ஒலிம்பிக் போட்டிகளில் வீரர், வீராங்கனைகளுக்கு ஆணுறை வழங்குவது ஏன்?

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்,வீராங்கனைகளுக்கு ஆணுறை வழங்கப்படுவது ஏன் என்பதை விளக்கும் செய்தி.

Update: 2021-08-02 05:37 GMT

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான மாதிரி படம் 

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆணுறைகள் வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆணுறைகள் வழங்கும் நடைமுறை ஏன் வந்தது? அதை கொஞ்சம் பார்ப்போமா?

1988ம் ஆண்டு தென்கொரியாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்தான் முதன் முதலில் வீரர்களுக்கு ஆணுறை வழங்கும் நடைமுறை தொடங்கியது. பால்வினை நோய்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது. 1980 காலகட்டங்களில் எச்ஐவி எய்ட்ஸ் நோய் தாக்கங்கள் அதிக அளவில் இருந்தது. அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில்தான் அந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது.

மேலும் ஒலிம்பிக் போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் அருகருகே உள்ள அறைகளில் தங்கும் சூழலும் ஏற்படும். அவ்வாறான நெருக்கங்களில் எச்ஐவி எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்கள் ஏற்படாமல் இருப்பதற்கான விழிப்புணர்வுக்காகவே அந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது. அந்த நடைமுறை இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

தற்போது நடை பெற்றுவரும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்,வீராங்கனைகள் தங்குவதற்கு தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் இருப்பதால் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வீரர், வீராங்கனைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்,வீராங்கனைகளுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சத்து அறுபதாயிரம் ஆணுறைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் வீரர்,வீராங்கனைகளுக்கு ஆணுறைகள் வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டாம் என்று ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்தனர். அதனால் 4 நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து ஆணுறைகள் வழங்க கேட்டுக்கொண்டதாகவும் கூறியுள்ளனர்.

கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் வீரர்,வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணுறைகளை ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி இருக்கும்போது பயன்படுத்தாமல் போட்டிகள் முடிந்த பின்னர் வீடுகளுக்கு எடுத்துச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியும் போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

Tags:    

Similar News