மரண தண்டனையை நேரடியாக ஒளிபரப்ப கோர்ட் உத்தரவு
Court Order- சக கல்லூரி மாணவியை கொலை செய்த மாணவருக்கு வழங்கப்படும் மரண தண்டனையை நேரலையாக ஒளிபரப்ப எகிப்து கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.
Court Order- எகிப்தில் கெய்ரோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் தன்னுடன் படிக்கும் சக மாணவியை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதித்த கோர்ட் அந்த மரண தண்டனையை நேரலையில் ஒளிபரப்பு செய்ய அறிவுறுத்தியுள்ளது.
கடந்த மாதம் வடக்கு எகிப்தில் உள்ள மன்சூரா பல்கலைக்கழகத்திற்கு வெளியே சக மாணவி நயேரா அஷ்ரப்பைக் கொன்றதாக 21 வயதான மொஹமட் அடெல் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார். இவர் தன்னுடைய திருமண விருப்பத்தை மாணவி நயேரா நிராகரித்ததால் இதை செய்துள்ளார். இதனால் அவருக்கு கடந்த ஜூன் 28 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. மேலும் அந்த மரண தண்டனை நிறைவேற்றுவதை நேரடியாக ஒளிபரப்புமாறு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்க அவரது மரணதண்டனையை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புமாறு கேட்டு நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2