பங்காளதேஷில் இந்திய விசா மையங்கள் காலவரையின்றி மூடல்..!
நாட்டின் நிலையற்ற சூழ்நிலையை காரணம் காட்டி இந்திய விசா மையங்கள் காலவரையின்றி மூடப்பட்டன. இன்று மாலை புதிய அரசு பொறுப்பேற்கிறது.
Bangladesh Crisis in Tamil
பங்களாதேஷ் இன்று புதிய, இடைக்கால அரசாங்கத்தைப் பெற உள்ள நிலையில், இந்திய விசா விண்ணப்ப மையம் நாட்டில் உள்ள அதன் அலுவலகங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுளளது.
பல வாரங்களாக கொந்தளிப்பான மாணவர் போராட்டங்களுக்குப் பிறகு, பிரதமர் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். வங்கதேசத்தில் இன்று (8ம் தேதி ) அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முஹம்மது யூனுஸ் தலைமையிலான புதிய இடைக்கால அரசாங்கம் அமைய உள்ளது. புதிய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி முகமது சஹாபுதீன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
Bangladesh Crisis in Tamil
இன்று இரவு 8 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என ராணுவ தளபதி ஜெனரல் வாக்கர் உஸ் ஜமான் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். டாக்கா ட்ரிப்யூனின் கூற்றுப்படி, டாக்டர் யூனுஸ் மதியம் 2:10 மணியளவில் பங்களாதேஷுக்கு வருவார் என்றும் பதவிப் பிராமண நிகழ்ச்சியில் பங்கேற்க 400 பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜமான் கூறினார்.
டாக்டர் யூனுஸ் பாரிஸில் இருக்கிறார்,.அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடைக்கால அரசாங்கத்தின் அளவு குறித்து ஜமான் கூறும்போது , “இது ஆரம்பத்தில் சுமார் 15 உறுப்பினர்களைக் கொண்டிருக்கலாம் என்று நான் நம்புகிறேன். இருப்பினும், மேலும் ஒன்று அல்லது இரண்டு நபர்கள் சேர்க்கப்படலாம்.
ஷேக் ஹசீனா வங்கதேசத்திலிருந்து தப்பிச் சென்ற சம்பவம் இந்தியாவின் அண்டை நாடுகளில் அரசியல் அமைதியின்மையை உருவாக்கி உள்ளது. அராஜகம் வங்கதேசத்தில் மட்டும் அல்ல; கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவின் அண்டை நாடுகளில் தங்கள் அரசியல் எழுச்சிகளை சந்தித்துள்ளன.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை மற்றும் மாலத்தீவுகளில் அதிகார வெற்றிடங்கள், அரசியல் எழுச்சிகள் அல்லது பெரிய அளவிலான எதிர்ப்புகளின் பின்னணியில் வியத்தகு ஆட்சி மாற்றங்களை நாம் காணநேர்ந்துள்ளது.
இதனால் இன்று அண்டை நாடான வங்கதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதால் இந்திய எல்லைப் பாதுகாப்பு அமைப்புகள் உஷார் நிலையில் உள்ளன.