பிரிக்ஸ் மாநாட்டுக்கு முன்பே சாதித்து காட்டிய இந்தியா...!
ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் முன்பே இந்தியா பல விஷயங்களை சாதித்துள்ளது.;
ரஷ்யாவில் நடந்து வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பாரத பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அங்கே சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் வருகின்றார், இருவரும் சந்தித்து பேச உள்ளனர்.
இந்த இடத்தில் இந்தியா மிக அழகான ராஜதந்திரத்தை செய்கின்றது, இந்த மாநாடு ரஷ்யாவுக்கு மிக முக்கியம் இன்னும் நாங்கள் தனிமைப்படவில்லை, எங்கள் போரை சில நாடுகள் ஆதரிக்கவில்லையே தவிர எங்களுக்கும் நண்பர்கள் உண்டு என காட்டும் கட்டாயம் ரஷ்யாவுக்கு உண்டு.
அங்கே இந்தியா கட்டாயம் செல்லவேண்டும். இந்த இடத்தில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லையில் உள்ள பிரச்சினை தீர வேண்டும். ரஷ்யா அதற்கு உதவினால் தான் இந்தியா மாநாட்டுக்கு வரும் என்பது போல் இந்தியா வாதிட்டது.
ஒருவன் இக்கட்டில் இருக்கும்போது சில காரியங்களை சாதிக்க வேண்டும் என்பது ராஜநீதி. இந்த போரில் ரஷ்யாவுக்கு நேரடியாக உதவமுடியாத சீனா மறைமுகமாக உதவும் கட்டாயத்தில் உள்ளதால் இறங்கி வந்திருக்கின்றது. அதன்படி இந்திய சீன எல்லையில் இனி பதற்றம் குறையும் இரு நாட்டு வீரர்களும் விலகி நிற்பார்கள். அப்படியே இதுவரை தனித்தனியாக ரோந்து வந்த இரு நாட்டு ராணுவமும் இனி கூட்டாக வரும். அதாவது அங்கீகரிக்கப்பட்ட எல்லை நோக்கி இந்தியா நகர்கின்றது. எனவே இந்திய- சீன எல்லை விவகாரம் ஒரு முடிவினை எட்டுகின்றது.
சீனாவுக்கும் வேறு வழியில்லை. ஆசியான் நாடுகளில் இந்தியாவின் தலையீடும் இன்னும் பல சிக்கலும் எங்காவது ஒரு இடத்தில் விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு சீனாவை தள்ளி விட்டது. இப்படி மாநாடு தொடங்கும் முன்பே சாதித்து விட்டுத் தான் மோடி ரஷ்யா புறப்படுகின்றார், இனி அங்கே அவர் புட்டீன் ஜின்பெங் போன்றோரை சந்தித்து பேசுவார்.
உக்ரைன் போர் உச்சமடையும் நேரம். ஈரானை இஸ்ரேல் அமெரிக்கா தாக்கலாம் எனும் பெரும் பரபரப்பு நிலவும் நேரம், வடகொரியாவினை ரஷ்யாவுக்குள் புட்டீன் இழுத்தால் நேட்டோ ரஷ்யாவில் பாயலாம் எனும் அச்சம் எழுந்திருக்கும் நேரம்.
இந்தியாவின் நகர்வு நிதானமாக அழகாக தெரிகின்றது. இந்தியா எந்த போரிலும் கலந்து கொள்ள விரும்பவில்லை, சீனாவும் அந்த நிலைபாட்டிலே இருக்கின்றது, இரண்டும் அதிக மக்கள் தொகை கொண்ட வளரும் தேசங்கள், இரண்டுக்கும் பொறுப்பும் கடப்பாடும் அதிகம். இதனால் இரு தேசங்களும் எந்த போரையும் விரும்பவில்லை. போர் என வந்தால் இந்தியாவுக்கு ஒரே பெரிய எதிரி சீனா தான். பாகிஸ்தானெல்லாம் முறைத்தாலே அடங்கி விடும். இதனால் இந்தியா பரபரப்பான உலக நிலவரங்களிடையே தன்னையும் தன் எதிர்காலத்தையும் காத்தபடி எந்த சிக்கலிலும் சிக்காமல் சாதுர்யமாக நகர்கின்றது.
நிச்சயம் சீனா உலகின் பிரதான இடம் வகிக்கும் நாடு. அதன் பலம் கடந்த 70 ஆண்டில் அவ்வளவு வளர்ந்திருக்கின்றது. இந்தியா கடந்த 10 ஆண்டில் அந்த இடத்தை எட்டி பிடித்திருக்கின்றது. மோடி பிரிக்ஸ் மாநாட்டில் வெற்றிகரமாக உரையாற்றி பாரத நலன்களை காத்து வளர்க்க தேசம் வாழ்த்துகின்றது.
இது வெறும் மாநாடோ ரஷ்ய நலனோ அல்ல. சுமார் 10 முன்னாள் சோவியத் நாடுகளில் உள்ள தொழில்வளம் உள்ளிட்ட பல வளங்களை இந்தியா கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் நகர்வு அதுதான். நன்றாக கவனியுங்கள், பாரதம் பெற்றிருக்கும் பெரும் பலம் புரியும். ஜின்பெங்கும் மோடியும் தைரியமாக ரஷ்யா செல்ல முடிகின்றது. உலகம் எங்களை என்ன செய்துவிட முடியும் என சொல்லி செல்லமுடிகின்றது.
அது எல்லா தேசத்தாலும் முடியாது. இதோ இங்கே வரவேண்டிய பிரேசில் அதிபர் திடீரென மெடிக்கல் லீவில் வீட்டில் படுத்துக் கொண்டார் அவர்கள் நிலை அப்படி.