இந்தியாவிற்கு இது முக்கியமான நேரம்

ஒரு வகையில் அமெரிக்கா இந்தியாவுக்கு தன் பெரிய சந்தை கதவை திறந்து விட்டிருகின்றது.;

Update: 2023-06-28 10:00 GMT

அமெரிக்காவில் பிரதமர் மோடி.

அமெரிக்கா இந்தியாவுக்கு தன் பெரிய சந்தை கதவை திறந்து விட்டிருகின்றது. மோடி அதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கின்றார். மோடி இந்தியாவுக்கு 26 பில்லியன் முதலீட்டை கொண்டு வந்திருக்கின்றார். அதாவது இந்திய பணத்தில் இது கோடான கோடி பணம். இந்திய மதிப்பில் 21,30,89,20,36,000.00 ரூபாய். பெரும் முதலீடு. இருபத்தோறு லட்சம் கோடிக்கும் மேலான பணம். இதனை அமெரிக்காவின் கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்கின்றன. இதனால் உலகின் இரண்டாம் கலிபோர்னியாவாக இந்தியா மாறும்.

மிகப் பெரிய அளவில் இந்திய தொழில் நுட்பத் துறை பெருகும். அதனில் செயற்கை நுண்ணறிவு சேரும் போது நினைத்து பார்க்க முடியாத பெரும் வேலை வாய்ப்பு பெருகும். இந்த 26 பில்லியன் போகத்தான் அந்த எலன் மாஸ்க் முதலீடு உண்டு. அந்த விமான என்சின் கணக்கு, இஸ்ரோ நாசா இணைந்து செயல்படுவது தனி கணக்கு.

மோடி செய்திருக்கும் காரியம் மாபெரும் சாதனை, இதுவரை இந்தியா நினைத்தே பார்த்திரா பெரும் சாதனை. மோடி என்ற தலைவனின் இந்தியாவினை நம்பி எத்தனை லட்சம் கோடியும் கொட்டலாம். அங்கே ஊழல் இல்லை. சிக்கல் இல்லை. உழைப்புக்கும் வேலைக்கும் உத்திரவாதம் என உலகம் நம்பி கொட்டும் பணம் இது.

ஆனால் இதன் பலன் தெரிய 2030 ஆண்டு வரை ஆகும். 2030ல் உலகின் இரண்டாம் பெரிய பொருளாதாரத்தை இந்தியா பெற்றிருக்கும். இங்கே இருக்கும் பெரிய சவால் 2024ல் மோடி மீண்டும் வரவேண்டும். அது சாத்தியம் எனினும், எதிர் கட்சிகளும், இந்திய எதிரிகளும், அமெரிக்க எதிரிகளும் பல வகையில் குலைக்க முயல்வார்கள்.

குறிப்பாக சீனாவும், பாகிஸ்தானும் இனி ரஷ்யாவும் இதை குழப்பி அடிக்க முயலும். இனவாதம், மதவாதம், மொழிவாதம் என பலவகையான பக்கவாதங்களை உருவாக்கி இந்தியா உருப்படாமலே போக வழி செய்வார்கள். பெரும் குழப்பங்களை விதைக்க பார்ப்பார்கள். இந்தியா மிகப் பெரிய மாற்றம் அடையும் நேரம் இது தான், அதே நேரம் மிகப் பெரிய எதிர்ப்பை உள் நாட்டில் கடக்க போகும் நேரமும் இதுவே தான்.

வாழ்வு மிகப்பெரிய வடிவில் தேசத்துக்கு வருகின்றது. ஆனால் இந்தியா வாழக் கூடாது என விரும்பும் சக்திகள் சில இடைஞ்சலை நிச்சயம் கொடுக்கும். அதை தாண்டி மோடி இத்தனை சாதனைகளையும் செய்து, இதற்கான பலன்களையும் கொண்டு வர வேண்டும்.இங்கே களத்தில் செய்யவும், தேசத்தின் நிலையினை மக்களுக்கு சொல்லவும் ஆயிரமாயிரம் விஷயம் உண்டு. தேசம் கடந்து கொண்டிருக்கும் மிக முக்கியமான நேரம் பற்றி மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமை கொண்ட நேரம் இது

Tags:    

Similar News