பா.ஜ.க.,வுக்கு எத்தனை சீட்? சீனாவின் குளோபல் டைம்ஸ் கணிப்பு..!

சீனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் குளோபல் டைம்ஸ் பா.ஜ.க.,வுக்கு எத்தனை சீட் கிடைக்கும் என்ற செய்தி வெளியிட்டுள்ளது.

Update: 2024-05-25 08:30 GMT

பிரதமர் மோடி (கோப்பு படம்)

இந்தியாவில் தற்போது நடந்து வரும் தேர்தலில் பா.ஜ.க., 430 இடங்களை பெறும். மோடி 3வது முறையாக பிரதமர் பதவியேற்பார் என சீனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் அரசியல் நிபுணர்கள், ‘இந்தியாவில் மிகவும் சுதந்திரமான தேர்தல் நடந்து வருகிறது. இதில் ஆளும் கட்சியான பா.ஜ.க., மீண்டும் அதிக இடங்களை பெற்று ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை உள்ள நிலையில், இந்திய தேர்தல்கள் குறித்து உலக நாடுகள் பலரும் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்த கருத்துக்கணிப்புகள் உலகளாவிய சமூக ஊடகங்கள் வழியாக இந்தியாவிற்குள் பரவி பகிரப்பட்டு வருகிறது. அப்படி இப்போது வெளியான ஒரு பதிவு சீனாவின் குளோபல் டைம்ஸ் வெளியிட்ட பதிவு தான் இது.

தி குளோபல் டைம்ஸ் கணிப்பு: மாநிலங்களில் NDA/BJP எத்தனை இடங்களில் வெற்றி பெறும்?

【01】உத்தரப்பிரதேசம்: 80 இடங்கள்

【02】மகாராஷ்டிரா: 43 இடங்கள்

【03】பீகார்: 40 இடங்கள்

【04】ஆந்திரப் பிரதேசம்: 20 இடங்கள்

【05】மேற்கு வங்கம்: 27 இடங்கள்

【06】தமிழ்நாடு: 05 இடங்கள்

【07】மத்தியப் பிரதேசம்: 29 இடங்கள்

【08】கர்நாடகா: 25 இடங்கள்

【09】குஜராத்: 26 இடங்கள்

【10】ராஜஸ்தான்: 24 இடங்கள்

【11】ஒடிசா: 15 இடங்கள்

【12】கேரளா: 2 இடங்கள்

【13】தெலுங்கானா: 12 இடங்கள்

【14】அஸ்ஸாம்: 13 இடங்கள்

【15】ஜார்கண்ட்: 13 இடங்கள்

【16】பஞ்சாப்: 3 இடங்கள்

【17】சத்தீஸ்கர்: 10 இடங்கள்

【18】ஹரியானா: 9 இடங்கள்

【19】டெல்லி: 7 இடங்கள்

【21】உத்தரகாண்ட்: 5 இடங்கள்

【22】ஹிமாச்சல பிரதேசம்: 4 இடங்கள்

【23】அருணாச்சல பிரதேசம்: 2 இடங்கள்

【24】கோவா: 2 இடங்கள்

【25】திரிபுரா: 2 இடங்கள்

【26】மணிப்பூர்: 2 இடங்கள்

【27】மேகாலயா: 2 இடங்கள்

【28】அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு: 1 இடம்.

【29】சண்டிகர்: 1 இடம்

【30】லடாக்: 1 இடம்

【31】தாத்ரா மற்றும் நகர் ஹவேலி: 2 இடங்கள்

【32】நாகாலாந்து: 1 இடங்கள் உட்பட மொத்தம் 430 இடங்களை பிடிக்கும். எதிர்க்கட்சிகளுக்கு இந்த தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News