அமெரிக்காவின் நட்பு நாடகம் முடிவுக்கு வருவது எப்போது?
அமெரிக்கா தரும் தொல்லைகளால், வரும் 2025ம் ஆண்டு ஏப்ரல் வரை உலகளவில் பிரச்னைகள் தீராது.;
அமெரிக்காவிற்கு இந்தியாவின் தேவை பல வகைகளில் உண்டு. அமெரிக்காவின் நட்பு என்பது உணர்வு ரீதியிலோ அல்லது நம்பிக்கை மூலமோ நடப்பதல்ல. அதற்கு ஆதாயம் இருக்கும் வரை அந்த நாடு நட்பு நாடு, இல்லாவிட்டால் அது எதிரிதான்.
அப்படி அமெரிக்காவிற்கு சீனா மிகப்பெரிய பிரச்சினை ஆன பின்பு, அதனால் சீனாவை சமாளிக்க முடியாது என்பதும், அதன் நேட்டோ நாடுகளால் அது சாத்தியமல்ல என்பதால், சீனாவை உலகில் எதிர்க்கும் இந்தியா அதற்கு நட்பு நாடாக பார்த்தது.
அதன் எதிர்பார்ப்பு இந்திய- சீன போர் மூலம், தனக்கும் லாபம், எதிர்காலத்தில் தனது சூப்பர் பவர் அந்தஸ்துக்கும் பிரச்சினை இல்லை என்று எதிர்பார்த்தது. சீனா, இந்தியாவை தாக்கினால் நாங்கள் இந்தியாவிற்கு ஆதரவு கொடுப்போம் என்றும், PoK வை மீட்க இந்தியாவிற்கு உரிமையுண்டு, அதை நாங்கள் ஆதரிப்போம் என்றளவிற்கெல்லாம் பில்டப் செயதது.
ஏனெனில் PoK இந்தியா வசம் வந்தால், பாகிஸ்தான் உடன் சீனா துண்டிக்கப்பட்டு விடும் என்பதாலும், அதற்காக சீனா ஆதரவாக போரில் குதித்தால் ஆடு நனைவதாக ஓநாய் வருந்தியது.
சீனா, தன்னுடைய பொருளாதார ஆதிக்கத்திற்கு இந்தியா பெரிய பிரச்சினை ஆவதாலும், அதன் பலம் அதிகரிப்பதாலும், சீனா பல வகைகளில் பாதிக்கப்பட்டது. அதனால் இந்தியா மீது சீனா எரிச்சலாகி எல்லை முதல் எல்லா வகையிலும் பிரச்சினை செய்தது.
இந்த நிலையில் பிரிக்ஸ் கரன்சி விஷயத்தில், அதன் ஒற்றுமைக்கு, சீன-இந்திய பிரச்சனை ஒரு தடைகல் ஆனது. அதனால் ரஷ்யா தலையிட்டதன் மூலம் இந்திய- சீன பிரச்சினைகள் விலக தொடங்கி இருப்பதால் அமெரிக்கா இந்தியாவின் மீது காண்டாகி தாக்குதல் தொடங்கி இருக்கிறது. சமீபத்திய பங்களாதேஷ் பிரச்சினை, அதன் அடிமை நாடான கனடா செய்யும் பிரச்சினை, இந்தியாவில் உள்ள சில தலைவர்கள் மூலம் கொடுக்கும் பிரச்சினைகள் என்று எல்லாம் அமெரிக்காவின் கைவண்ணமே.
அதே சமயம், சீனா இப்போது இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை குறைத்துள்ளது, இது தற்காலிகமானதே. அது தேர்தலில் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரஷ்ய-அமெரிக்க உறவு இந்தியாவால் சீராக வாய்ப்புகள் அதிகம். அதை சீனா ஒரு போதும் விரும்பாது. அதனால் ரஷ்யா-அமெரிக்காவை நெருங்காமல் பார்த்துக் கொள்ள ஈரான் முதல் தைவான் வரை பிரச்சினைகளை கையில் எடுக்கலாம். எப்படியிருந்தாலும் இந்த உலகம் வரும் மார்ச், ஏப்ரல் மாதம் வரை பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்புண்டு.