4 வயது சிறுவனுக்கு பறவைக்காய்ச்சல் : முதல் மனித பாதிப்பு - சீனா அறிவிப்பு
சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் நேற்று 4 வயது சிறுவனுக்கு H3N8 வகை பறவைக் காய்ச்சலின் அறிகுறி இருப்பதை உறுதிப்படுத்தியது.
H3N8 பறவைக் காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ், 4 வயது சிறுவனுக்கு பாதித்திருப்பதை சீனா கண்டறிந்துள்ளது. இதுவே மனிதர்களை தாக்கிய முதல் பாதிப்பு ஆகும். சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் நேற்று 4 வயது சிறுவனுக்கு H3N8 வகை பறவைக் காய்ச்சலின் அறிகுறி இருப்பதை உறுதிப்படுத்தியது.
ஆனாலும்,பறவைக் காய்ச்சலின் H3N8 வைரஸ் தாக்குதல் மக்கள் மத்தியில் பரவும் அபாயம் குறைவாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். H3N8 வைரஸ் வட அமெரிக்க நீர்ப்பறவைகளில் முதன்முதலில் தோன்றியது. பின்னர் 2002 ஆம் ஆண்டு முதல் அவை பரவி வருகின்றன. இது குதிரைகள், நாய்கள் மற்றும் சீல்களை பாதிக்கிறது என்று கண்டறியப்பட்டது. ஆனால் இதற்கு முன்பு மனிதர்களை பாதித்ததாக கண்டறியப்படவில்லை.
மத்திய ஹெனான் மாகாணத்தில் வசித்து வரும் நான்கு வயது சிறுவன் காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகளுடன் இந்த மாத தொடக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். பின்னர் சோதனையில் அந்த சிறுவனுக்கு . H3N8 வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கூறியுள்ளது.