உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா மோடி?

பிரதமர் மோடியின் போலந்து மற்றும் உக்ரைன் பயணத்தின் மூலம் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.;

Update: 2024-08-23 05:15 GMT

மோடி, புதின், செலன்ஸ்கி 

கடந்த 21ந் தேதி போலந்து சென்ற மோடி, அங்கிருந்து ரயில் மூலமாக உக்ரைனை சென்றடைந்தார். மோடி உக்ரைனில் இருக்கும் இந்த சமயத்தில் எந்த தாக்குதலிலும் உக்ரைனோ ரஷ்யாவோ ஈடுபடாது எனும் செய்தி உலகில் பலருக்கு தீயாய் பற்றி எரிந்து கொண்டுள்ளது. போலந்து இந்தியாவுடன் நெருக்கமான நாடு என்பது பலருக்குத்  தெரியாது. 1940ல் இரண்டாம் உலகப் போர் நடந்த போது, போலந்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. குஜராத் ஜாம்நகரின் ராஜா, தாய் தந்தையை இழந்த, 500 போலந்து குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டார்.

இவர்களை படிக்க வைத்து, ஆளாக்கி, பெரிய அரசு பதவிகள் பெறும் அளவில் உயர்த்தினார். இது மட்டுமின்றி, ஆயிரம் ஆண்கள் பெண்களை, தனது நண்பர் ஜோத்பூர் மகராஜாவின் அரண்மனையிலும், 500 ஊனமுற்றவர்களை சோலாப்பூர் மகராஜாவின் மருத்துவமனையில் வைத்தியம் பார்க்கவும் ஏற்பாடு செய்தார். இந்த குழந்தைகள் வளர்ந்து, போலந்து, இங்கிலாந்து என பல நாடுகளில் பெரும் பதவியில் இருந்தாலும், இப்பவும் இவர்கள் குடும்பத்தினர், வருடத்திற்கு ஒரு முறை குஜராத் ஜாம் நகரில் வருவது வழக்கம். அவர்கள் தங்கியிருந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறார்கள்.

பல குஜராத்திகளும் போலந்தில் வசிக்கின்றனர். 45 வருடத்திற்கு பிறகு இந்திய பிரதமர் மோடி வருகை தருவதை அவர்கள் பெரிய கொண்டாட்டமாக ஏற்பாடு செய்து அசத்தி விட்டனர். சரி போலந்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்?. உக்ரைனில் சிக்கி தவித்த இந்திய மாணவர்களை மீட்பதில் போலந்து மிகப்பெரிய பங்கு வகித்ததும் ஞாபகமிருக்கலாம். போலந்து மிகவும் அமைதியை விரும்பும் மக்கள் நிறைந்த நாடு. உக்ரைனுடன் நெருங்கிய தொடர்பு உள்ள நாடு. நேட்டோவில் இணையும் குழப்பத்தில் இரண்டும் ரஷ்யாவின் எதிரிகள் ஆக்கப்பட்டன. உக்ரைன் பிரச்சினை தீர முதலில் போலந்தை சரி செய்ய வேண்டும். அதன் மூலம் உக்ரைனை சரி செய்ய முயலலாம்.

சரி, மோடி உக்ரைன் ரஷ்யா- போரை நிறுத்துவாரா என்று கேட்டால், அதற்கு பதிலளிக்க வெளியுறவுதுறை வெளியிட்ட அறிவிப்பு ஒன்றே போதுமானது. அமெரிக்க பத்திரிகைகள் முந்திரிக்கொட்டை போல மோடி உக்ரைன் செல்வது போரை நிறுத்தவா என கேட்டதற்கு, வெளியுறவுத்துறை அதிகாரி "India will not stop your War" என அதிரடியாக பதில் அளித்தார்.

போரை ஆரம்பித்த போது உக்ரைன் அதிபர், ரஷ்யாவையே இல்லாமல் ஆக்doesகி விடுவேன் என தமிழ்பட ஹீரோ ஸ்டைலில் தொடை தட்டினார். ரஷ்யாவோ நின்று நிதானமாக விளையாடியது. ஒரு கட்டத்தில் உக்ரைன் அதிபர் புலம்ப ஆரம்பித்தார், ஆயுதங்கள் கொடுங்கள் என உலக நாடுகளிடம் கதறினார்.

மேலை நாட்டு பத்திரிகைகளோ, மொபைல் கேமிங்கில் அடிப்பது போல உக்ரைன் ரஷ்யாவை அடித்து நொறுக்குவதாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன. இரண்டு வருடங்களில் 200 பில்லியன் டாலர்கள் அமெரிக்கர்களின் வரி, இந்த போர் மூலம் ஆயுத வியாபாரிகளுக்கு போனது. டீப்ஸ்டேட்டின் நிறுவனங்கள் போர் முடிவதற்கு முன்பாகவே, போர் முடிந்த பின் வளர்ச்சி பணிகளுக்காக நிலத்தை வாங்குவதும், உடன்படிக்கை போடுவதும் என நீட்டிய இடத்தில் எல்லாம் உக்ரைன் அதிபர் கையெழுத்து போட்டு கொடுத்தார்.

ஆரம்பத்தில் மதம் பிடித்து ஆடிய நேட்டோ நாடுகள், இரண்டு வருடத்தில் ஆட்டம் காண ஆரம்பித்தன. எரிபொருள் விலை, பொருளாதார தள்ளாட்டம் என விழி பிதுங்கி நின்றன. இது போதாமல் கள்ளத்தனமாக உள்ளே நுழைந்த கூட்டத்தின் வன்முறையால் மக்கள் வெறுத்து போயினர்.

அமெரிக்கர்களுக்கு எப்பவுமே அவசர புத்தி, எங்காவது யாராவது குண்டு போட்டு செத்தால் தான் ஆயுத உற்பத்தியாளர்களுக்கு சோறு கிடைக்கும். இதனால் பிரச்னைகளை எல்லா இடத்திலும் பற்றவைத்து விடுவார்கள், அதனை அணைப்பது அவர்களால் முடியாத காரியம். ஒரு கட்டத்தில் போட்டது போட்ட படி கிடக்க, வேட்டியை மடித்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள்.

அதுவும் இன்றைய நிலையில், ஐரோப்பாவில் குழப்பம், இஸ்ரேல்-ஹமாஸ், ஈரான் பிரச்சினை, ஹூதிஸ் பிரச்சினை, பாகிஸ்தான் முழுவதும் எரிந்து கொண்டிருக்கிறது, இவையெல்லாம் போதாது என பங்களாதேஷும் எரிய ஆரம்பித்து விட்டது. நவம்பரில் தேர்தல் வருவதற்கு முன் எங்கே பற்ற வைக்க முடியும் என அமெரிக்க டீப் ஸ்டேட் குழுவினர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ட்ரம்ப் வெற்றி பெற்று அதிபராவதை தேர்தல் தில்லு முல்லு மூலம் தடுக்க இயலாவிட்டால், அவர் உலகில் எரியும் பிரச்சினைகளை அணைப்பதிலேயே 4 வருடம் முடிந்து விடும் என எதிர் பார்க்கின்றனர்.

எப்படியாவது இந்தியாவை எல்லா பிரச்சினைகளிலும் கோர்த்து விட எல்லா முயற்சிகளும் ஜோராக நடக்கிறது. ஆனால் நமது பிரதமர் மோடியின் அரசு, போரையெல்லாம் முடித்து வைக்குமா? அதனால் நமக்கு என்ன லாபம்? ஐரோப்பா இன்னமும் எரிந்தால் நமது இஷ்டத்திற்கு வளைக்கலாம், அமெரிக்காவின் சீனாவின் பொருளாதாரம் இன்னமும் வலிவற்று போனால், உட்கார்ந்து பேசும் போது, நம்முடைய எதிர்பார்ப்புகளை கட் அன்ட் ரைட்டாக பேசலாம். அதை விடுத்து, மனிதத்துவம், நியாயம் நீதி என போரை முடித்து வைப்போமா என்ன?

சுவிட்சர்லாந்தில் கூட்டம் போட்டு, ரஷ்யா இல்லாமல், உக்ரைனை வைத்துக் கொண்டு, ரஷ்ய முதலீடுகளை முடக்கி, அதில் வரும் லாபத்தை உக்ரைன் அதிபருக்கு வட்டிக்கு கொடுத்த, இவர்களை நம்பி, களத்தில் இறங்க முடியுமா? பார்க்கலாம், என்ன செய்யப் போகிறார்கள் என.

Tags:    

Similar News