புருனே நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர்..!

புருனே நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி தான்.;

Update: 2024-09-06 06:02 GMT

புருனே அரண்மனை.

பிரதமர் மோடி தன் திட்டமிட்ட பயணத்தின் படி புருனே நாட்டை சென்றடைந்தார். அங்கு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அரசாலும் மக்களாலும் வழங்கப்பட்டது. அது மலேசியாவின் கிழக்கு பகுதியினை அன்மித்தது என்பதாலும் முன்பு பல இந்திய குடியேற்றம் குறிப்பாக தமிழக வம்சாவளி நிறைந்தது என்பதாலும் அத்தேசம் இந்திய மக்கள் குறிபிடத்தக்க அளவில் கொண்ட நாடு. இந்த இந்திய வம்சாவளி மக்கள் அவரை மிகுந்த அன்புடனும் ஆனந்த உற்சாகத்துடனும் வரவேற்றார்கள்.

காரணம் புரூனே செல்லும் முதல் பாரத பிரதமர் மோடி தான், இதற்கு முன் இருந்த இந்திய பிரதமர்களுக்கு இப்படியெல்லாம் செல்லும் திட்டமில்லை காரணம். புரூனே பல விவகாரங்களில் வித்தியாசமான கோணம் கொண்ட நாடு.

இதனால் சில நாடுகளின் உறவுகளுக்கு அஞ்சி இந்தியா அதனுடன் பெரிய தொடர்பை வைக்கவில்லை. மோடியின் கொள்கை தேசநலனுக்கான கூட்டணி என்பது அவ்வகையில் புருனே சீனாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய நிலையில் அதனோடு ஒரு உறவு பாலம் ஏற்படுத்துகின்றார். இது இருநாடுகளுக்கும் நல்லது.

புருனை ஒரு முடியாட்சி நாடு. அங்கு மன்னர் ஹாஜி ஹசனல் போல்கியா ஆள்கின்றார். அவருடன் மோடி பலதுறைகள் ஒத்துழைப்பு பற்றி பேச்சு நடத்தினார். உலகின் மிகப்பெரிய அரண்மனை புரூனே அரண்மனை. பல கிமீ சுற்றளவில் கட்டப்பட்ட மாளிகை அது. அங்கு நீச்சல் குளம் மட்டும் ஐந்து உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் எண்ணிக்கை ஆறாயிரத்தை தாண்டும்.

மாளிகையின் கோபுரத்தில் தங்க தகடெல்லாம் பதிக்கபட்டிருக்கும். தொடுவதெல்லாம் பொன் எனும் அளவு அங்கு எல்லாமே தங்கம். அப்படியான மாளிகையில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்பட்டது. பொதுவாக புருனே அரசு வித்தியாசமான அரசியலை செய்யும். யாரையும் அழைக்காது யாரையும் கவுரவிக்காது, பெரிய ஆர்வத்தை யார் மேலும் காட்டாது.

ஆனானபட்ட அமெரிக்கா அதிபரை கூட அது வரவேற்காது. அப்படியான புருனை மோடியினை அழைத்து கவுரவிக்கின்றது என்றால் மோடி உலக அரங்கில் எப்படியான இடம் பெற்றிருக்கின்றார் என்பதை சுலபமாக ஊகிக்க முடியும். அதனால் தான் அவரை ஆனந்தமும் கண்ணீரும் பொங்க வரவேற்று மகிழ்கின்றார்கள் புருனே இந்திய வம்சாவழி மக்கள். தங்கள் பூர்வீகநாட்டின் பெருமகன் பெருமை குறித்து அவர்களுக்கு தெரிந்திருக்கின்றது.

Tags:    

Similar News