்பதற்காக பாரீஸ் Sorbonne பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இரண்டே ஆண்டுகளில் முனைவர் பட்டம் பெற்றார். மியூடனில் உள்ள வானியல் ஆய்வகத்தில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர் மீண்டும் அவர் ரோமேனியாவுக்குத் திரும்பினார். கதிரியக்க ஆய்வுக்கான தனது முதல் ஆய்வகத்தை நிறுவினார்.

அங்கு மெராசினானு தனது நேரத்தை செயற்கை மழையைப் பற்றி ஆராய்வதற்காக முழுமூச்சுடன் செயல்பட்டார். அதில் அவரது முடிவுகளை சோதிக்க அல்ஜீரியாவிற்கு ஒரு பயணம் செய்தார். பூகம்பங்களுக்கும் மழைப்பொழிவுக்கும் உள்ள தொடர்பை அவர் ஆய்வு செய்தார். நிலநடுக்கத்திற்கு வழிவகுக்கும் பூமியின் மையத்தில் கதிரியக்கம் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிப்பதை கண்டறிந்து தெரிவித்தார்.

1935-ம் ஆண்டில், மேரி கியூரியின் மகள் ஐரீன் கியூரி மற்றும் அவரது கணவர் செயற்கை கதிரியக்கத்தைக் கண்டுபிடித்ததற்காக கூட்டு நோபல் பரிசைப் பெற்றனர். மெராசினானு நோபல் பரிசுக்கு போட்டியிடவில்லை. ஆனால் கண்டுபிடிப்பில் அவரது பங்கும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கேட்டார்.

1936-ம் ஆண்டில் ருமேனியாவின் அகாடமி ஆஃப் சயின்சஸ் மூலம் மெராசினேனுவின் பணி அங்கீகரிக்கப்பட்டது. அங்கு அவர் ஆராய்ச்சி இயக்குநராக பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் கண்டுபிடிப்புக்கான உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறவில்லை என்பது வருத்தமான செய்தி.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News