ஐ.நா-வில் பிரதமர் மோடியின் ஆதரவை கேட்கும் நாடுகடத்தப்பட்ட பலுசிஸ்தான் பிரதமர்..!

நாடுகடத்தப்பட்ட பலுசிஸ்தான் பிரதமர், பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற ஐ.நா.வில் இந்திய பிரதமர் மோடியின் ஆதரவை கோரியுள்ளார்.

Update: 2023-07-30 07:22 GMT

பலுசிஸ்தானில் இருந்து நாடுகடத்தப்பட்ட பிரதமர் நய்லா குவாத்ரி(கோப்பு படம்) 

பாகிஸ்தானின் "சட்டவிரோத" ஆக்கிரமிப்பிலிருந்து பலுசிஸ்தானை விடுவிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் ஆதரவு வழங்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் பலுசிஸ்தானில் இருந்து நாடுகடத்தப்பட்ட பிரதமர் நய்லா குவாத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த தருணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஐநாவில் பலுசிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியையும் பாஜக அரசையும் குவாத்ரி கேட்டுக் கொண்டார்.

"பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக அரசாங்கத்திற்கு ஐ.நா.வில் பலுசிஸ்தானுக்கு ஆதரவாக நிற்பதற்கு இன்று ஒரு வாய்ப்பு உள்ளது. அது நாளை கிடைக்காமல் போகலாம்" என்று குவாத்ரி 28ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கூறியதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குவாத்ரி பலுசிஸ்தானின் சுதந்திரத்திற்கான ஆதரவைப் பெறுவதற்காக உலகப் பயணத்தில் இருக்கிறார். பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்து பலுசிஸ்தானின் விடுதலைக்காக சர்வதேச ஆதரவை பெறுவதற்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்று முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார்.

உத்தரகாண்டில் உள்ள கங்கையில் பலுசிஸ்தான் விடுதலை பெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்த பின்னர் குவாத்ரி இந்தியாவின் ஆதரவை கோரியுள்ளார்.

பலுசிஸ்தான் மீதான சுரண்டல்

ஒரு காலத்தில் சுதந்திர நாடாக இருந்த பலுசிஸ்தான் தற்போது பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது என்பதை குவாத்ரி எடுத்துரைத்தார்.

பலுசிஸ்தானின் வளமான கனிம வளங்களை சுரண்டுவது குறித்தும் அந்நாட்டு மக்கள் மீது இழைக்கப்படும் பல கொடுமைகள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

பலூச் சிறுமிகள் பலாத்காரத்திற்கு ஆளாகும் அவல நிலையைச் சுட்டிக் காட்டி கவலை வெளியிட்ட குவாத்ரி, பலூச் மக்களை மேலும் ஒடுக்குவதற்கு சீனாவுடன் பாகிஸ்தான் கூட்டுச் சேர்ந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

"பாகிஸ்தான் அதை தனியாக செய்யவில்லை. பலூச் மக்கள் மீது அட்டூழியங்களைச் செய்ய சீனாவிலும் அதற்கான கயிறு கட்டப்பட்டுள்ளதுயுள்ளது" என்று குவாத்ரி கூறினார்.

"ஒரு காலத்தில் சுதந்திர நாடாக இருந்த பலுசிஸ்தான், பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. அதன் கனிம வளங்களை கொள்ளையடிப்பதுடன், அதன் மக்களை அனைத்து வகையான கொடுமைகளுக்கும் ஆளாக்கி வருகிறது. பலூச் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். வீடுகள் மற்றும் தோட்டங்களுக்கு தீ வைக்கப்படுகின்றன" என்று அவர் சொன்னார்.

ஐ.நா.வில் பலுசிஸ்தானின் கோரிக்கைக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்குமானால், பலுசிஸ்தான் சுதந்திரம் அடையும் போது, இந்தியாவை ஆதரிப்பதன் மூலம், அவரது அரசு நிச்சயம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் என்று குவாத்ரி கூறினார்.

குவாத்ரி, இந்தியா மற்றும் பலுசிஸ்தானின் பகிரப்பட்ட அனுபவங்களை எடுத்துக்காட்டி, இரு பகுதிகளும் மதத்தின் பெயரால் அடக்குமுறையை எவ்வாறு சகித்துக் கொண்டிருக்கின்றன என்பதை வலியுறுத்தினார்.

Tags:    

Similar News