வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிபரின் நாய்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நாய் கமாண்டர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற் றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-06 09:30 GMT

பைல் படம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நாய் கமாண்டர் (Commander) வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனால் German Shepherd வகை நாய் வளர்க்கப்படுகிறது. இது கடந்த வாரம் காவல் அதிகாரி ஒருவரை கடித்ததில் காயமடைந்தார். உடனடியாக அவருக்கு அங்கே மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.

இந்த கமாண்டர் நாய், 2022 ஒக்டோபரில் தொடங்கி ஜனவரி வரை சுமார் 10 முறை இரகசிய சேவைத் துறையினரை கடித்துள்ளது அல்லது தாக்கியிருக்கிறது.முன்னதாக, அதிபர் மாளிகையில் பணிபுரிவோரிடம் ஆக்ரோஷமாக இருந்த காரணத்தால், மேஜர் என்ற நாய் வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டது.

இந்த நிலையில், வெள்ளை மாளிகை பாதுகாவலர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கமாண்டர் நாயை மாளிகையைவிட்டு வெளியேற்றியுள்ளதாக அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News