உலக கோப்பை கிரிக்கெட் விளம்பர வருவாய் எவ்வளவு தெரியுமா

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி களை ஒளிபரப்பும் போது வரும் விளம்பர வருவாய் எவ்வளவு என கணக்கிட்டால் தலை சுற்றுகிறது.

Update: 2023-10-04 11:00 GMT

பைல் படம்

பத்து வினாடி விளம்பரத்திற்கு ரூபாய் 30 லட்சம் என்று நிர்ணயித்திருக்கிறது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை விளம்பர உரிமையாளர் டிஸ்னி ஸ்டார். 46 நாட்கள் 48 போட்டிகள் 10 பெரும் நகரங்களில் நடைபெற உள்ளன.

தீபாவளி, துர்கா பூஜா பண்டிகைகளும் வருவதால் விளம்பரதாரர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கின்றனர். கோக்கோ கோலா, லிம்கா, இந்துஸ்தான் யூனிலீவர், போன் பே, மஹிந்திரா மகேந்திரா, கேட்பரி டைரி மில்க், எமிரேட்ஸ் ஏர் லைன்ஸ் போன்ற நிறுவனங்கள் விளம்பர மழை பொழிய காத்திருக்கின்றன.

10 வினாடிக்கு 30 லட்சம் என்பது ஆரம்பகட்ட போட்டிகளுக்கு மட்டுமே. இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் ரேட் இன்னும் கூடும். அரை இறுதி, இறுதிப் போட்டிகளுக்கு பன்மடங்கு அதிகரிக்கும். கிரிக்கெட் போட்டியை விளம்பரதாரர்கள் பயன்படுத்துகிறார்களா? அல்லது விளம்பரதாரர்களுக்காகவே கிரிக்கெட் போட்டியா? என்பது குழப்பமாக இருக்கிறது. விளையாட்டு தேவைதான், மொத்த பணத்தையும் ஒரே விளையாட்டில் கொட்ட வேண்டுமா?

பிசிசிஐ பொருளாளர் பதவி என்பது மத்திய கேபினட் அமைச்சர் பதவியை விட பவர்ஃபுல். காரணம் இந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியினை ஒளிபரப்ப டிவிக்களில் வரும் விளம்பர வருமானம் எவ்வளவு என்பதை கணக்கிட்டால் தலைசுற்றுகிறது.

Tags:    

Similar News