இந்தியாவின் வலுவான பதிலடியால் கதறும் கனடா

கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி விவகாரம் பெரிய தகவல்களை வெளிக் கொண்டு வருகின்றது.;

Update: 2023-09-21 10:45 GMT

பைல் படம்

கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி விவகாரம் பெரிய தகவல்களை வெளிக் கொண்டு வருகின்றது. கனடா நாட்டின் தரப்பில் வெளியிடப்படும் ஆதாரங்கள் இந்திய உளவுத்துறையின் பெருமையினை பறைசாற்றும் வகையில் தான் உள்ளன.

உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரத்தை நாம் ஒருவித பெருமித புன்னகையோடு கடந்து செல்ல வேண்டும். இந்திய உளவுதுறை எப்படியெல்லாம் சாதிக்கின்றது என்பதோடும், உலக உளவு விளையாட்டில் இதெல்லாம் சாதாரணம். இந்தியா அதிலும் புகுந்து விளையாடுகின்றது என்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்

அறம், சமத்துவம், சமூக நீதியெல்லாம் அரசியலில் இருக்க முடியாது, அதுவும் உலக அரசியலில் சுத்தமாக இருக்கமுடியாது, அறத்துக்கு அப்பாற்பட்டது அரசியல்.

கனடா வெளியிட்டுள்ள அறிக்கைபடி கனடாவில் இருந்து வெளியேற்றபட்ட இந்திய தூதரக அதிகாரி பவன் குமார் ராய் என்பவர் தான் இப்போது உலகில் அதிகம் பார்க்கபடும் நபர்

இவர் பஞ்சாபை சேர்ந்தவர் 1997ம் ஆண்டில் ஐபிஎஸ் பதவிக்கு வந்திருக்கின்றார். முதலில் அவ்வளவு பெரும் வாய்ப்பு இல்லை என்றாலு மோடி வந்த பின் இவரின் தனித்துவம் தெரிந்திருக்கின்றது. பஞ்சாபின் பல இடங்களில் அதிகார பூர்வமாகவும் மாறுவேடங்களிலும் பணியாற்றி காலிஸ்தான் இயக்க தொடர்பெல்லாம் துல்லியமாக திரட்டியிருக்கின்றார்.

பல சிக்கலான நேரங்களில் இந்திய உளவுதுறை ரா அமைப்பின் தலைவரின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டிருகின்றார். 2018ல் கனடாவின் இந்திய தூதரக அதிகாரியாக சென்றிருக்கின்றார். அவர்தான் இப்போது காலிஸ்தான் இயக்க தலைவர் கொலையில் மறைமுகமாக குற்றம்சாட்டபட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருகின்றார்.

இப்படியான பெரும் காவல் மற்றும் உளவுப் பணியின் பின்னணியில் ரா அமைப்பில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி பவன்குமார் ராய்தான் இப்போது உலக அளவில் பெரும் கவனம் பெறுகின்றார்

ஒவ்வொரு நாட்டு தூதரகங்களும் ஒழுங்காக விசா போக்குவரத்தை மட்டும்தான் செய்கின்றன என்பதெல்லாம் பொய். நிஜமான உலகம் அப்படி அல்ல. தூதரகம் என்பது சம்பந்தப்பட்ட நாடு தலையிடமுடியாத இடம் என்பதால் தூதரக விவகாரங்கள் எல்லா நாட்டிலுமே கொஞ்சம் மர்மமானவை, அங்கே பல காரியங்கள் அவரவர் நாட்டுக்காக நடக்கும்.

அப்படி கனடா நாட்டு இந்திய தூதரகம் தன் நாட்டு காவலை செய்திருக்கின்றது. இப்பொதும் ராஜதந்திர நடைமுறையால் தூதரக அதிகாரியினை கனடாவால் கைது செய்ய முடியவில்லை. மாறாக நாடு கடத்துகின்றார்கள். இந்தியாவும் அதே பாணியில் பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவிற்கான கனடா நாட்டின் துாதரை நான்கு நிமிடங்கள் மட்டுமே பேசி, 5 நாள் அவகாசம் கொடுத்து நாட்டை விட்டு வெளியேற சொல்லியிருக்கிறார்கள்.

இந்தியாவிற்கு எதிராக தனி நாடு கேட்டு போராடும் ஒரு நபருக்கு கனடா நாடு ஆதரவு கொடுத்து, பல்வேறு உதவிகளும் செய்யுமாம். அதனை இந்திய உளவுத்துறை வேடிக்கை பார்க்கனுமாம். இந்தியா கொடுத்த அடியில், கனடா ஒட்டு மொத்தமாக உறைந்து போய் உள்ளது. காலம் கடந்த நிலையில், இப்போது இந்தியாவுடன் உறவு வேண்டும் என கனடா நாட்டின் பிரதமர் கதறுகிறார். அப்படியானால் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதத்தை கனடா ஆதரிக்காமல் இருந்திருந்தால், இந்த சிக்கலே வந்திருக்காதே.

இப்போது இந்தியாவின் இளம் சிங்கம் பவன்குமார் ராய் இந்தியா திரும்புகின்றார், அவர் தன் இலக்கினை சரியாக அடைந்துவிட்டே திரும்புகின்றார், இந்திய உளவுதுறைக்கு கிடைத்த வெற்றி இது.நிச்சயம் ஒரு பவன்குமார் ராய் சென்று தனிநபராக இதனை செய்திருக்க முடியாது. இந்த விவகாரத்தில் பெரும் வலைபின்னல் உண்டு. ஏகப்பட்ட பவன்குமார்கள் இதில் பணிபுரிந்துள்ளனர்.

ஆக எவ்வளவு வலுவான உளவு அமைப்பினை இஸ்ரேலிய மொசாத் , அமெரிக்க சி.ஐ.ஏ போல இந்தியாவின் மோடி அரசு அஜித்தோவால் தலைமையில் வைத்திருக்கின்றது என்பது நாட்டுக்கு மிக பாதுகாப்பான நல்ல செய்தி.

முன்பெல்லாம் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட காலிஸ்தான் கும்பலை, ஏர் இந்தியா குண்டுவெடிப்பில் 250 பேரை கொன்ற குற்றவாளிகள் கனடாவில் உல்லாசமாக திரியும் போதெல்லாம் தேசம் திகைத்தது, ஒன்றும் செய்ய முடியவில்லை, கெஞ்சி கேட்பதோடு காங்கிரஸ் அரசு நின்றுவிடும்..மோடி அரசுதான் செய்ய வேண்டியதை செய்கின்றது, அடித்த அடியில் அடங்கி கிடக்கின்றது காலிஸ்தான் கும்பல்.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுதான்.இந்த ஐபிஎஸ் அலுவலர்களெல்லாம் இப்படி பல தேசங்களில் பல இடங்களில் நாட்டின் எதிராளிகளை தூக்கும் நடவடிக்கையில் இருக்கலாம். அவர்களுக்கு நிச்சயம் பெரும் வலைபின்னலும் பெரும் தகவல்தொடர்பும் நினைத்தே பார்க்கமுடியா நவீன காவலும் பெரும் பலமும் ரகசியமாக இருக்கலாம்.

இவர்கள் இந்தியாவுக்கு வெளியே மட்டுமல்ல இந்தியாவுக்கு உள்ளேயும் இருக்கலாம், பல வேடங்களில் வரலாம் எல்லா துறையிலும் இருக்கலாம், அரசியலிலும் இருக்கலாம்.ஆனால் எங்கே இருந்தாலும் தேசவிரோத கும்பலை சரியாக வளைத்து பிடிப்பார்கள், அழகாக தூக்குவார்கள், கோழி அமுக்குவது போல் அமுக்கி சாக்குபையில் போட்டு அனுப்பிவைத்துவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் இருப்பார்கள்.

ஆக கனடாவில் மட்டுமல்ல இந்தியாவின் பல பாகங்களிலும் பல வழிகளில் இந்த நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்பது ரகசியமல்ல.காலிஸ்தான் கும்பலை கனடாவிலே தூக்கும் போது இந்தியாவுக்குள் அதன் எதிரிகள் என்னவடிவில் இருந்தாலும் தூக்கமுடியாதா என்ன?இங்கும் பல விஷயங்கள் நடக்கத்தான் செய்கின்றது , இன்னும் நடக்கும்.

Tags:    

Similar News