Elephants Save Rhino From Lions-காண்டாமிருகத்தை காப்பாற்ற போராடும் ஒற்றை யானை..!

மீட்க யானையெனும் நட்புக்கூட்டம் இருந்தும் மீள முடியாத சேற்றில் சிக்கிய காண்டாமிருகத்தின் சோக வீடியோ வைரலாகி வருகிறது.

Update: 2024-01-11 08:31 GMT

Elephants save rhino from lions-காண்டாமிருகத்தைக் காப்பாற்ற போராடும் யானை 

Elephants Save Rhino From Lions, Elephants Try to Save Rhino From Hungry Lions, Etosha National Park and Features a Black Rhino, a Pride of Lions and a Herd of Elephants, Elephants Bravely Protect a Stuck Rhino From Lions

நமீபியாவின் எட்டோஷா தேசியப் பூங்காவின் மையப்பகுதியில், உயிர் பிழைப்பு மற்றும் எதிர்பாராத நட்பின் உதவி கிடைத்தும் பலன் கிடைக்காத ஒரு சோகத்தின் கதை வைரலாக வீடியோவில் காணப்பட்டது. YouTube இல் லேட்டஸ்ட் சைட்டிங்ஸ் மூலம் பகிரப்பட்ட காட்சிகள், சேற்றில் சிக்கிய ஒரு கருப்பு காண்டாமிருகத்தின் தீவிர போராட்டத்தை படம் பிடிக்கிறது.

சிங்கங்கள் காண்டாமிருகத்தை உணவாக்க முற்படுவதையும் யானைக் கூட்டம் காப்பாற்ற முயன்றும் சாத்தியமில்லாத சூழலில் மீட்பரைக் கைவிட்டுச் செல்கின்றன, அந்த யானைக்கூட்டம். மீட்பர் கிடைத்தும் மீட்கமுடியாத சோகம்.

Elephants Save Rhino From Lions

இந்த வீடியோவை கிம் ஹாத்வே படமாக்கியுள்ளார். அந்த வீடியோ அனைத்தும் ஒரு பெரிய கருப்பு காண்டாமிருகத்துடன் தொடங்கியது. கடுமையான வெப்பத்தில் இருந்து ஓய்வு தேடி, ஒரு நீர்க்குழாய்க்குச் சென்று சேற்றில் சிக்கியது.

சிங்கங்கள் சேற்றில் சிக்கிய காண்டாமிருகத்தை உணவாக்கிக்கொள்ள சாத்தியமான வழிகளை தேடிக்கொண்டிருந்தன. காண்டாமிருகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை உணர்ந்து, சாத்தியமான இரை ஒன்று கிடைத்துவிட்டது என்று சிங்கம் பெருமை பட்டுக்கொண்டன. ஆனால், சிங்கங்களின் அந்த சலசலப்பை உணர்ந்த யானைக்கூட்டம் தலையிட்டதால் சிங்கங்கள் காண்டாமிருகத்தை உணவாக்கும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. யானைகள் சத்தம் போட்டு, சிங்கங்களை பின்வாங்கச் செய்தன.

Elephants Save Rhino From Lions

"அச்சுறுத்தல் ஏற்பட்டதால் , பெரும்பாலான யானைக்கூட்டங்கள் தங்கள் வழியில் தொடர்ந்தன. ஆனால் ஒரு யானை மட்டும் காண்டாமிருகத்தை சிங்கங்களின் உணவுக்கு விட்டுச் செல்வதில் மகிழ்ச்சியடையவில்லை. அந்த யானைக்கு காண்டாமிருகத்தின் மீது கருணை ஏற்பட்டிருந்தது.

சேற்றில் சிக்கிக்கொண்டிருந்த காண்டாமிருகத்தை அதில் இருந்து வெளியே எடுக்க அது தீவிரமாக முயன்றது. அதன் தந்தங்களையும் கால்களையும் பயன்படுத்தி, எந்த பிடிமானமும் இல்லாமல், அது காண்டாமிருகத்தைத் தள்ளித் தள்ளி, தள்ளியது. ஒரு கட்டத்தில் யானையால் முடியாதபோது ஆபத்து அந்த பாவப்பட்ட காண்டாமிருகத்தின் மேல் இருப்பது போல் கூடத் தோன்றியது.

Elephants Save Rhino From Lions

காண்டாமிருகத்தைக் காப்பாற்றும் அந்த போராட்டம் பல மணிநேரம் நீடித்தது. துரதிர்ஷ்டவசமாக யானையால் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. சிங்கங்கள் இன்னும் சுற்றிக் கொண்டிருப்பதை அறிந்தாலும் அது நகர வேண்டியிருந்தது,” என்று தலைப்பு அந்த விடீயோவின் விளக்கப்பட்டது.

ஒற்றை யானை காண்டாமிருகத்தைக் காப்பாற்றப்போராடும் வீடியோ உள்ளது 

https://youtu.be/ei4Epgz8dgA

Tags:    

Similar News