இந்து மக்களை நாங்கள் தாக்கவில்லை..! டாக்கா மக்கள் சொல்றாங்க..! தாக்கியது யார்?
வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்திற்கு பிறகு தற்போது நிலைமை அங்கு சீரடைந்து வருகிறது. அங்குள்ள இஸ்லாமிய மக்கள் இந்துக்களை நாங்கள் தாக்கவில்லை என்று கூறியுள்ளனர்.;
Bangladesh Hindu People Were Not Attacked By Muslims
பிரதம மந்திரி ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டே வெளியேறிவிட்டார். அவரது வெளியேற்றத்துக்கு முன்னர் வங்காளதேசில் பல வாரங்களாக நடந்த கொடிய போராட்டங்களைத் தொடர்ந்து தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது.
Bangladesh Hindu People Were Not Attacked By Muslims
இந்த காலகட்டத்தில் சிறுபான்மையாக இருக்கும் பல இந்துக்கள் தாக்கப்பட்டனர். கோவில்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்துக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன என்று பல செய்திகள் வெளிவந்தன. ஆனால் டாக்காவில் உள்ள உள்ளூர் மக்கள் இந்துக்கள் மீதும் கோவில்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சூறையாடலை ஏற்கவில்லை. இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஆஜ் தக்கிடம் பேசிய மக்கள், இஸ்லாமியக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி, வங்காளதேசத்தில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ விரும்புவதாகவும், வங்காள அடையாளத்தை கெடுக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினார்கள்.
"கடந்த சில நாட்களில் நடந்ததெல்லாம் நல்லதல்ல. இந்துக்கள் மற்றும் கோவில்களைத் தாக்கியவர்கள் எங்கள் மக்கள் அல்ல. ஜமாத் இஸ்லாமிய ஆட்சியை விரும்புகிறது. ஆனால் வங்காள மொழி பேசும் வங்காளதேசத்தின் அடையாளம் மாறாது" என்று உள்ளூர்வாசி ஒருவர் கூறினார்.
Bangladesh Hindu People Were Not Attacked By Muslims
"நாங்கள் இஸ்லாத்தை நம்புகிறோம். அது முன்னணியில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் இங்கே, இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்கள். அனைவரும் ஒன்றாக வாழ்வார்கள்" என்று உள்ளூர்வாசிகள் கூறினார்கள்.
மற்றொரு உள்ளூர்வாசி, சர்ச்சைக்குரிய வேலை ஒதுக்கீட்டு முறைக்காகத் தொடங்கிய மாணவர்களின் போராட்டங்களை ஷேக் ஹசீனா கையாண்ட விதம் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாகக் கூறினார். ஆனால் பின்னர் அது அரசாங்கத்திற்கு எதிரான இயக்கமாக மாறியது.
"ஷேக் ஹசீனா ஒரு தவறான செயலைச் செய்தார். அவர் மாணவர்களின் கருத்துக்களை கேட்டிருக்கவேண்டும். அவர்களுடன் பேசி இருக்கவேண்டும். அவரும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்தானே. பேச்சுவார்த்தை தேவை, அடக்குமுறை அல்ல," என்று அவர் கூறினார்.
மாணவர்களின் போராட்டங்களுக்கு மத்தியில், ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு, அண்டை நாடான இந்தியாவுக்குத் தப்பியோடி, அங்கு அவர் தற்போது தங்கியிருக்கிறார். ஆகஸ்ட் 5ஆம் தேதி வன்முறை வெடித்தது. வன்முறையின் போது, இந்துக்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன, சூறையாடப்பட்டன மற்றும் தீவைக்கப்பட்டன.
Bangladesh Hindu People Were Not Attacked By Muslims
இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸிடம், நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மை சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (8ம் தேதி) அன்று கேட்டுக் கொண்டார்.
சனிக்கிழமையன்று, (10ம் தேதி)ஆயிரக்கணக்கான இந்துக்கள் டாக்கா மற்றும் சட்டோகிராமில் தங்கள் கோயில்கள், வீடுகள் மற்றும் வணிகங்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்குப் பிறகு பாதுகாப்பு மற்றும் நீதியைக் கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
யூனுஸ் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களைக் கண்டித்து, "கொடூரமானவை" என்று முத்திரை குத்தினார், மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுப்பது முதன்மையானது என்று அதற்கு முன்னுரிமை அளித்து செயல்படுவோம் என்று மீண்டும் வலியுறுத்தினார்.
Bangladesh Hindu People Were Not Attacked By Muslims
ஏற்படும் சந்தேகங்கள் :
ஷேக் ஹசீனா இந்திய ஆதரவு தலைவராக இருந்ததால் ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் சீன நாட்டின் தூண்டுதல் இருக்கலாம் என பலருக்கும் சந்தேகம் இருந்து வருகிறது. டாக்காவில் உள்ள முஸ்லீம் மக்கள் இந்துக்களை நாங்கள் தாக்கவில்லை என்று கூறி இருப்பதை பார்க்கும்போது திட்டமிட்டே சில விஷமிகள் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது.