பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு : 8 பேர் உயிரிழப்பு..!
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள அரசியல் கட்சி அலுவலகத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
Pakistan Elections,Pakistan polls,Balochistan,Balochistan Blast
பாகிஸ்தான் பொதுத் தேர்தல் நாளை நடக்கவுள்ள நிலையில் இன்று பலுசிஸ்தானில் உள்ள அரசியல் கட்சி அலுவலகத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Balochistan Blast
"பிஷின் மாவட்டத்தின் நோகண்டி பகுதியின் வேட்பாளரின் அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நடந்தது, எட்டு பேர் கொல்லப்பட்டனர்" என்று பிஷின் துணை ஆணையர் ஜும்மா தாத் கான் ராய்ட்டர்ஸ் மேற்கோள் காட்டினார்.
இதுகுறித்த விரிவான தகவல்கள் இன்னும் வெளியாக உள்ளன.