நம்ம ஊரு அரசியல்வாதிகளை மிஞ்சிய டொனால்டு டிரம்ப்..! அட்ராசக்கை..!
தன்னையும் தன் ஆதரவாளர்களையும் குப்பைகள் என்று சொன்னதால் குப்பை வண்டியில் பயணித்து வாக்கு சேகரித்த அதிபர் வேட்பாளட் டொனால்டு டிரம்ப்.
நம் ஊரு அரசியல்வாதிகளை மிஞ்சும் வகையில், குப்பை லாரியில் பயணித்து ஓட்டு சேகரித்தார் டொனால்ட் ட்ரம்ப்.
நம்ம ஊரில் தேர்தல் வந்தால் ஓட்டு சேகரிக்கும் போது அரசியல்வாதிகள் அடிக்கும் கூத்து சொல்லி மாளாது. குழந்தைகளை குளிக்க வைப்பது, துணி துவைப்பது, டீ போட்டு தருவது, பஜ்ஜி சுடுவது என பல்வேறு அதகளங்களை செய்து வாக்காளர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். இதே போன்ற பாணியில், தான் அமெரிக்க அரசியல்வாதிகளும் செயல்பட்டு வருகின்றனர்.
அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப், குப்பை லாரியில் பயணித்து கவனம் ஈர்த்துள்ளார். அவரது ஆதரவாளர்களை குப்பைகள் என அதிபர் ஜோ பைடன் விமர்சித்த நிலையில் இந்த அதிரடி எதிர்ப்பை ட்ரம்ப் வெளிக்காட்டியுள்ளார்.
குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப், தனது பெயரைத் தாங்கிய போயிங் 757 ரக விமானத்தில் இருந்து தரையிறங்கினார். உடனடியாக வெள்ளை நிறத்தில் அவரது பெயருடன் தயாராக இருந்த குப்பை வண்டியில் பயணித்தார்.
இதன் மூலம் ஜோ பைடன் தெரிவித்த கருத்தை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு எதிரான தேர்தல் பிரசாரத்தில் தனக்கு சாதகமாக ட்ரம்ப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். “எப்படி உள்ளது எனது குப்பை லாரி? என கேட்ட, கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடனுக்கு நான் கொடுக்கும் மரியாதை இது” என ட்ரம்ப் தெரிவித்தார்.
நவம்பர் ஐந்தாம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அதிபர் தேர்தலுக்கான மக்கள் ஆதரவில் டொனால்டு டிரம்ப் முந்தி நிற்கிறார். அவரே அதிபராக வாய்ப்புகள் அதிகம் உள்ளது என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் இவரது சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.